கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் ஜனாஸா எரிப்பு விவகாரம்: விசாரணைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு

0 31
  • அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முன்னிலையில் ஜனாதிபதி உறுதியளிப்பு
  • இலங்கையில் இஸ்ரேலியர்களின் ஊடுருவல் குறித்தும் உலமா சபை சுட்டிக்காட்டு

கொவிட் தொற்றின் போது சட­லங்­களை தகனம் மட்­டுமே செய்ய முடியும் என்ற கொள்­கையை அர­சாங்கம் அறி­விப்­ப­தற்கு கார­ண­மாக அமைந்­த­வர்கள் யார் என்­பதைக் கண்­ட­றிந்து நட­வ­டிக்கை எடுக்கும் பொருட்டு பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு ஒன்றை அமைக்க தான் நட­வ­டிக்கை எடுப்பேன் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா நிறை­வேற்றுக் குழு­வுடன் நேற்று முன்­தினம் மாலை நடை­பெற்ற சந்­திப்பில் உலமா சபை பிர­தி­நி­தி­களால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு பதி­ல­ளிக்கும் போதே ஜனா­தி­பதி இதனைக் குறிப்­பிட்டார்.

இந்த சந்­திப்­பின்­போது கருத்து வெளி­யிட்ட உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் ‘‘கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வர்­களை கட்­டாய தகனம் செய்ய வேண்டும் என கடந்த அர­சாங்கம் எடுத்த தீர்­மா­னத்தை நாம் பல­மாக எதிர்த்தோம். இத்­தீர்­மானம் நிரூ­பிக்­கப்­பட்ட ஆதா­ரங்­க­ளின்­படி எடுக்­கப்­பட்­டி­ருந்தால் அதனைக் காண்­பிக்­கு­மாறும் அதில் உண்மை இருந்தால் சட­லங்­களை எரிக்­கலாம் என்ற பத்­வாவை உலமா சபையே முன்­னின்று வழங்கும் என்றும் நாம் அவர்­க­ளிடம் கூறினோம். எனினும் எந்­த­வித ஆதா­ரமும் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில் உலக நாடுகள் அனைத்தும் சட­லங்­களை அடக்க அனு­ம­தித்த நிலையில் இலங்­கையில் மாத்­திரம் கட்­டாய தகனக் கொள்கை அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­தா­னது முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட பாரிய அநீ­தி­யாகும். என­வேதான் மன்­னிப்புக் கோருதல் இழப்­பீடு வழங்­குதல் என்­ப­தற்கு அப்பால் இந்த ஆதா­ர­மற்ற தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்கு கார­ண­மாக இருந்­த­வர்­க­ளையும் அர­சாங்­கத்தை தவ­றாக வழி­ந­டாத்­தி­ய­வர்­க­ளையும் கண்­ட­றிந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பதே ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் கோரிக்­கை­யாகும்’’ என்றார்.

இதன்­போது கருத்து வெளி­யிட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்­தபா சட­லங்­களை எரிக்கும் தீர்­மானம் முஸ்­லிம்­களைப் பழி­வாங்கும் நோக்கில் அர­சியல் ரீதி­யாக உந்­தப்­பட்டு எடுக்­கப்­பட்ட தீர்­மானம் என ஜனா­தி­ப­தி­யிடம் சுட்­டிக்­காட்­டினார்.

இதற்குப் பதி­ல­ளித்த ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க கடந்த கொரோனா வைரஸ் பர­வலின் போது மர­ணித்த முஸ்­லிம்கள் மற்றும் ஏனைய மதத்­தி­னரின் உடல்­களை தகனம் செய்­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு பரிந்­து­ரைத்த தரப்­பி­னரின் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக ஏனைய கட்சித் தலை­வர்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்து பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வொன்றை நிய­மிப்­ப­தாக தெரி­வித்தார்.

எமது அர­சாங்­கத்­தினால் நஷ்­ட­யீடு வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும். எனினும் புதிய பாரா­ளு­மன்­றத்தில் சகல கட்சித் தலை­வர்­க­ளி­னதும் இணக்­கத்­துடன் பாரா­ளு­மன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைத்து இந்த விடயம் தொடர்பில் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்­களைக் கண்­ட­றிந்து நட­வடிக் எடுக்க முடியும் என ஜனா­தி­பதி மேலும் சுட்­டிக்­காட்­டினார்.

