எனது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் ரணில் பொறுப்புக்கூற வேண்டும்

சதித்திட்டம் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் சாடல்

0 17

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
எனது அர­சியல் நட­வ­டிக்­கையை பொறுத்­துக்­கொள்ள முடி­யாமல் என்னை சிறையில் அடைப்­ப­தற்கு அல்­லது எனது உயி­ருக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்த சதித்­திட்டம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. எனது உயி­ருக்கு ஏதா­வது பாதிப்பு ஏற்­பட்டால் ரணில் விக்­ர­ம­சிங்­கவே அதற்கு பொறுப்புக் கூற­வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை விசேட கூற்­றொன்றை முன்­வைத்து குறிப்­பி­டு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

இது­தொ­டர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
கடந்த மூன்று தினங்­க­ளுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் மனுஷ நாண­யக்­கா­ரவும் அஸ்லம் என்ற நபரும் வெலி­கடை சிறைச்­சா­லைக்கு சென்று, 5 வரு­டங்­க­ளாக குற்றச் செயல் ஒன்­றுக்­காக சந்­தேக நப­ராக இருக்கும் ஒரு­வரை சந்­தித்­துள்­ளனர். இவ்­வாறு குறித்த சந்­தேக நப­ரிடம், அவரை பிணையில் வெளியில் எடுப்­ப­தா­கவும் இன்னும் பல்­வேறு வரப்­பி­ர­சா­தங்­களை வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்து, எனக்கு எதி­ராக வாக்­கு­மூலம் ஒன்றை வழங்­கு­மாறு கேட்­டுள்­ளார்கள். அதா­வது சந்­தே­கத்தின் பேரில் 5 வரு­டங்கள் சிறையில் இருக்கும் குறித்த நபரின் குற்­றச்­செ­ய­லுக்கும், எனக்கும் தொடர்பு இருப்­ப­தாக தெரி­வித்தே இந்த வாக்­கு­மூ­லத்தை அவர்கள் கேட்­டுள்­ளனர். மனுஷ நாண­யக்­கார குறித்த சந்­தேக நபரை சந்­தித்­தமை தொடர்பில் என்­னிடம் ஆதாரம் இருக்­கி­றது.

சஜித் பிரே­ம­தா­சவின் வெற்­றிக்­காக கடந்த காலங்­களில் நான் முன்­னி­லையில் இருந்து செயற்­பட்டு வரு­பவன் என்­பது யாரும் அறிந்த விடயம். இதனை தாங்­கிக்­கொள்ள முடி­யாமல், என்னை எப்­ப­டி­யா­வது ஏதா­வது ஒரு பிரச்­சி­னைக்குள் சிக்­க­வைத்து, என்னை சிறையில் அடைப்­ப­தற்கு அல்­லது எனது உயி­ருக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சதித்­திட்டம் ஒன்று இடம்­பெற்று வரு­கி­றது என்­பது எனக்கு புல­னா­கி­றது. இந்த விட­யங்கள் தொடர்பில் போது­மான ஆதா­ரங்­களை வைத்­துக்­கொண்டே இதனை தெரி­விக்­கிறேன். இது தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவில் முறைப்­பாடு செய்து, இந்த ஆதா­ரங்­களை சமர்ப்­பிக்க இருக்­கிறேன்.

எனது உயி­ருக்கு ஏதா­வது ஆபத்து ஏற்­பட்டால் அதற்கு ரணில் விக்­ர­ம­சிங்க பொறுப்பு கூற­வேண்டும் என்­பதை நான் பகி­ரங்­க­மாக தெரி­விக்­கிறேன். ரணில் விக்­ர­ம­சிங்க போன்ற ஒரு­வரை இந்த நாட்டின் தலை­வ­ராக்க 15 வரு­டங்­க­ளாக ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எமது வாழ்க்­கையை அர்ப்­ப­ணித்து, பணி­யாற்­றி­ய­மைக்­காக நான் வெட்­கப்­ப­டு­கிறேன்.

சட்­டத்தின் பிர­காரம் தேர்தல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வோம் என நான் ஆரம்­பித்­தி­லேயே ஜனா­தி­ப­திக்கு தெரி­வித்தேன். ஆனால் தற்­போது அவர் செய்ய முடி­யு­மான அனைத்து மோச­மான நட­வ­டிக்­கை­க­ளையும் செய்து வரு­கிறார்.

கடந்த 30 வரு­டங்­க­ளாக நான் கொழும்பு மாவட்­டத்தில் அர­சியல் செய்து வரு­கிறேன். இது­வரை எனக்கு எதி­ராக பொலிஸில் முறைப்­பாடு இல்லை. எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எந்த சந்­தர்ப்­பத்­தி­லா­வது நெருக்­க­டி­களை கொடுத்­தி­ருக்­கி­றதா என்­பதை அவர்­க­ளிடம் கேட்­டுப்­பார்க்­கலாம். நாங்கள் அனை­வ­ரு­டனும் சிநே­க­பூர்­வ­மான முறை­யி­லேயே அர­சியல் செய்­கிறோம்.

எங்­க­ளுக்கு எதி­ராக மோசடி குற்­றச்­சாட்டும் இல்லை. நாங்கள் தூய்­மை­யான அர­சி­ய­லையே செய்து வரு­கிறோம். அமைச்­சுப்­ப­தவி வழங்­கு­வ­தாக ஜனா­தி­பதி என்­னையும் அழைத்தார். நான் அதற்கு இனங்­க­வில்லை. அவரின் தீர்­மானம் பிழை. அதனால் அவரை அர­சியல் ரீதியில் பகி­ரங்­க­மாக விமர்­சித்தேன். அது எனது அர­சியல் உரிமை. இதனை தாங்­கிக்­கொள்ள முடி­யாமல் எனக்கு எதி­ராக செயற்­பட்டு என்னை சிறைப்­ப­டுத்த முற்­ப­டு­வ­தாக இருந்தால், இவர்­களின் அர­சியல் நிலை என்ன? இவ்­வா­றான மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தவா ரணில் விக்­ர­ம­சிங்க அதி­கா­ரத்தை கேட்­கிறார்? இதுவா அவரின் கெள­ர­வ­மான அர­சியல்.

அதனால் எனக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் சதித்­திட்டம் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும். குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு பொலிஸார் இது தொடர்பில் தேடிப்­பார்க்க வேண்டும். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்­வ­கையில் எனது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­மாறு சபா­நா­ய­கரை கேட்­டுக்­கொள்­கிறேன் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.