உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மூடப்பட்ட காத்தான்குடி அதர் பள்ளிவாசலை திறக்க அனுமதி

புதிய நிர்வாக சபையும் திணைக்களத்தினால் நியமனம்

0 126

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்­தான்­கு­டியில் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக மூடப்­பட்­டி­ருந்த காத்­தான்­குடி ஜாமிஉல் அதர் பள்­ளி­வாயல் தொழு­கைக்­காக விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்­டுத்­தாக்­கு­லுக்குப் பின்னர் இலங்­கையில் பல தௌஹீத் பள்­ளி­வா­யல்கள் மூடப்­பட்டு தடை விதிக்­கப்­பட்­ட­துடன் சில நிறு­வ­னங்­க­ளுக்கும் செயற்­ப­டு­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டது. இவ்­வாறு மூடப்­பட்ட தௌஹீத் பள்­ளி­வா­யல்­களில் காத்­தான்­குடி ஜாமிஉல் அதர் பள்­ளி­வா­யலும் ஒன்­றாகும்.

இந்த ஜாமிஉல் அதர் பள்­ளி­வாயல் 2019 இல் மூடப்­பட்டு பாது­காப்பு அமைச்­சினால் பொலி­சாரின் மேற்­பார்­வையின் கீழ் கொண்டு வரப்­பட்­டது. இப் பள்­ளி­வாயல் 2006 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. பின்னர் 2009ம் ஆண்டு இந்தப் பள்­ளி­வா­யலில் ஜும்ஆ ஆரம்­பிக்­கப்­பட்­ட­துடன் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் வக்பு சபையில் 2015 ஆம் ஆண்டு பதிவு செய்­யப்­பட்­டது.

ஈஸ்டர் தாக்­கு­த­லை­ய­டுத்து தொழுகை இடை நிறுத்­தப்­பட்டு பள்­ளி­வா­யலை பாது­காப்பு அமைச்சு பொறுப்­பேற்­ற­துடன் பள்­ளி­வா­யலை மூடி அதன் திறப்பை பொலிசார் எடுத்துச் சென்­றனர்.

இதை­ய­டுத்து இப் பள்­ளி­வா­யலில் இடம் பெற்று வந்த ஐவேளை தொழு­கைகள் ஜும்ஆத் தொழுகை குர்ஆன் மத­ரசா மார்க்க உபன்­னி­யாசம் அனைத்தும் நிறுத்­தப்­பட்டு இதற்­கான தடை வரத்­த­மா­னியும் வெளி­யி­டப்­பட்­டது.
எனினும் இந்தப் பள்­ளி­வா­யலை திறந்து ஐந்து வேளை தொழுகை மாத்­தி­ர­மா­வது இடம் பெற வேண்­டு­மென நலன் விரும்­பிகள் சிலர் தொடர்ச்­சி­யாக முற்­சித்து வந்­தனர்.

இப் பள்­ளி­வாயல் தொடர்­பான விசா­ர­ணை­களை பொலிசார் மற்றும் பாது­காப்பு அதி­கா­ரிகள் மேற் கொண்டு முடி­வுற்ற நிலையில் இப்­பள்­ளி­வா­யலை தொழு­கைக்­காக திறப்­ப­தற்கு அனு­மதி கோரி காத்­தான்­கு­டியைச் சேர்ந்த பல தரப்­பட்­டோரும் முயற்­சி­களை மேற் கொண்­டனர்.

காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் முபீன் காத்­தான்­குடி நகர சபை முன்னாள் தவி­சாளர் அஸ்பர் உள்­ளிட்ட பலரும் வெவ்­வேறு வகை­யான முற்­சி­களை மேற் கொண்­டனர்.

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் யு.எல்.எம்.என்.முபீன் ஊடாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தலை­வரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரஊப் ஹக்கீம் உட்­பட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கவ­னத்­துக்கு இந்த விடயம் கொண்டு செல்­லப்­பட்­டது.

இதற்­காக உழைத்த நலன் விரும்­பிகள் பல தட­வைகள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சியல் பிர­மு­கர்­களை சந்­தித்­த­துடன் இங்கு தொழுகை நடாத்த அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் காத்­தான்­குடிக் கிளையின் சிபா­ரிசுக் கடி­தமும் வழங்­கப்­பட்­டது.

