ஜனாதிபதித் தேர்தல் குறித்த சமூக நீதிக் கட்சியின் நிலைப்பாடு

0 46

இலங்­கையின் வர­லாறு நெடு­கிலும் இந்­நாட்டின் இரு­பெரும் தேசிய கட்­சி­களும், அவற்­றி­லி­ருந்து பிரிந்­து­போன கட்­சி­களும், பல்­வகை மக்­களை சம உரி­மை­யுள்ள பிர­ஜை­க­ளாக நடாத்­தாமல் முரண்­பா­டு­க­ளையும் யுத்­தங்­க­ளையும் உரு­வாக்கி, தங்கள் அர­சியல் லாபங்­களை அடைந்­து­கொண்­ட­துடன், அதி­காரத் துஷ்­பி­ர­யோகம் குறித்தும், தமது நிர்­வாகத் திற­னின்மை குறித்தும், ஊழல்கள் குறித்தும் வர­லாறு நெடு­கிலும் மக்­களின் கவ­னத்தை மிகவும் லாவ­க­மாக திசை­தி­ருப்பி வந்­துள்­ளன.

எனினும் 2022 இல் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­க­டி­யா­னது, இவ்­வா­றான நாட்டைக் குட்­டிச்­சு­வ­ராக்­கிய சக்­தி­களை விரட்­டி­ய­டிக்க வேண்டும், அர­சியல் முறை­மையில் மாற்றம் வேண்டும், எல்லா இன மக்­க­ளையும் சமத்­து­வ­மாக நடாத்தும் ஒரு பொறி­மு­றையை நோக்கி நகர்தல் வேண்டும் என்ற முக்­கி­ய­மான தீர்­மா­னங்­களை நோக்­கிய ஒரு பெரும் மக்கள் போராட்­டத்­திற்கு இட்டுச் சென்­றது.

இந்­நி­லையில் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில், சமூக நீதிக் கட்சி தனது உத்­தி­யோ­க­பூர்வ நிலைப்­பா­டு­க­ளாக பின்­வ­ரு­வ­ன­வற்றை மக்­க­ளுக்கு முன்­வைக்­கி­றது.

1. கடந்த 76 ஆண்­டு­க­ளாக மாறி மாறி ஆட்சி செய்து, நம் தாய்த் திரு­நாட்டை சீர­ழித்து சின்­னா­பின்­ன­மாக்­கிய அர­சியல் சக்­தி­க­ளுக்கு உங்கள் ஆத­ர­வையும், வாக்­கு­க­ளையும் வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்­கி­றது.

2. இந்தத் தேர்­தலில் சமூக நீதிக் கட்சி, எந்­த­வொரு கூட்­ட­ணிக்கோ, வேட்­பா­ள­ருக்கோ தமது நேரடி ஆத­ரவை வழங்­காது.

3. அதே நேரம், இந்­நாட்டில் ஆட்­சி­யியல் முறைமை மாற்றம் (system change), அர­சியல் கலா­சா­ரத்தில் மாற்றம் (change in the political culture) என்­ப­வற்றை இலக்­காகக் கொண்டு செயற்­படும் ‘மாற்று சக்­திக்கு’ உங்கள் வாக்­கு­களை கட்­டாயம் அளிக்­கு­மாறு கேட்டுக் கொள்­கி­றது.

