குறிஞ்சாக்கேணி பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்சனுக்கு வழங்கத் தீர்மானம்

0 42

(றிப்தி அலி)
அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதி­யத்தின் நிதி­யு­தவியில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள கிண்­ணியா, குறிஞ்­சாக்­கேணி பாலத்தின் புன­ர­மைப்பு பணி­களை ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்ஷன் எனும் தனியார் கம்­ப­னிக்கு வழங்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

இது தொடர்பில் போக்­கு­வ­ரத்து மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சர் பந்­துல குண­வர்த­ன­வினால் கடந்த மே 26ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­திற்கு அமை­யவே இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

வீதிக் கட்­ட­மைப்பு அபி­வி­ருத்திக் கருத்­திட்­டத்தின் கீழ் சுமார் 151.3 கிலோ மீற்றர் நீள­மான பதுளை – செங்­க­லடி வீதியின் புன­ர­மைப்பு பணி­க­ளுக்கு 60 மில்­லியன் அமெ­ரிக்க டொலரினை அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதியம் நீண்ட கால கட­னு­த­வி­யாக வழங்­கி­யி­ருந்­தது.

இந்த கருத்­திட்­டத்தில் எஞ்­சி­யுள்ள நிதியின் ஊடாக கிண்­ணியா, குறிஞ்­சாக்­கேணி பாலத்­தினை புன­ர­மைப்பு செய்ய போக்­கு­வ­ரத்து மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சு தீர்­மா­னித்­தி­ருந்­தது.

இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் ஹமூத் அல்-­கஹ்­தா­னியின் சிபா­ரி­சிற்­க­மைய அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதியம் இதற்­கான அனு­ம­தியை வழங்­கி­யுள்­ளது.

இத­னை­ய­டுத்து குறித்த பால புன­ர­மைப்பு பணி­க­ளுக்­காக அமைச்­சினால் விலை­மனுக் கோரப்­பட்ட போது ஒன்­பது விலை­மனுக் கோரல்கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

அமைச்­ச­ர­வை­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிரந்­தரப் பெறுகைக் குழுவின் விதந்­து­ரைக்­க­மைய ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்ஷன் எனும் தனியார் கம்­ப­னிக்கு குறித்த பால புன­ர­மைப்பு தொடர்­பான ஒப்­பந்­தத்தை வழங்க அமைச்­ச­ரவை தீர்­மா­னித்­துள்­ளது.

சுமார் 100 மீற்றர் நீள­மான இப்­பா­லத்தின் முதற்­கட்ட பணி­களை மேற்­கொள்ளும் பொறுப்பு வீ.வீ. கரு­ணா­ரத்ன ரூ கம்­ப­னி­யிடம் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இப்­பால நிர்­மாணப் பணிகள் மந்­த­க­தியில் இடம்­பெற்ற நிலையில் பாலத்தின் ஒரு பகுதி உடைக்­கப்­பட்­டது. இதனால், ஆரம்பிக்கப்பட்ட படகு பாதை சேவையில் பயணித்த எட்டுப் பேர் கடந்த 2021.11.23ஆம் திகதி உயிரிழந்தனர். இதனையடுத்து இப்பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.