ரணில்-சஜித் இணைவு சாத்தியமே இல்லை

ஐக்­கிய மக்கள் சக்­தியின் சிரேஷ்ட தவிசாளர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் திட்டவட்டம்

0 14

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்­பா­ளர்­க­ளான ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவும் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவும் இணை­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ள­தாக வெளி­வரும் தக­வல்­களில் உண்மை இல்லை என ஐக்­கிய மக்கள் சக்­தியின் சிரேஷ்ட தவிசாளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பிரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் பிர­சார அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

தேசிய மக்கள் சக்­தியின் வேட்­பாளர் அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுக்­கான ஆத­ரவு அதி­க­ரித்து வரும் நிலையில் அவரை வீழ்த்­து­வ­தற்­காக ரணில் விக்­ர­ம­சிங்­கவும் சஜித் பிரே­ம­தா­சவும் இணையப் போவ­தாக வெளி­வரும் செய்­திகள் குறித்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

‘‘ சஜித் பிரே­ம­தா­சவின் வெற்றி உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் அதனைத் திசை திருப்­பு­வ­தற்­கா­கவே இவ்­வா­றான கதைகள் பரப்­பப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான போலி­யான கதை­களின் பின்னால் மக்கள் அள்­ளுண்டு செல்லக் கூடாது என நான் வேண்­டு­கோள்­வி­டுக்க விரும்­பு­கிறேன்.

இரு தனி நபர்­க­ளுக்­கி­டை­யி­லான இணைவு இடம்­பெ­று­வதை ஐக்­கிய மக்கள் சக்தி ஒரு­போதும் அனு­ம­திக்­காது. ஏற்றுக் கொள்­ளப்­பட்ட கொள்­கை­களின் அடிப்­ப­டையில் பல கட்­சிகள் ஒன்­றி­ணைந்தே ஐக்­கிய மக்கள் சக்தி தலை­மை­யி­லான கூட்­டணி தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே இக் கூட்­டணிக் கட்­சி­களின் விருப்­பங்­களைத் தாண்டி எந்த தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது. என­வேதான் இவ்விரு வேட்பாளர்களும் இணைவார்கள் என்ற செய்தியை நான் மறுதலிக்கிறேன். அது ஒருபோதும் நடக்காது என்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம்.பி. மேலும் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.