பிரதான வேட்பாளர்களின் இறுதிதேர்தல் பிரசார கூட்டங்கள் கொழும்பில் ஏற்பாடு

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள்

0 68
  • கொஸ்கஸ் சந்தியில் ரணில்
  • பஞ்சிகாவத்தையில் சஜித்
  • நுகேகொடையில் அனுர
  • பிலியந்தலையில் நாமல்
  • கொட்டாவையில் திலித்

(இ.ஹஷான்)
பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளான ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ, சஜித் பிரே­ம­தாஸ, அனு­ர­கு­மார திஸா­நா­யக்க, நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்­டோரின் இறுதி பிரதான தேர்தல் பிர­சாரக் கூட்­டங்களை தலை­நகர் கொழும்பில் இன்­றை­ய­தினம் நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இத­னை­யிட்டு, இன்று கொழும்பு நகரின் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்டு, விசேட போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க
சுயேட்சை வேட்­பாளர் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தேர்தல் பிரச்­சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொஸ்கஸ் சந்­தியில் இன்று பிற்­பகல் 2 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.

இதனால் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஸ்டேஸ் வீதி,ஜோகஸ் வீதி, லெயார்ட்ஸ் ப்ரோட்வே வீதி, கிரான்ட்பாஸ் வீதி, பராக்­கி­ரம வீதி மற்றும் கொஸ்கஸ் சந்தி ஆகிய பகு­தி­களின் பொது போக்­கு­வ­ரத்­திற்கு விஷேட ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இதற்­க­மைய, அவி­சா­வெல்ல வீதி ஊடாக கொழும்­புக்குள் உள்­நு­ழையும் வாக­னங்கள் கிரான்ட்பாஸ் வீதியை பயன்­ப­டுத்­தாமல் மாற்று வீதி­களை பயன்­ப­டுத்­து­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

சஜித் பிரே­ம­தாச
ஐக்­கிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் பிரச்­சாரக் கூட்டம் மரு­தானை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பஞ்­சி­கா­வத்தை வீதி டவர் மண்­ட­பத்­துக்கு முன்­பாக இன்று பி.ப. 2 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.

மரு­தானை மற்றும் மாளி­கா­வத்தை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட சங்­க­ராஜ மாவத்தை, பிர­தீபா மாவத்தை, ஜயந்த வீர­சே­கர மாவத்தை, பஞ்­சி­கா­வத்தை வீதி ஆகிய பாதை­களில் பொது போக்­கு­வ­ரத்து நட­வ­டிக்­கைளில் நெரிசல் ஏற்­படும். ஆகவே மாற்று வீதி­களை பயன்­ப­டுத்­து­மாறு கேட்டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

அனு­ர­கு­மார திஸா­நா­யக்க
தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்­கவின் தேர்தல் பிரச்­சாரக் கூட்டம் மிரி­ஹான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நுகே­கொட ஆனந்த சம­ரகோன் மைதா­னத்தில் இன்று பி.பகல் 2 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.

இதனால் மிரி­ஹான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஸ்டேன்லி தில­க­ரத்ன மாவத்தை, நாவல வீதி, பாகொட வீதி, ஆகிய பகு­தி­களின் பொது போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­படும் அல்­லது நெரிசல் ஏற்­படும். ஆகவே மாற்று வீதி­களை பயன்­ப­டுத்­து­மாறு கேட்டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

நாமல் ராஜ­பக்ஷ
ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நாமல் ராஜ­ப­க்ஷவின் தேர்தல் பிரச்­சாரக் கூட்டம் பிலி­யந்­தல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட சோம­வீர சந்­தி­ர­சிறி மைதா­னத்தில் இன்று பி.ப 2 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.

திலித் ஜய­வீர,
சர்­வ­ஜன சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் திலித் ஜய­வீ­ரவின் இறுதி தேர்தல் பிரச்­சாரக் கூட்டம் இன்று பி.ப. 2 மணிக்கு கொட்­டாவ பிர­தான பேருந்து நிலை­யத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

நுவன் போபகே
மக்கள் போராட்டம் முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நுவன் போப­கேவின் தேர்தல் பிரச்­சாரக் கூட்டம் கிரி­பத்­கொட பகு­தியில் இன்று பி.ப.3 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.