4. ஆனால் அந்த வாக்கை வெறு­மனே ‘இந்த மாற்­றங்கள் வரும் என்­கிற நம்­பிக்­கையில்’ மாத்­திரம் வாக்­க­ளிக்­கக்­கூ­டாது. ஏனெனில் இந்த மாற்று சக்­தியின் தேவை என்­பது சுதந்­திர இலங்­கையின் பின்னர், பெயர் தெரிந்த, தெரி­யாத, தங்­க­ளது உயிர், உடை­மைகள் மற்றும் காலத்தை செல­வ­ழித்து இவ்­வா­றான ஒரு மாற்­றத்­திற்­காக பேசியும் எழு­தியும் செயற்­பட்டும் வந்த அனை­வ­ரதும் ஒரு எதிர்­பார்ப்பு. ஆகவே இவ்­வா­றான ஒரு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடத்தில் ஒரு பாரிய பொறுப்பு எம் அனைவர் மீதும் சுமத்­தப்­பட்­டுள்­ள­தாக உணர்­கிறோம். யாருக்கும் நிபந்­த­னை­யற்று ஆத­ரவு தெரி­விப்­பது, ஈற்றில் அதி­கா­ரத்­திற்கு வரு­ப­வர்­க­ளுக்கு மித­மிஞ்­சிய அதி­கா­ரத்தை வழங்­கு­வ­தா­கவும், அவர்­களின் பொறுப்­புக்­கூறல் என்ற கட­மை­யி­லி­ருந்தும் அவர்­களை விடு­வி­டுப்­ப­தா­கவும் மாற்­றி­விடும்.

5. ஆகவே கீழ்­கு­றிப்­பி­டப்­படும் நிபந்­த­னைகள் உள்­ளிட்ட முக்­கி­ய­மான அர­சியல் கோரிக்­கைகள் பற்­றிய தெளி­வான நிலைப்­பா­டு­களை மக்கள்/வாக்­கா­ளர்கள், மாற்றுச் சக்­தி­யிடம் உறு­தி­செய்து கொள்ள வேண்டும்.

அ. தேசிய பிரச்­சி­னைகள்:
1. இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு: எல்லாத் தேசிய இனங்­க­ளையும், அடை­யாளம் காணப்­பட்ட 19 இற்கும் மேற்­பட்ட இனக்­கு­ழுக்­க­ளையும் உள்­ள­டக்­கிய, பொருத்­த­மான அதி­காரப் பகிர்வை வழங்கும் வகை­யி­லான அர­சியல் தீர்வுத் திட்­டத்தை வரைய உறுதி பூணல். அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக அனைத்து இலங்­கை­ய­ரையும் உள்­ளீர்க்கும் வகை­யி­லான புதிய அர­சி­ய­ல­மைப்பின் (new constitution) முக்­கி­ய­மான உள்­ள­டக்­கத்தை மக்கள் முன் சமர்ப்­பித்தல் மற்றும் அதனை உரு­வாக்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­படும் குழுவில் அனைத்து இனக்­கு­ழுக்­களின் பிர­தி­நி­தி­க­ளையும் உள்­ள­டக்கல்.

2. பொரு­ளா­தாரத் தீர்வு: சர்­வ­தேச நாணய நிதி­யத்­தினை எவ்­வாறு கையாள்­வது என்று வெளிப்­ப­டை­யாக முன்­வைத்தல். நாடு எதிர்­நோக்­கி­யி­ருக்கும் பார­தூ­ர­மான பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து நாட்டை மீட்­ப­தற்­கான நடை­முறைச் சாத்­தி­ய­மான பொரு­ளா­தார மீட்பு வேலைத்­திட்­டத்­தினை தெளி­வாக முன்­வைத்தல்.

3. நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழித்தல்: கடந்த 46 வரு­டங்­க­ளாக இந்த நாட்டின் பொரு­ளா­தாரம், அர­சியல், மனித உரி­மைகள், தேசிய ஒற்­றுமை போன்ற அனைத்து விட­யங்­க­ளையும் சீர­ழித்­ததில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைக்கு பெரும் பங்­குள்­ளது. இந்த நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை எமது நாட்­டிற்குப் பொருத்­த­மற்­றதும் மிகவும் ஆபத்­தா­னதும் என்றும் ஆரம்­பத்­தி­லேயே இனம்­கா­ணப்­பட்ட ஒன்­றாகும். எனவே இதனை ஒழிப்­பது என்­பது ஒவ்­வொரு தேர்­தலின் போதும் பிர­தான பேசு பொரு­ளா­கவும், வாக்­கு­று­தி­க­ளாவும், தேர்தல் ஒப்­பந்­தங்­க­ளாவும் இருந்து வந்­துள்­ளது. எனவே இந்தத் தேர்­தலில் வெற்­றி­பெறும் பட்­சத்தில் நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை­யினை ஒழிப்­பது குறித்தும் எவ்­வ­ளவு காலத்தில் ஒழிப்­பது என்­பது குறித்தும் தெளி­வாக முன்­வைக்க வேண்டும்.

