ஆறு வருடங்களில் சாதனைகளால் சரித்திரம் படைத்த அஷ்ரப்

0 90

கலாபூஷணம் ஏ.ஸீ.ஏ.எம். புஹாரி (கபூரி)

கல்­முனைக் குடியைச் சேர்ந்த முஹம்­மது ஹுசைன் விதானை மற்றும் சம்­மாந்­து­றை­யைச் சேர்ந்த உமர்­லெவ்வை மரைக்கார் மதீனா உம்மா ஆகியோருக்கு 1948 ஒக்­டோபர் 23ஆம் திகதி சம்­மாந்­து­றையில் பிறந்த குழந்­தைக்கு முஹம்­மது அஷ்ரஃப் எனும் பெயர் சூட்டி மகிழ்ந்­தனர் பெற்றோர்.
அஷ்­ரஃபின் பள்­ளிப்­ப­ருவம் கல்­மு­னையில் ஆரம்­ப­மா­கி­யது. பின்னர் கொழும்பில் உயர் கல்­வி­யையும், தொழிற் கல்­வி­யையும் கற்றுத் தேர்ச்­சி­ய­டைந்து பிர­பல நாட­றிந்த சட்­டத்­த­ர­ணி­யா­கவும், அரச தரப்பு வக்­கீ­லா­கவும் அறி­மு­க­மானார்.

இளமைப் பரு­வத்­தி­லேயே சமூக சேவை­க­ளிலும், அர­சி­ய­லிலும் ஆர்­வ­முடன் ஈடு­படத் தொடங்­கினார். அன்­றைய நாட்­களில் முஸ்லிம் தலை­மைத்­துவம் தேசியக் கட்­சி­களின் விருப்பு வெறுப்­புக்­களை அனு­ச­ரித்தே தமது சமூ­கத்­திற்கு ஏற்­படும் வேத­னை­க­ளையும், சோத­னை­க­ளையும் பகி­ரங்­க­மாக பாரா­ளு­மன்­றத்தில் பேசு­வ­தற்கு தயக்கம் காட்­டிய காலம். இந்த நிலை இளைஞர் அஷ்­ரஃ­புக்கு வேத­னையை அதி­க­ரிக்கச் செய்­தது.

இதனால் இலங்கை முஸ்­லிம்­களின் மனித உரி­மை­களைத் தட்­டிக்­கேட்க அவர்­க­ளுக்­கான அர­சியல் முக­வ­ரியைப் பெற்­றுக்­கொ­டுத்து தன்­மா­னத்­துடன் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்­கா­கவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்ற கட்­சியை 21.09.1980 இல் காத்­தான்­கு­டியில் ஆரம்­பித்தார்.

அக்­கட்­சியின் மூலம் முஸ்லிம் மக்கள் மத்­தியில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி அர­சியல் கட்­சி­யாக அதனைப் பதிந்து மாகா­ண­சபை, பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் முகங்­கொ­டுக்கும் நம்­பிக்­கையை வளர்த்­தெ­டுத்தார்.

இவ­ரது தைரியம், துணிச்சல், பேச்­சாற்றல், உண்­மையை உரைத்தல் என்­பன மக்கள் மத்­தியில் பேசு­பொ­ரு­ளாக மாறி­ய­போது கூட்டம் கூட்­ட­மாக மக்கள் கட்­சிக்கு ஆத­ரவு கொடுக்க முன்­வந்­தனர்.

இக்­கா­லத்தில் இலங்கை, இந்­திய அர­சு­க­ளினால் கையெ­ழுத்­தி­டப்­பட்ட 13வது திருத்தச் சட்­டத்­திற்­க­மைய இணைந்த வட­கி­ழக்கு மாகா­ணத்­திற்­கான தேர்தல் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. விடு­தலைப் புலிகள் இத்­தேர்­தலைப் பகிஷ்­க­ரித்­தது மட்­டு­மன்றி இத்­தேர்­தலில் கள­மி­றங்­கு­வோ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­படும் என்றும் பய­மு­றுத்­தினர்.