இந்த முயற்­சியின் பின்­ன­ணியில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரின் கையொப்­பத்­து­ட­னான கடிதம் ஜனா­தி­ப­தி­யினால் கூட்­டப்­பட்ட அனைத்துக் கட்சி மாநாட்டில் ஜனா­தி­ப­தி­யிடம் முஸ்லிம் காங்­கி­ரசின் தலைவர் ரஊப் ஹக்­கீ­மினால் கைய­ளிக்­கப்­பட்­ட­துடன் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­துக்கும் கொண்டு வந்­தனர். எனினும் இதற்­கான அனு­மதி கிடைக்­காத நிலையில் தொடர்ந்து முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன.

இந்த நிலையில் 2023 பெப்­ர­வரி 5 ஆம் திகதி இப்­பள்­ளி­வா­யலை பொலிசார் முழு­மை­யாக கைய­கப்­ப­டுத்தி தமது பாவ­னைக்கு எடுக்க எத்­த­னித்­த­போது மறுநாள் காத்­தான்­கு­டியில் வர்த்­தக நிலை­யங்கள் மூடப்­பட்டு கவ­ன­யீர்ப்பு ஆர்­பாட்டம் ஒன்றும் பொது மக்­க­ளினால் நடாத்­தப்­பட்­டது.

இதில் காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன முன்னாள் செய­லாளர் சபீல் நளீமி காத்­தான்­குடி நகர சபை முன்னாள் உறுப்­பினர் ஜவாஹிர் உட்­பட நலன் விரும்­பிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்­ட­துடன் இப் பள்­ளி­வா­யலை ஐந்து வேளை தொழு­கைக்­காக திறக்க அனு­ம­திக்­கு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இந்தப் பின்­ன­ணியில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சாஹீர் மௌலானா ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ரம சிங்க பாது­காப்பு ஆலோ­சகர் சாகல ரத்­த­நா­யக்கா ஆகி­யோரின் கவ­னத்­துக்கு கொண்டு வந்தார்.

அத்­தோடு தொட­ரச்­சி­யாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சாஹீர் மௌலானா மேற் கொண்ட முயற்­சி­யினால் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் உத்­த­ரவின் பேரில் இப் பள்­ளி­வா­யலை திறப்­ப­தற்கும் ஐந்து வேளை தொழு­கையை மேற் கொள்­ளவும் தற்­போது அனு­மதி வழக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான வர்த்­த­மாணி அறி­வித்­தலும் விரைவில் வெளி­வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இத­ன­டிப்­ப­டையில் இப்­பள்­ளி­வா­ய­லுக்­கான புதிய நிரு­வாக சபை ஒன்றை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் வக்பு சபை நிய­மித்­துள்­ளது. இந்த புதிய நிரு­வாக சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிய­மனக் கடிதம் காத்­தான்­குடி பிர­தேச செய­லாளர் உதய சிறீ­த­ரினால் இவ்­வாரம் வழங்கி வைக்­கப்­பட்­டது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் சியாட் இந்த நிய­மனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதற்­கான நிரு­வாக சபையில் காத்­தான்­கு­டி­யி­லுள்ள பிர­தான ஜும்ஆப் பள்­ளி­வா­யல்­க­ளான முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்­ஆப்­பள்­ளி­வாயல், மீரா பெரிய ஜும்­ஆப்­பள்­ளி­வாயல், ஜாமி­யுழ்­ழா­பிரீன் பெரிய ஜும்­ஆப்­பள்­ளி­வாயல் ஆகிய மூன்று பள்­ளி­வா­யல்­களில் இருந்து தலா மூன்று பேர் வீதம் 9 பேரும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து இரண்டு அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­க­ளு­மாக 11 நிரு­வா­கிகள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.
இந்தப் பள்­ளி­வா­யலின் திறப்­பி­னை­பொ­லிசார் வழங்­கி­ய­தை­ய­டுத்து விரைவில் தொழு­கைக்­காக பள்­ளி­வாயல் திறக்­கப்­பட்டு ஐந்து வேளை தொழுகை மாத்­திரம் இடம்­பெ­று­மென முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அதி­காரி தெரி­வித்தார்.

இந்தப் பள்­ளி­வா­யலை திறந்து தொழு­வ­தற்­காக அனு­மதி வழங்­கிய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதற்­கான முழு முயற்­சி­யையும் மேற் கொண்டு அனு­ம­தி­யினை பெற்றுத் தந்த மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா மற்றும் இதற்காக பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஏனைய அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட நலன் விரும்பிகள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

சகவாழ்வும் சகோதரத்துவமும் சமதானமும் ஒற்றுமையும் இதன் மூலம் கட்டியெழுப்பப்படல் வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இப்பள்ளிவாயல் திறக்கப்பட்டு தொழுகைகள் இடம் பெறட்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.