4. சமூக, சமய, கலா­சார உரி­மைகள்: ஒவ்­வொரு சமூ­கத்­திற்­கு­மான அல்­லது ஒவ்­வொரு இனத்­திற்­கு­மான தனித்­து­வ­மான சமூக, சமய, கலா­சார உரி­மை­க­ளையும் பண்­பாட்டுத் தனித்­து­வங்­க­ளையும் உத்­த­ர­வா­தப்­ப­டுத்தல். இதன் மூலம் பன்­மைத்­து­வத்­தையும், பல்­வ­கை­மை­யையும் பேணிப் பாது­காத்தல். இவ்­வி­வ­கா­ரத்தில் தம்மால் ஏற்­க­னவே கடந்த காலத்தில் கட்­சி­யா­கவோ அல்­லது கூட்­ட­ணி­யா­கவோ முன்­வைக்­கப்­பட்­டுள்ள சமூக, சமய, கலா­சார உரி­மைகள் குறித்த சர்ச்­சைக்­கு­ரிய நிலைப்­பா­டு­களில் மாற்­றங்கள் இருந்தால், புதிய நிலைப்­பா­டு­களை மக்­க­ளிடம் முன்­வைத்து தெளி­வு­ப­டுத்தல். சகல தனியார் சட்­டங்கள் மற்றும் சமூக சமய கலா­சார உரி­மைகள் சார்ந்த விட­யங்கள் குறித்த கொள்­கை­களை வகுப்­ப­தாக இருந்தால், அந்­தந்த சமூக, சமய தரப்­பி­னரின் கலந்­தா­லோ­ச­னை­யுடன் கூடிய பங்­கேற்பை உறு­தி­செய்யும் பொறி­மு­றையை முன்­வைத்தல்.

5. தேசிய கல்விக் கொள்கை: முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள தேசிய கல்விக் கொள்கைச் சட்­டகம் (National Educational Policy Framework) தொடர்­பான தெளி­வான நிலைப்­பாட்­டினை முன்­வைத்தல். அதில் அவ­சி­யப்­படும் மாற்­றங்கள், மீளாய்­வு­களை சுட்­டிக்­காட்­டுதல்.

6. சட்டத் திருத்­தங்கள்:
I. சட்­ட­வாக்­கத்தின் பின்­ன­ரான நீதித்­துறை மீளாய்­வினை (Post Enactment Judicial Review) அறி­முகம் செய்தல். இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அடிப்­படை மனித உரி­மை­களை பாதிக்கும் வகையில், நிறை­வேற்­றப்­பட்­டுள்ள சட்­டங்­களின் மூலம், பல அடிப்­படை மனித உரிமை மீறல்கள் அரசி இயந்­தி­ரத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. ஆகவே ஒரு சட்டம் நிறை­வேற்­றப்­பட்ட பின்­னரும் அச்­சட்­டத்தின் வலி­தான தன்­மையை நீதி­மன்­றத்தில் எக்­கா­லத்­திலும் கேள்­விக்­குட்­ப­டுத்­தக்­கூ­டிய நீதித்­துறை மீளாய்­வினை அறி­முகம் செய்தல் வேண்டும். அத்­தோடு ஏற்­க­னவே நடை­மு­றையில் இருக்கும் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் போன்ற மிலேச்­சத்­த­ன­மான சட்­டங்­களை இல்­லா­தொ­ழித்தல் வேண்டும்.

II. சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் ஒன்­றுக்­கொன்று முரண்­பா­டுகள் ஏற்­ப­டக்­கூ­டிய (conflict of interest) கட­மை­க­ளான ‘அர­சாங்­கத்­திற்கு தேவை­யான சட்ட ஆலோ­ச­னை­களை வழங்­குதல் மற்றும் மக்­க­ளுக்­கான பொது வழக்­க­றி­ஞ­ராக (public prosecutor) இருத்தல் என்­பன காணப்­ப­டு­வ­தனால், சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் இருந்து பொது வழக்­க­றிஞர் அலு­வ­ல­கத்தை (office of public prosecutor) பிரித்து அதனை தனி­யொரு சுயா­தீ­ன­மான அலு­வ­ல­க­மாக (office of independent prosecutor), 1994 மேல், தென் மற்றும் சப்­ர­க­முவ மாகாண காணா­ம­லாக்­கப்­பட்டோர் ஆணைக்­குழு மற்றும் 1998 அகில இலங்கை காணா­ம­லாக்­கப்­பட்டோர் ஆணைக்­குழு அறிக்­கை­களின் முன்­மொ­ழிவின் படி நடை­மு­றைப்­ப­டுத்தல்.

7. சிறு­பான்மை இனங்கள் மீதான பார­பட்­சங்கள்: எண்­ணிக்கைச் சிறு­பான்மை இனங்கள், எண்­ணிக்கைச் சிறு­பான்மை என்ற ஒரே கார­ணத்­திற்­காக வளப்­பங்­கீ­டுகள், அரச உயர் பதவி நிய­ம­னங்கள் போன்ற அம்­சங்­களில் காட்­டப்­படும் பார­பட்­சங்­களை இல்­லா­தொ­ழிக்க நட­வ­டிக்கை எடுத்தல். அதே­வேளை எண்­ணிக்கைப் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கும் அநீ­தி­யி­ழைக்­கப்­படக் கூடாது. இந்த அடிப்­ப­டையில் சம வாய்ப்பை உறு­தி­செய்யும் வகையில் கொள்­கை­க­ளையும் பொறி­மு­றை­க­ளையும் வகுத்தல்.

8. பெண்கள் மற்றும் இளை­ஞர்­க­ளுக்­கான அர­சியல் பிர­தி­நி­தித்­துவம்: பெண்கள் மற்றும் இளை­ஞர்­க­ளுக்­கான அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் பாரா­ளு­மன்றம், ஏனைய அரச அதி­கார கட்­ட­மைப்­புக்­க­ளிலும் குறைந்­தது 25% ஆக உறு­திப்­ப­டுத்தல்.

ஆ. ஏனைய பிரச்­சி­னைகள்:
1. போர்­கா­லத்தில் ஏற்­பட்ட இழப்­புக்­களை மதிப்­பீடு செய்து, நியா­ய­மான முறையில் உரிய இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்தல். பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களை மீளக்­கு­டி­ய­மர்த்தல், காண­ா மலாக்­கப்­பட்ட மக்கள் குறித்த நியா­ய­மான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளல் மற்றும் யுத்­தத்­தினால் இழக்­கப்­பட்ட காணி­களை உரிய மக்­க­ளுக்கு மீள வழங்­குதல்.

2. கொவிட் தொற்று காலத்தில் இடம்­பெற்ற கட்­டாய ஜனாஸா மற்றும் பூத­வுடல் எரிப்­புக்­கான கார­ணங்­களை
ஆராய்ந்து, நாட்டைத் தவ­றான முறை யில் வழி­ந­டாத்­திய தரப்­பி­னரைக் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­துதல். இதன் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட அனைத்து சமூக மக்­க­ளுக்கும் உரிய நஷ்­ட­ஈட்­டினைப் பெற்­றுக்­கொ­டுத்தல்.