இச்­ச­ம­யத்தில் அஷ்­ரஃபின் விவே­கமும், புத்திக் கூர்­மையும், தைரி­யமும் பல­ரையும் பிர­மிக்க வைத்­தது. தனது ஆத­ர­வா­ளர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி, தைரி­யப்­ப­டுத்தி தேர்தல் களத்தில் குதிப்­பது என்ற முடி­வுக்கு வந்தார்.

இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்­கிரஸ் 17 ஆச­னங்­களைப் பெற்­றது. வர­த­ரா­ஜப்­பெ­ருமாள் முத­ல­மைச்­ச­ரா­கிறார். சேகு இஸ்ஸதீன் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கிறார். இச்­ச­பையில் எம்.ரி.ஹஸன்­ அலி, எம்.வை.எம். மன்சூர், எம்.இஸட். முனாஸ் காரி­யப்பர், அலி­ உ­துமான், அபு­ஸாலி, (ஜவாட்) அப்­துர்­ரஸாக், அஸீஸ், ஜவாத் மரைக்கார், ஆதம்­பாவா, அப்துல் மஜீது ஆகி­யோரும் இன்னும் பலரும் சேர்ந்து 17 பேர் தெரி­வா­கினர்.

1989 இல் பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெற்­றது. இத்­தேர்­த­லுக்­காக கட்­சியின் போரா­ளி­களும், தொண்­டர்­களும், அபி­மா­னி­களும் வீடு­வீ­டாகச் சென்று ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்தி அம்­பாரை மாவட்­டத்தில் நான்கு ஆச­னங்­களைப் பெறு­வது எப்­படி? என்று படித்துப் படித்துச் சொல்­லிய போதும் முஸ்லிம் காங்­கி­ரஸின் எதிர்ப்­பா­ளர்­களால் அப்­பி­ரச்­சாரம் முறி­ய­டிக்­கப்­பட்­டது.

ஈற்றில் ஐ.தே.க வுக்கு 62,200 வாக்­கு­களும், முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு 60,925 வாக்­கு­களும் சிடைத்­தன. இன்னும் 638 பேர் மாத்­திரம் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு வாக்­க­ளித்­தி­ருந்தால் இரண்டு ஆச­னங்­க­ளையும் ஒரு போனஸ் ஆச­னத்­தையும் பெற்­றி­ருக்­கலாம். அதுதான் அல்­லாஹ்வின் நாட்டம் போலும்.

அம்­பாரை மாவட்­டத்தில் தலைவர் அவர்­களும், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஹிஸ்­புல்லாஹ்வும், வன்னி மாவட்­டத்தில் சுந்­த­ர­மூர்த்தி அபூ­பக்கருடன் தேசி­யப்­பட்­டியல் மூலம் என்.எம். புஹார்தீன் ஹாஜியும் தெரிவு செய்­யப்­பட்­டனர்.
பிரே­ம­தாஸ ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்த காலத்தில் அவ­ரது கட்­சியைச் சேர்ந்த சிலரால் அவ­ருக்­கெ­தி­ராக குற்­றப்­பி­ரே­ரணை (Impeachment) கொண்டு வரப்­பட்­ட­போது அது வெற்றி பெறும் நிலை காணப்­பட்­டதால் பிரே­ம­தாஸ நிலை­கு­லைந்தார். இச்­ச­ம­யத்தில் தலைவர் அஷ்­ரஃ­பிடம் ஆலோ­சனை கேட்­ட­போது அந்­தக்­குற்றப் பிரே­ர­ணையில் உள்ள பல­வீ­னங்­களைச் சுட்­டிக்­காட்டி அது தோற்­க­டிக்­கப்­பட அஷ்ரஃப் ஆலோ­சனை கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­ட­போது மிகவும் உற்­சா­க­ம­டைந்த ஜனா­தி­பதி பிரேமதாச அஷ்­ரஃபை அழைத்து இதற்கு உங்­க­ளுக்கு எப்­படி கைமாறு செய்­யலாம். நீங்கள் கேட்­ப­வற்றை நான் கொடுக்­கின்றேன் என்று கூறி­ய­போது அஷ்ரஃப் கேட்­ட­தெல்லாம் கோடி­க­ளை­யல்ல, உற­வி­னர்­க­ளுக்கு உயர் பத­வி­க­ளையோ அல்­லது தூதுவர் பத­வி­க­ளையோ அல்ல. ஒரே­யொரு கோரிக்கைதான். அதுதான் 12.5 வீதம் வெட்­டுப்­புள்ளி விவ­காரம். இதனை 5 வீதமாகக் குறைக்க வேண்­டு­மென்று அஷ்ரஃப் கேட்­டுக்­கொண்­ட­போது பாரா­ளு­மன்ற மசோ­தாவின் மூலம் அது நிறை­வேற்­றப்­பட்­டது.

