மு.கா.விலிருந்து அலிசாஹிர் மௌலானாவை நீக்குவதற்கான தடை உத்தரவு 25 வரை நீடிப்பு

0 149

(எப்.அய்னா)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹிர் மௌலா­னாவை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வதைத் தடுக்கும் வகையில் பிறப்­பிக்­கப்­பட்ட தடை உத்­த­ரவு எதிர்­வரும் 25ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு பிர­தான மாவட்ட நீதி­பதி சந்துன் விதான இந்த உத்­த­ரவை நேற்று (11) பிறப்­பித்­துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹிர் மௌலா­னாவின் கட்சி உறுப்­பு­ரி­மையை நீக்­கு­வதைத் தடுக்கும் வகையில் அந்தக் கட்­சியின் தலைவர் மற்றும் செய­லாளர் நாய­கத்­துக்கு கொழும்பு மாவட்ட நீதி­மன்றம் இடைக்­கா­லத்­த­டை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.
அலி சாஹிர் மௌலா­னா­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட மனு பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன் விதா­னகே இந்த உத்­த­ரவை பிறப்­பித்­தி­ருந்த நிலையில், நேற்று ( 11) வரை­யி­லேயே தடை உத்­தரவு அமுலில் இருந்­தது. இந்நிலை­யி­லேயே நேற்று மீள அத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.