3. அறபு, இஸ்­லா­மிய நூல்கள் மீதான இறக்­கு­ம­தியைத் தடை செய்யும் அர­சாங்­கத்தின் தீர்­மா­னத்தை ரத்து செய்தல். இதன் விளை­வாக நிலவும் அல்­குர்ஆன் இறக்­கு­மதித் தடை­யையும் முடி­வுக்குக் கொண்டு வருதல்.

4. நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் நிலவும் காணிப் பிரச்­சி­னை­களைத் தீர்க்க நட­வ­டிக்கை எடுத்தல். குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு கோர­ளைப்­பற்று மத்தி பிர­தேச செய­லாளர் பிரிவு தொடர்பில் 03.03.2000 இல் வெளி­யி­டப்­பட்டு 13.07.2000 இல் அமைச்­ச­ர­வையில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பன்­னம்­ப­லன ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­துதல்.

5. சுனாமி பேர­னர்த்தம் ஏற்­பட்டு 20 வரு­டங்கள் நிறை­வு­று­கின்ற நிலையில், இவ்­வ­ளவு நீண்ட கால­மாக வழங்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கப்­படும் அம்­பாறை மாவட்டம் நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டத்தை உரிய பய­னா­ளி­க­ளுக்கு வழங்­குதல்.

6. புத்­தளம் மாவட்டம் நுரைச்­சோலை அனல் மின் நிலை­யத்­தினால் ஏற்­படும் சூழ­லியல் மற்றும் சுகா­தார பாதிப்­பு­க­ளுக்­கான தீர்­வு­களை முன்­வைத்தல்.

7. மலை­யகத் தமிழ் மக்கள் இலங்­கைக்கு வந்து 200 வரு­டங்­களைக் கடந்த நிலையில் எமது நாட்டில் ஏனைய பிர­ஜை­க­ளுக்­கு­ரிய அடிப்­படை வசிப்­பிடம், கல்வி, சுகா­தார, நிர்வாக மற்றும் தொழில்வாய்ப்புக்கள் என்பவற்றை உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இதற்குப் பிர­தான கார­ணி­யாக இருப்­பது, அவர்­க­ளுக்கு நில உரிமை மற்றும் சம­மான பிர­ஜா­வு­ரிமை மறுக்­கப்­பட்டு வரு­வ­தாகும். எனவே இம்­மக்­க­ளுக்­கான இம்­மக்­களை கௌர­வ­மான சமூ­க­மாக வாழ வைப்­ப­தற்­கான தேவை­யான சம­மான பிர­ஜா­வு­ரிமை மற்றும் நில உரி­மை­யினை வழங்­கு­வ­தற்­கான முன்னெடுப்பக்களை மேற்கொள்ள வேண்டும்.

மற்றும் இதுபோன்ற விடயங்கள்.
எனவே சமூக நீதிக் கட்சி, மக்­க­ளிடம், நாட்டைக் குட்டிச் சுவ­ராக்­கிய சக்­தி­க­ளுக்கு எதி­ராக உங்கள் வாக்­கு­களை வழங்­கு­மாறு கேட்­டுக்­கொள்­வ­தோடு, மாற்றுச் சக்­தி­யிடம் மேற்­கு­றிப்­பிட்ட பிரச்­சி­னை­க­ளைத்­தீர்ப்­ப­தற்­கான விரி­வான திட்­டங்கள் இருக்­கின்­ற­னவா என்று உங்கள் பிர­தே­சத்தில் அல்­லது தேசிய மட்­டத்தில் உள்ள மாற்றுச் சக்­தியின் பிர­தி­நி­தி­க­ளிடம் உறு­திப்­ப­டுத்திக் கொண்டு அல்­லது அதனைக் கொண்டு வரு­வ­தற்­கான அழுத்­தங்­களை வாக்­க­ளிக்க முன்னர் பிரி­யோ­கித்து வாக்­க­ளிக்கும் ஒவ்­வொ­ரு­வரும், இந்தத் தேர்­தலில் பங்­கா­ளி­க­ளாக மாறி உங்கள் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.