பாராளுமன்றத் தேர்தல் 2024: தகுதியான வேட்பாளர்களை உடன் இனங்காண வேண்டும்

முஸ்லிம்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமென அழைப்பு

0 53

(எப்.அய்னா)
பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அடுத்து வரும் இரு வாரங்­க­ளுக்குள் வேட்­பா­ளர்­களை தேர்வு செய்ய வேண்­டிய கட்­டாயம் காணப்­படும் நிலையில், அது தொடர்பில் முஸ்லிம் சமூகம் சிந்­தித்து செயற்­பட வேண்டும்.
இது தொடர்பில் சமூ­கத்தின் சிவில் சமூக பிர­தி­நி­திகள், அர­சியல் தலை­மைகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து, பொருத்­த­மான புதிய இளம் துடிப்­புள்ள வேட்­பா­ளர்­களை அடை­யாளம் கண்டு தேர்­தலில் களம் இறக்க பொறி­முறை ஒன்­றினை முன்­னெ­டுக்க வேண்டும் என சமூக ஆர்­வ­லர்கள் கோரிக்கை விடுக்­கின்­ற‌னர்.

பள்­ளி­வா­சல்கள், சமூக பிர­தி­நி­திகள், புத்­தி­ஜீ­விகள் இணைந்து தத்­த­மது பிர­தே­சத்­துக்கு பொருத்­த­மான, சமூக சிந்­த­னை­யுடன் கூடிய இளம் துடிப்­புள்ள நேர்­மை­யா­ன­வர்­களை இனம் காண வேண்டும் என இந்த விடயம் தொடர்பில் விடி­வெள்­ளி­யிடம் பேசிய, சிரேஷ்ட இரா­ஜ­தந்­தி­ரியும் சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம். சுஹைர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றை கலைப்­ப­தற்கு, 2024.09.24 ஆம் திக­தி­யி­டப்­பட்ட 2403/13 ஆம் இலக்க வர்த்­த­மான அறி­வித்தல் ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவின் உத்­த­ரவில் ஜனா­தி­பதி செயலர் கலா­நிதி என்.எஸ்.குமா­நா­யக கையொப்­ப­மி­டப்­பட்டு, வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பின் 70 ஆவது உறுப்­பு­ரைக்கு அமைய ஜனா­தி­ப­திக்கு அளிக்­கப்­பட்­டுள்ள அதி­காரம் 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாரா­ளு­மன்ற தேர்­தல்கள் சட்­டத்தின் 10 ஆவது அத்­தி­யாய விதி­வி­தா­னங்­க­ளுக்கு அமைய பாரா­ளு­மன்றம் கலைக்கும் தீர்­மானம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதற்­க­மைய நவம்பர் 14 ஆம் திகதி பாரா­ளு­மன்ற தேர்தல் நடத்­தப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்றம் தேர்­த­லுக்­காக ஒக்­டோபர் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வேட்­பு­மனு தாக்கல் இடம்­பெறும். நவம்பர் 21 இல் புதிய பாரா­ளு­மன்றம் கூட­வுள்­ளது.

இந் நிலை­யி­லேயே நாட்டின் தற்­போ­தைய சூழலில் முஸ்லிம் சமூகம், பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யிட தெரிவு செய்யும் வேட்­பா­ளர்கள் தொடர்பில் தடு­மாற்­ற­மான நிலை­மையை எதிர்­கொண்­டுள்­ளது. குறிப்­பாக ஜனா­தி­பதித் தேர்­தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்­டி­யிட்டு அநுர குமார திசா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றுள்ள நிலையில், அம்­மாற்­றத்­துடன் சேர்த்து முஸ்லிம் சமூ­கத்தில் புதிய அர­சியல் சக்­திக்­கான தேவை எழுந்­துள்­ளது.

இந் நிலையில் இது குறித்து விடி­வெள்­ளி­யிடம் பேசிய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் கருத்து தெரி­விக்­கையில்,

‘இலங்­கையை பொறுத்­த­வரை நாட­ளா­விய ரீதியில் முஸ்­லிம்கள் பரந்து வாழ்­கின்­றனர். கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மத்­திய பகு­திகள் போன்­ற­வற்றில் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக அவர்கள் திகழ்­கின்­றனர். அவ்­வா­றான நிலையில் கடந்த கால சம்­ப­வங்­களில் இருந்து கற்­றுக்­கொண்ட பாடங்­களை வைத்து நாம் மிகக் கவ­ன­மாக எமக்­கான மக்­கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்ய வேண்டும்.

