ஜனாஸா எரிப்பு விவகாரம் : கோட்டா, நிபுணர் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சஜித்துடன் இணக்கம் என்கிறார் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்

0 52

(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா தொற்றுப் பர­வலின் போது மர­ணித்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை தகனம் செய்­தமை தொடர்பில், அப்­போ­தைய ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­பக்ஷ மற்றும் அது தொடர்பில் பரிந்­துரை செய்­த­தாக கூறப்­ப‌டும் நிபுணர் குழு­வுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப‌டும் என ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் தேர்தல் பிர­சார பொறுப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தெரி­வித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஜனா­தி­பதித் தேர்­தலில் ஆத­ர­வ­ளிக்க எடுத்த முடிவின் போது செய்­து­கொண்ட இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில், இந்த சட்ட நட­வ­டிக்­கையை புதிய அர­சாங்­கத்தின் ஊடாக முன்­னெ­டுக்க தேவை­யான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள‌­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்.

முஸ்லிம் ஜனாஸா எரிப்பு இம்­முறை, ஜனா­தி­பதி தேர்தல் களத்தில் முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வதில் பிர­தான பிர­சார விட­ய­மாக மாறி­யுள்ள நிலையில், தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனாஸா எரிப்பு விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நட்ட ஈடு வழங்க நடவ­டிக்கை எடுக்­க­ப்படும் என குறிப்­பிட்­டி­ருந்தார்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே, ஜனாஸா எரிப்பு விவ­கா­ரத்­துக்­காக முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ மற்றும் நிபுண‌ர் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.