இத்­தி­ருத்­தத்­தினால் முஸ்லிம் காங்­கிரஸ் மட்­டு­மன்றி ஜே.வி.பி., எம்.ஈ.பி, கம்­யூனிஸ்ட் போன்ற சகல கட்­சி­க­ளுக்கும் வாழ்வு கிடைத்­தது. தலைவர் அஷ்ரஃப் அவர்­க­ளுக்கு இந்த நாடே நன்றி செலுத்த வேண்டும். நமது ஒற்­று­மையின் பயனால் கிடைத்த வாக்குப் பலத்­தினால் சுய­நல நோக்­கங்­களை முற்­ப­டுத்­தாது நமது சமூ­கத்­திற்கும், நாட்­டுக்­கா­க­வுமே குரல் கொடுத்தார்.

இவ்­வாறே நாட்டின் ஜனா­தி­பதி விரும்பும் போதெல்லாம் பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்து உரை­யாற்ற முடியும் என்ற சட்ட நுணுக்­கத்­தையும் கூறி அவரை பாரா­ளு­மன்­றித்தில் உரை­யாற்ற வைத்தார். ஒரு காலத்தில் சட்ட வல்­லு­ன­ராக இருந்த ஜி.ஜி. பொன்­னம்­பலம் அவர்­களின் சாத­னை­க­ளுக்கு இவரும் சளைத்­த­வ­ரல்ல என்­பதை நிரூ­பித்தார்.

1993 இன் இறு­திப்­ப­கு­தியில் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­காக நடை­பெற்ற தேர்­தலில் தலைவர் அஷ்ரஃப் துணிச்­ச­லுடன் ஒரு சவால் விடுத்தார். அம்­பாரை மாவட்­டத்­தி­லுள்ள முஸ்­லிம்கள் செறிந்து வாழும் ஆறு பிர­தேச சபை­க­ளான கல்­முனை, சம்­மாந்­துறை, நிந்­தவூர், அக்­க­ரைப்­பற்று, பொத்­துவில், அட்­டா­ளைச்­சேனை ஆகி­ய­வற்றில் ஒரு பிரதேச சபை­யி­லா­வது பெரும்­பான்மைப் பலம் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு கிடைக்­க­வில்லை எனில் தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­வ­தாக பாரா­ளு­மன்­றத்­திலும், பகி­ரங்க கூட்­டங்­க­ளிலும் சூளு­ரைத்தார்.

தேர்தல் நடந்து முடிந்­தது. கல்­முனை, சம்­மாந்­துறை, அட்­டா­ளைச்­சேனை, அக்­க­ரைப்­பற்று பிர­தேச மக்கள் தலை­வரின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையைப் பாது­காக்கப் போராடி வெற்றி பெற்­றனர். ஆனால் நிந்­தவூர், பொத்­துவில் பிர­தேச சபை­களை வெல்ல முடியவில்லை.

