ஜனாதிபதி வேட்பாளர் டாக்டர் இல்யாஸ் காலமானார்…!

0 29

ரஸீன் ரஸ்மின்

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான டாக்டர் ஐதுரூஸ் முஹம்­மது இல்யாஸ் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு கால­மானார்.
வைத்­தியர் இன்­திகாப், புத்­தளம் நகர சபையின் முன்னாள் உறுப்­பி­னர்கள் ஜமீனா கம­ருதீன் மற்றும் பஸ்­மியா ஆகிய மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான இவர், மர­ணிக்கும் போது வயது 79 ஆகும்.

கடந்த திங்­கட்­கி­ழமை (19) திடீ­ரென சுக­யீ­ன­ம­டைந்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான ஐதுரூஸ் முஹம்­மது இல்யாஸ், புத்­தளம் தள வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­று­வந்த நிலையில், வியாழன் இரவு கால­மா­ன­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஊடாக தனது அர­சியல் பிர­வே­சத்தை ஆரம்­பித்த இவர், அந்தக் கட்­சியின் உரு­வாக்­கத்­திற்கு மு.கா ஸ்தாபகத் தலை­வ­ரான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ர­புடன் இணைந்து மிகத் தீவி­ர­மாக செயற்­பட்டார்.
இலங்­கையில் போர் தீவி­ர­ம­டைந்த காலங்­களில் வட­மா­காண சபைத் தேர்­தலில் போட்­டி­யிட்டு உறுப்­பி­ன­ராக தெரி­வா­னது மாத்­தி­ர­மன்றி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் தெரி­வானார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராக வேட்புமனுவை சமர்ப்பிக்க சென்ற போது தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் டாக்டர் இல்யாஸ் வரவேற்கப்படுவதை காணலாம்….

 

மாத்­தி­ர­மன்றி, இலங்கை – ஈரான் ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் நட்­பு­றவை பேணி வரு­வ­தற்கும் டாக்டர் ஐதுருஸ் முஹம்­மது இல்யாஸ் மர­ணிக்கும் வரை செயற்­பட்டு வந்தார்.

அர­சியல் செயல்­பா­டு­களில் முதிர்ச்­சி­ய­டைந்த இவர், தேசிய அர­சியல் கட்­சி­க­ளு­டனும், கட்சித் தலை­வர்­க­ளு­டனும் மிகவும் நெருக்­க­மான உற­வையும் பேணி வந்­துள்ளார்.

புத்­த­ளத்தில் அனு­பவம் வாய்ந்த வைத்­தி­ய­ரான இவர், புத்­த­ளத்தில் இல­வச மருத்­துவ சேவை­க­ளையும் முன்­னெ­டுத்து வந்­துள்ளார்.

அத்­துடன், புத்­த­ளத்தில் பல சமூகம் சார்ந்த போராட்­டங்­களில் தலைமை வகித்­துள்­ள­துடன், 2022 ஆம் ஆண்டு கொழும்பு குப்­பை­களை புத்­தளம் அரு­வக்­காட்டில் கொட்­டு­வ­தற்கு அப்­போ­தைய அரசு ஏற்­பா­டுகள் செய்த போது, அதற்கு எதி­ராக புத்­த­ளத்தில் நடத்­தப்­பட்ட போராட்­டங்­களில் கலந்­து­கொண்ட இவர், சுழற்சி முறை­யி­லான உணவு தவிர்ப்பு போராட்­டத்­தி­னையும் ஆரம்­பித்து வைத்து எதிர்ப்பை வெளிக்­காட்­டினார்.

ஈரா­னிய மக்கள் அகிம்சை வழியில் போராடி வெற்­றி­பெற்­றதைப் போல, மகாத்மா காந்தி உப்பு சத்­தி­யா­கி­ர­கத்தை முன்­னெ­டுத்து இந்­தி­யா­வுக்கு சுதந்­தி­ரத்தை பெற்றுக் கொடுத்­ததைப் போல புத்­தளம் மக்­களும் அகிம்சை வழியில் போராடி தமது உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்று இவர் அடிக்­கடி கூறி­வந்தார்.

2010 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்­டு­களில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட இவர் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் சுயேட்சை வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யி­ருந்தார்.

1979 ஆம் ஆண்டு ஈரானில் ஏற்­பட்ட இஸ்­லா­மிய புரட்­சியின் பிர­தி­ப­லிப்­பாக இலங்­கையில் அந்தப் போராட்­டத்தை அவர் ஆத­ரித்தார்.

மக்­க­ளோடு மக்­க­ளாக வாழ்ந்து, தேர்தல் காலங்­களைத் தவிர பெரும்­பாலும் இலை மறை காயாக அவர் இருந்த போதிலும், அவ­ரி­லி­ருந்து புரட்­சி­க­ர­மான எண்ணம் எப்­பொ­ழுது புறப்­ப­டு­கி­றது என்­பது பல­ருக்கு விசித்­தி­ர­மாக இருந்­தி­ருக்­கி­றது. அத­னா­லேயே அவரை வித்­தி­யா­ச­மான அர­சி­யல்­வா­தி­யொ­ரு­வ­ராக நான் பார்க்­கிறேன். மக்கள் மத்­தியில் சர்வ சாதா­ர­ண­மாக நடந்து கொள்ளும் அவர் காலத்­திற்கு காலம் ஏற்­படும் அர­சியல், சமூக எழுச்­சி­யினால் ஏற்­படும் விழிப்­பு­ணர்ச்­சி­யி­னாலும் தன்னைத் தானா­கவே புடம் போட்­டுக்­கொண்டு, புது­மையைப் புகுத்­தி­ய­வ­ராக இருந்­தி­ருக்­கிறார்.

மாவட்ட சபை தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகி­ய­வற்றில் மட்­டு­மல்ல 1994 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஊடாக யாழ்ப்­பாண மாவட்­டத்தில் பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் போட்­டி­யிட்டு அவர் வெற்­றி­பெற்றார்.
ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பாளர் ஒரு­வ­ராக இம்­மு­றையும் கள­மி­றங்­கி­யி­ருந்த டாக்டர் ஐதுரூஸ் முகம்­மது இல்யாஸ் ஒரு புரட்­சி­க­ர­மான அர­சி­யல்­வா­தி­யாக பல­ராலும் நோக்­கப்­ப­டு­கிறார்.

அன்­னா­ரது மரணம் புத்­தளம் மாவட்­டத்தில் உள்ள மூவின மக்கள் மத்­தியில் மாத்­தி­ர­மன்றி, அர­சியல் தலை­வர்கள் மத்­தி­யிலும் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அன்­னாரின் ஜனாஸா கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று புத்­தளம் மஸ்­ஜிதுல் பகா முஸ்லிம் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­ப­ட்டது.

துணிச்சல்மிக்க அர­சி­யல்­வாதி ஒரு­வரை புத்­தளம் முஸ்­லிம்கள் மட்­டு­மல்ல, இலங்கை வாழ் முஸ்­லிம்கள் இழந்­தி­ருப்­ப­தாக டாக்டர் ஐ.எம். இல்­யாஸின் மறைவு குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான பல்துறை ஆளுமையின் இழப்பு உண்மையிலேயே கவலைக்குரியது. அன்னாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவன பாக்கியத்தை வழங்குவானாக!

அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், புத்தளம் வாழ் மக்களுக்கும் மன ஆறுதலை வழங்குவானாக!– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.