இதன் போது எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் வெற்­றிக்கு மௌல­விமார் தமது ஆசி­களை தெரி­வித்­தனர். நாட்டின் பொரு­ளா­தார மீட்சி மற்றும் எதிர்­காலத் திட்­டங்கள் குறித்து மௌல­வி­மார்­க­ளுக்கு எடுத்­து­ரைத்த ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, அந்த வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­கான ஆணையை கோரு­வ­தற்­கா­கவே இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

தேர்தல் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­ததன் பின்னர் மகா­நா­யக்க தேரர்கள் மற்றும் ஏனைய மதத் தலை­வர்­களைச் சந்­தித்து ஆலோ­ச­னை­க­ளையும் வழி­காட்­டல்­க­ளையும் பெற்­றுக்­கொண்­ட­தாகத் தெரி­வித்த ஜனா­தி­பதி, அனைத்து மதங்­க­ளையும் சம­மாக நடத்­து­வ­தற்கு தான் அர்ப்­ப­ணிப்­புடன் இருப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

மேலும் பலஸ்­தீன மோதல்கள் தொடர்பில் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, பலஸ்­தீன நாடு தொடர்­பான இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டில் எந்­த­வித மாற்­றமும் இல்லை எனவும், அதற்­காக தான் தொடர்ந்தும் குரல்­கொ­டுப்­ப­தா­கவும் தெரி­வித்தார். இலங்கை அர­சாங்கம், ஜெரு­ச­லத்தில் புதிய கொன்­சூலர் அலு­வ­லகம் ஒன்றை திறந்­தி­ருப்­ப­தாக பரவும் தகவல் உண்­மைக்கு புறம்­பா­னது என்றும், இஸ்­ரே­லுக்குள் பணி­யாற்றும் இலங்­கை­ய­ருக்கு சேவை வழங்­கு­வ­தற்­காக 2000 ஆம் ஆண்டு முதல் இஸ்­ரே­லுக்குள் தூத­ரக சேவைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் இதன்­போது ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

இச் சந்­திப்­பின்­போது இலங்­கையின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் இஸ்­ரே­லி­யர்கள் தங்­கி­யி­ருப்­ப­துடன் நீண்ட கால குத்­தகை அடிப்­ப­டையில் கட்­டி­டங்­களைப் பெற்று தமது கொள்­கை­களை பிர­சாரம் செய்­வது குறித்தும் உலமா சபை பிர­தி­நி­திகள் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­தனர். இதற்கு பதி­ல­ளி்த்த ஜனா­தி­பதி இஸ்­ரே­லி­யர்கள் ரஷ்­யர்கள் மற்றும் உக்­ரே­னி­யர்கள் இலங்­கைக்கு சுற்­றுலா விசாவில் வருகை தரு­கின்­றனர். இதனை நாம் தடுக்க முடி­யாது. எனினும் இதற்கு அப்­பால அவர்கள் வேறு ஏதேனும் நட­வ­டிக்­கை­களி்ல் அவர்கள் ஈடு­ப­டு­கின்­ற­னரா என்­பது குறித்து தேடிப் பார்க்க முடியும் என்றார்.

கொழும்பு மாளி­கா­வத்­தையில் அமைந்­துள்ள அகில இலங்கை ஜம்­மி­யதுல் உலமா தலை­மை­ய­கத்­திற்குச் சென்ற ஜனா­தி­பதி, அதன் தலைவர் அஷ்-ஷெய்க் எம். ஐ. எம். றிஸ்வி மற்றும் நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­னர்­களைச் சந்தித்து கலந்துரையாடினார். உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷேக் அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷேக் ஏ. ஏ. அஹமட் அஸ்வர், உப தலைவர் அஷ்-ஷெய்க் எச். ஒமர்தீன், அஷ்-ஷெய்க் எம். ஜே. அப்துல் காலிக், உப தலைவர் அஷ்-ஷேக் ஐ. எல். எம். ஹாஷிம், உப தலைவர் அஷ்-ஷேக் ஏ. எல். எம். பழீல் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி எம்.பி, பைசர் முஸ்தபா, முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.