தற்­போ­தைய அர­சியல் போக்கை அவ­தா­னிக்கும் போது ஊழல், மோச­டி­க­ளுக்கு எதி­ரான ஒரு நேர்­மை­யான போக்­கினை மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர் என்­பது தெளி­வா­கி­றது. இது நல்­லது.

ஜனா­தி­பதி கூட அவ­ரது பிர­சார கூட்டம் ஒன்றில், இம்­முறை பாரா­ளு­மன்றில் இருந்த 150 பேர் எதிர்­வரும் பாரா­ளு­மன்றில் இருக்க மாட்­டார்கள் என தெரி­வித்­தி­ருந்தார்.

எனவே நேர்­மை­யா­ன­வர்­களை பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்ப எமது சமூகம் பொறி­மு­றையை வகுக்க வேண்டும். கட்சி ரீதி­யிலோ, சுயேட்­சை­யா­கவோ அனை­வரும் ஒன்­றி­ணைந்து அது தொடர்பில் செயற்­பட வேண்டும். ஊர் மட்­டத்தில், கிராம மட்­டத்தில் சமூகம் சார் சிந்­தனை உள்ள, ஆர்வம் உள்ள சமூ­கத்­துக்­காக பேசக் கூடிய சற்று அனு­பவம் உள்ள இளம் தலை­வர்கள் கண்­ட­றி­யப்­படல் வேண்டும்.

வெறு­மனே பணம் மட்டும் வேட்­பா­ளர்­களை அடை­யாளம் காணும் கரு­வி­யாக இருக்க கூடாது. பணம் இல்லை எனினும், சிறந்த ஆளு­மைகள் கண்­ட­றி­யப்­பட்டால் அவர்­களை பண வசதி படைத்த சமூக சிந்­தனை உள்­ள­வர்கள் பாரா­ளு­மன்றம் அனுப்ப பின்­ன­ணியில் இருந்து செயற்­பட வேண்டும்.

ஒரு கட்­சியை குறிப்­பிட்டு அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என நான் சொல்ல வர­வில்லை. மாற்­ற­மாக எமது சமூ­கத்­துக்­கான பிர­தி­நி­தி­களை நாம் முதலில் அடை­யாளம் காண வேண்டும்.

எமது சமூகம் சார் மத்­ரஸா, பள்­ளி­வா­சல்­கள், மத கலா­சார உரி­மைகள் உள்­ளிட்ட சமூ­கத்தின் அத்­தனை அம்­சங்­க­ளையும் உரி­மை­க­ளையும் பாது­காக்கும் அரண்­களை நாம் கண்­ட­றிந்து, அவர்­களை பாரா­ளு­மன்றம் அனுப்ப வேண்டும். இதற்­காக அனைத்து முஸ்லிம் கட்­சிகள், சமூக அமைப்­புக்கள், ஊர் பள்­ளி­வா­சல்கள் இணைந்து காத்­தி­ர­மான நட­வ­டிக்கை எடுக்­கு­மாயின் சிறந்த பலனை எதிர்­பார்க்­கலாம்’ என்றார்.

இந்த விடயம் தொடர்பில் விடி­வெள்­ளி­யிடம் பேசிய முஸ்லிம் மீடியா போரம் தலை­வரும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான என்.எம். அமீன்,
‘முஸ்லிம் சமூ­க­மா­னது இம்­முறை வேட்­பா­ளர்­களை நிறுத்தும் போது எல்லா சமூ­கங்­க­ளையும் இணைத்து செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க வேண்டும். நெருக்­கடி நிலை­மை­களை கையாள‌க் கூடிய ஆளுமை மிக்க கடும் போக்கு அற்ற நியா­ய­மாக செயற்­படக் கூடி­ய­வர்­களை அடை­யாளம் காண வேண்டும். பண பலத்தை வைத்து மட்டும் வேட்­பா­ளர்­களை இனம் காணாது சமூக சிந்­த­னை­யுடன் செயற்­படக் கூடி­ய­வர்கள் அடையாளம் காணப்படல் வேண்டும். அவ்வாறு எவரேனும் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்கு ஒருவர் அனுப்பப்பட்டால் அவருக்கு சமூகம் சார் பணிகளை நிறைவேற்ற சமூகமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.’ என்றார்.

வேட்புமனுத் தாக்கலுக்கு குறுகிய கால அவகாசமே உள்ள நிலையில் நாட்டின் சகல பகுதிகளிலும் இதுபற்றிய விழிப்புணர்வு அவசரமாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தகுதிவாய்ந்தவர்கள் தேர்தலில் களமிறங்க முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.