தலை­வரோ சளைக்­க­வில்லை. தனது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யைத் துறக்க முஸ்­தீ­பு­களைச் செய்து கொண்­டி­ருந்­த­போது பாரா­ளு­மன்­றத்­திலும், வெளி­யிலும் அர­சியல் தலை­வர்­களும், ஆத்­மீகத் தலை­வர்­களும் இன மத பேத­மின்றி நான்கு சபை­களில் வெற்றி பெற்று விட்­டீர்­களே! நீங்கள் பாரா­ளு­மன்­றத்தில் இல்­லா­விடின் உங்கள் வெற்­றி­டத்தை யாராலும் நிரப்ப முடி­யாது. உங்கள் முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்­யுங்கள் என்று வற்­பு­றுத்­தினர்.

1994 இல் சம்­மாந்­து­றையில் நடை­பெற்ற 14வது வரு­டாந்த தேசிய மகா­நாட்­டிற்கு சமுக­ம­ளித்­தி­ருந்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் முக்­கிய தலை­வர்­க­ளான சிவ­சி­தம்­பரம், சம்­மந்தன் ஐயா, இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் தொண்­டமான் ஆகியோர் பகி­ரங்க மேடையில் வைத்து உங்கள் முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்­யுங்கள் என்று கூறி­ய­போது கூடி­யி­ருந்த மக்கள் வெள்ளம் அதனை ஆத­ரித்து, ஆமோ­தித்து தங்கள் உற்­சா­கத்தைத் தெரி­வித்த போதிலும் இறு­தி­யாகப் பேசிய தலைவர் அவர்கள் சொன்ன, சொல்லைத் தன்னால் மீற முடி­யாது என்றும் அனை­வரும் தன்னை மன்­னித்துக் கொள்­ளு­மாறும் கூறி நாடா­ளு­மன்றப் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்தார்.

ஒரு துக்­கத்­திலும் ஒரு சந்­தோஷம் கிடைப்­பது போல வேட்­பாளர் பட்­டி­யலில் அடுத்த நிலை­யி­லி­ருந்­த­வரும் சம்­மாந்­துறைப் பிர­தேச கபையின் தவி­சா­ள­ரா­க­வி­ருந்த தொப்பி முகைதீன் என்று எல்­லோ­ராலும் செல்­ல­மாக அழைக்­கப்­பட்ட சட்­டத்­த­ரணி யூ.எல்.எம். முகைடீன் பாரா­ளு­மன்­றத்­திற்­கான உறுப்­பி­ன­ராக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­கிறார். ஐ.எம். இப்­றாஹீம் சம்­மாந்­துறைப் பிர­தேச சபையின் தவி­சா­ள­ராகப் பார­மெ­டுக்­கிறார்.

அதை­ய­டுத்து 1994இல் நடை­பெ­ற­வி­ருந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சந்­தி­ரிகா அம்­மையார் கள­மி­றங்­கினார். தனது தாயா­ருக்கும் அஷ்­ரஃ­புக்கும் இடையே இருந்த காழ்ப்­பு­ணர்வை மறந்து செய்த தவ­றுக்குப் பரி­கா­ர­மாக தலைவர் அஷ்­ரஃபை தனக்கு ஆத­ர­வ­ளிக்­கு­மாறு வேண்­டினார். வேண்­டுகோள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. சத்­தி­ரிகா ஜனா­தி­பதி ஆனார். தலைவர் அஷ்ரஃப் ஆட்­சியின் பங்­கா­ளி­யாகி அமைச்­ச­ரானார். அவ­ருடன் ரவூப் ஹக்கீம் குழுக்­களின் பிர­தித்­த­லை­வ­ரா­கவும், கப்­பல்­துறை, துறை­முக அபி­வி­ருத்தி புனர்­வாழ்வு புன­ர­மைப்பு அமைச்­ச­ராக அஷ்­ரஃபும் நிய­மிக்­கப்­ப­டு­கிறார்.

அமைச்­சுப்­ப­த­வியைப் பார­மெ­டுத்த நாள் முதல் தனது பணி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு நல்கும் அதி­கா­ரி­க­ளையும், உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் நிய­மித்து தனது சமூ­கத்தின் விடி­வுக்­காக இரவு பக­லென்று பாராது திட்­டங்­களைத் தீட்டி செயற்­ப­டுத்­து­வதில் மும்­மு­ர­மாக ஈடு­படத் தொடங்­கினார். இதன் விளை­வாக பின்­வரும் சமூக நலத்­திட்­டங்­களை மிகக்­கு­று­கிய காலத்தில் அவரால் செய்ய முடிந்­தது.

01. பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்­திலும், கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் தங்­க­ளது உயர் கல்­வியைத் தொடர முடி­யாது கஷ்­டப்­பட்டுக் கொண்­டி­ருந்த மாண­வர்­க­ளுக்­காக மட்­டக்­க­ளப்பு நகரில் ஒரு வளா­கத்தை அமைத்துத் தரு­மாறு சம்­மந்­தப்­பட்ட சக­ல­ரி­டமும் வற்­பு­றுத்திக் கேட்­ட­போதும் கூட மேலி­டங்கள் அதை விரும்­பாத நிலையில் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் ஆசீர்­வா­தத்­துடன் தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழகம் என்ற பெயரில் சகல வச­தி­க­ளையும் கொண்ட ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தை ஒலுவில் கிரா­மத்தில் நிறு­வு­வதில் வெற்றி கண்டார்.

02. பல்­க­லைக்­க­ழ­கத்­துக்குப் பக்­கத்தில் துறை­சார்ந்­த­வர்­களின் ஆலோ­ச­னை­களைப் பெற்று பாரிய துறை­முகம் ஒன்றைக் கட்­டு­வ­தற்­கான நிர்­மாணப் பணி­களை மேற்­கொண்டார். துறை­மு­கத்­திற்­கான வெளிச்ச வீடு ஒன்­றையும் நிறுவி மஹா­பொல விடு­தி­யையும் அமைத்தார்.

03. துறை­முக அபி­வி­ருத்தி அமைச்சில் ஐயா­யி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு இன மத மொழி பாகு­பா­டின்றி வேலை வாய்ப்­புக்­களை வழங்­கினார்.

04. கிழக்கில் பயங்­க­ர­வாத நிகழ்­வு­களால் பாதிக்­கப்­பட்ட அரச ஊழியர் மற்றும் பொது மக்­க­ளுக்­கான நட்­ட­ஈட்டை புனர்­வாழ்வு அமைச்சின் மூலம் பெற்­றுக்­கொ­டுத்தார்.

05. கிழக்கில் சகல மாவட்­டங்­க­ளிலும் மாதிரிக் கிரா­மங்­களை அமைத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வீடு, பாட­சாலை முத­லிய வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்தார்.

06. தனது செல்­வாக்­கையும் அறி­மு­கத்­தையும் பாவித்து கொழும்பு கொம்­பனி வீதியில் ஏழு அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்­சிக்­கான தலைமைக் காரி­யா­ல­ய­மாக அமைத்து அதற்கு தாறுஸ்­ஸலாம் (சாந்தி இல்லம்) என்ற பெய­ரையும் சூட்­டினார். அதற்குப் பக்­கத்தில் உள்ள வள­வு­க­ளையும் வாங்கி அதையும் கட்­சியின் சொத்­தாக ஆக்­கினார்.

07. புலிப்­ப­யங்­க­ர­வா­தி­களால் மனி­தா­பி­மா­ன­மற்ற முறையில் வடக்­கி­லி­ருந்து முஸ்லிம் மக்­களை மாத்­திரம் வேறு­ப­டுத்தி உடுத்த உடை­யுடன் இர­வோ­டி­ர­வாக துரத்­தி­ய­டித்­த­போது கால்­ந­டை­யா­கவே புத்­தளம் நக­ருக்கு புக­லிடம் தேடி வந்த மக்­க­ளுக்­காக மாதி­ரிக்­கி­ரா­மங்­க­ளையும், வீட்­மைப்புத் திட்­டங்­க­ளையும், பாட­சா­லை­க­ளையும் அமைத்துக் கொடுத்து அவர்கள் நிம்­மதிப் பெரு­மூச்­சு­விட வழி­செய்தார்.

