முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சட்ட ரீதியாகவே தீர்வளித்துள்ளேன்

ஜனாஸா விவகாரம் தொடர்பில் சாய்ந்தமருதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

0 55

(எஸ்.என்.எம்.சுஹைல்)
ஜனாஸா எரிக்­கப்­பட்டு முஸ்லிம் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு சட்­ட­ரீ­தி­யி­லான தீர்­வொன்றை வழங்­கி­விட்டே நான் உங்­க­ளிடம் வாக்கு கேட்க வந்­துள்ளேன் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அத்­தோடு, கல்­முனை பிராந்­தி­யத்தில் வர்த்­த­கத்­தையும் விவ­சா­யத்­தையும் அபி­வி­ருத்தி செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது அதனை யாரால் செய்ய முடியும் என்­பதை முஸ்லிம் காங்­கிரஸ் சிந்­தித்து பார்க்க வேண்டும் எனவும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதன்­போது தெரி­வித்தார்.

சாய்ந்­த­ம­ருது பௌஸி மைதா­னத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் கல்­முனை தொகுதி ஐக்­கிய தேசிய அமைப்­பாளர் ஜெமீல் தலை­மையில் நேற்று இடம்­பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேர­ணியில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க இதனைக் குறிப்­பிட்டார்.
எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த இந்த பேர­ணியில் பெரு­ம­ள­வான மக்கள் கலந்­து­கொண்­டனர்.

இந்த மக்கள் பேர­ணியில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, கடந்த இரண்டு வரு­டங்­களில் இந்த நாட்டின் வீழ்ச்­சி­ய­டைந்த பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுத்து அனை­வரும் வாழக்­கூ­டிய நாட்டை உரு­வாக்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

அடுத்த 05 வரு­டங்­களில் இந்த வேலைத் திட்­டத்தை வலு­வாக அமுல்­ப­டுத்தி நாட்டின் பொரு­ளா­தார பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுப்பேன் என தெரி­வித்த ஜனா­தி­பதி, மக்கள் தமது பிள்­ளை­களின் மற்றும் நாட்டின் எதிர்­கா­லத்­திற்­கான வேலைத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என­வும் ­தெ­ரி­வித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க,
” நாட்டின் பொரு­ளா­தாரம் சரி­வ­டைந்த வேளை­யி­லேயே நாட்டை ஏற்றேன். 2022 அத்­தி­யா­வ­சிய பொருட்கள் ஒன்றும் எமக்கு கிடைக்­க­வில்லை. மின்­சா­ரமும் இருக்­க­வில்லை. கஷ்­டங்­க­ளுடன் வாழ்ந்தோம். பெண்கள் அதனை மறந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. அன்று இப்­போ­தி­ருக்கும் முன்­னேற்றம் கிட்டும் என்று நினைக்­க­வில்லை.

அனு­ரவும் சஜித்தும் அன்று இருக்­க­வில்லை. ஆனால் நான் ஏற்­றதால் நாட்டில் தட்­டுப்­பா­டுகள் நீங்கி நல்ல நிலைமை காணப்­ப­டு­கி­றது. அதனால் மக்கள் சுமூ­க­மாக வாழ முடிந்­துள்­ளது. அன்று பொருட்­களின் விலை அதி­க­ரித்­தித்து காணப்­பட்­டது. ரூபாவின் பெறு­மதி பெரு­ம­ளவில் அதி­க­ரித்­தி­ருந்­தது.

இன்றும் மக்கள் வாழ்க்கை சுமை­க­ளுக்கு முகம்­கொ­டுக்­கி­றார்கள். இருப்­பினும் எனது முயற்­சிகள் ரூபாவின் பெறு­ம­தியை அதி­க­ரிக்கச் செய்­த­மையால் ஓர­ளவு சுமூ­க­மான நிலைமை வந்­தி­ருக்­கி­றது. பொருட்­களின் விலையும் குறைந்­தி­ருக்­கி­றது.

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பவே மக்கள் மீது சில சுமை­களை சுமத்த வேண்­டி­யி­ருந்­தது. சர்­வ­தேச நாணய நிதியம் எமது கடன் சுமை அதி­க­ரித்தால் நாட்டின் நெருக்­கடி மேலும் உக்­கி­ர­ம­டை­யு­மென அறி­வு­றுத்­தி­யது. நான் மேற்­கொண்ட முயற்­சி­களின் பல­னாக மொத்த தேசிய உற்­பத்­தியில் 5 சத­வீத கடனை மட்டும் பெறு­வ­தற்கு மாத்­திரம் அனு­மதி கிடைத்­தது. இந்த கட்­டுப்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே முன்­னேற்­றங்­களை ஏற்­ப­டுத்­தினோம். அதற்­கா­கவே மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­கினோம்.

அடுத்த ஐந்து வரு­டங்­களில் சுமையை மேலும் குறைக்க எதிர்­பார்க்­கிறோம். பொருட்­களை கொள்­வ­னவு செய்­யவும் வாய்ப்­ப­ளிப்போம். இந்தப் பகு­தியை அபி­வி­ருத்தி செய்ய எதிர்­பார்த்­தி­ருக்­கிறோம். விவ­சாய நவீ­ன­ம­யப்­ப­டுத்தல் செயற்­பா­டு­களை இங்கும் முன்­னெ­டுக்­கலாம்.

முஸ்லிம் மக்­க­ளுக்கு பிர­தான பிரச்­சி­னை­களுக்கான தீர்வை நான் தந்­துள்­ளேன. கடந்த ஆட்­சியின் போது முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டன. இனி ஒரு­போதும் அவ்­வாறு ஜனா­ஸாக்கள் எரிக்க முடி­யாத அள­வுக்கு சட்­ட­மொன்றை இயற்றி அதனை நிறை­வேற்­றி­விட்டே இன்று உங்­க­ளிடம் வாக்கு கேட்க வந்­துள்­ளேன். அத்­தோடு, இந்த சட்­டத்தின் மூலம் நீங்கள் விரும்­பிய முறைப்­படி நல்­ல­டக்கம் செய்ய உரி­மையை சட்ட ரீதி­யாக பெற்றுத் தந்­துள்ளேன். இனி ஒரு­போதும் எவ­ராலும் இவ்­வா­றான அநீ­தி­களை செய்ய முடி­யாது. அத்­தோடு, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் பெற்றுக் கொடுக்­கவும் நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன் என்றும் அவர் தெரி­வித்தார்.

அத்­துடன், இன்னும் 20 வரு­டங்­களில் சிறந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்­பிக்­கையை இந்­நாட்டு இளை­ஞர்­க­ளுக்கு வழங்க வேண்டும். நாட்டை உருவாக்க செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்த திட்டமும் இல்லை எனவும் அவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் . நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சீர்குலைந்தால் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் எவராலும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.