ரணிலை சந்தித்த தேசிய காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவை உறுதிப்படுத்தியது

0 60

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம். அதா­வுல்லா தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம். அதா­வுல்லா மற்றும் கட்­சியின் ஏனைய உறுப்­பி­னர்கள் நேற்­றை­ய­தினம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவை நேரில் சந்­தித்து இது குறித்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தனர்.

இந்த நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு, நாட்டில் நிலவும் பொரு­ளா­தார அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தற்­போது செயல்­ப­டுத்­தி­யுள்ள வேலைத்­திட்­டத்தின் மீது நம்­பிக்கை உள்­ளது. எனவே எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­ப­தியின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவோம் என ஏ.எல்.எம். அதா­வுல்லா எம்.பி உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இதன்­போது இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பது தொடர்பிலான தேசிய காங்கிரஸின் பரிந்துரைகள் மற்றும் யோசனைகள் அடங்கிய பிரேரணை ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.