08. கல்­முனை நகரை ஒரே வாரத்தில் மாந­கர சபை­யாகத் தர­மு­யர்த்­தினார்.

09. சாய்ந்­த­ம­ரு­தூரில் மீன்­பிடிப் பட­கு­களை நிறுத்தி வைக்க துறை ஒன்றை அமைக்க நட­வ­டிக்கை எடுத்தார்.

10. சம்­மாந்­துறை நகர மத்­தியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த நீர்த்­தாங்­கிக்கு நீரைக் கொண்­டு­வர அவுஸ்­தி­ரே­லிய அர­சுடன் தொடர்பு கொண்டு 3500 மில்­லியன் டொல­ருக்­கான நிதி­யு­தவி ஒப்­பந்தம் ஒன்றைச் செய்து அம்­பாரை மாவட்டம் முழு­வ­தற்­கு­மான குடிநீர் வச­தியைப் பெற்­றுக்­கொ­டுத்தார். அத்­திட்­டத்தின் மூன்றாம் கட்ட வேலைதான் இப்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றது.

11. பயங்­க­ர­வா­தத்தின் உச்­சக்­கட்டம் தலை­வி­ரித்­தா­டி­ய­போது காரை­தீவில் பணி­பு­ரிந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களை இன­ரீ­தி­யாகப் பிரித்து முஸ்லிம் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் 40 பேரையும் காரை­தீவு முகாமில் வரி­சை­யாக நிற்­க­வைத்து மிரு­கக்­குணம் கொண்ட வெறி­யர்­களால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டு ஷஹீ­தாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நஷ்­ட­ஈட்­டையும், அவர்கள் ஓய்வு பெறும் காலம் வரை­யான சம்­ப­ளத்­தையும் வழங்க வைப்­பதில் பெரும் பங்­காற்­றினார்.

12. பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களால் கல்­முனை வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று பரி­சோ­த­னை­களைச் செய்யவும், வைத்தியர்களைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெறவும், மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியாத நிலையிலிருந்தபோது சாய்ந்தமருது வைத்தியாலைக்கு சில பிரிவுகளை இடமாற்றம் செய்து அதையும் தரமுயர்த்தலாம் என்ற ஆலோசனை உரியவர்களிடம் முன்வைக்கப்பட்டபோது அதுவும் நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் மடுவம் என அழைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை அமைந்திருந்த இடத்தில் புதிதாக வைத்தியசாலை ஒன்றை நிறுவ நடவடிக்கை மேற்கொண்டார். அதுவே இன்று அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை (ஏ.எம்.எச்) என்ற பெயரில் தலைநிமிர்ந்து நிற்கிறது.

13. வட கிழக்கு முஸ்­லிம்­களின் பாது­காப்­பிற்­காக 500 ஊர்­காவற் படை­யி­னரை நிய­மித்து அவர்­க­ளுக்கு சட்­ட­ரீ­தி­யான ஆயு­தங்­களை வழங்கி பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை மேற்கொண்டார்.

இவ்வாறான பல வேலைத்திட்டங்களை நமது சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் ஆறே ஆறு வருடங்களில் செய்து முடித்து சாதனை படைத்த மாபெரும் தலைவனை செயலிழக்கச்செய்வதில் பயங்கரவாதம் வெற்றி பெற்றது. ஹெலிகொப்டர் விபத்தில் அத்தலைவன் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இன்று நாம் அனாதைகளாக ஆக்கப்பட்டு நாதியற்ற சமூகமாக பழைய நிலைக்கே வந்து விட்டோம்.

2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நம்மை விட்டுப் பிரிக்கப்பட்டு 24 ஆண்டுகள் ஆகின்றன. அவரது மறைவுக்குப் பின்னர் சமூகத்தின் விடிவுக்காக உருவாக்கப்பட்ட கட்சியின் சாதனைகள் என்ன? சிந்திப்போமா? அஷ்ஷஹீத் அஷ்ரஃப் அவர்களுக்கு அல்லாஹ் அனைத்து நலன்களையும் வழங்குவானாக!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.