கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் குர்ஆன் வெளியில் எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் தாமதம்

0 60

(றிப்தி அலி)
கடந்த 50 நாட்­க­ளுக்கு மேலாக கொழும்பு துறை­மு­கத்தில் தேங்கிக் கிடக்­கின்ற புனித அல்­குர்­ஆ­ன் பிரதிகளை விடுப்­ப­தற்கு அர­சாங்­கத்­தினால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள போதிலும் குறித்த குர்­ஆன்­களை வெளியில் எடுப்­ப­தற்­கான எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் இது­வரை உரிய நபர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என சுங்கத் திணைக்­கள தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் பைசல் ஆப்தீனின் பெய­ருக்கு மக்­காவில் வசிக்­கின்ற இலங்­கை­யினைச் சேர்ந்த சாதீக் ஹாஜி­யா­ரினால் அனுப்­பப்­பட்ட புனித அல்­குர்ஆன் மற்றும் அதன் சிங்­கள, தமிழ் மொழி­பெ­யர்ப்பு, இஸ்­லா­மிய நூல்கள் ஆகி­ய­வற்­றினை கொண்ட கொள்­கலன் கடந்த ஜூன் 22ஆம் திகதி கொழும்புத் துறை­மு­கத்­தினை வந்­த­டைந்­துள்­ளது.

இதில் சுமார் 20 ஆயிரம் குர்ஆன் பிர­தி­களும் சுமார் 15 ஆயிரம் குர்ஆன் மொழி­பெ­யர்ப்பு பிர­தி­களும், இஸ்­லா­மிய நூல்­களும் காணப்­ப­டு­வ­தாக ஸாதிக் ஹாஜியார் தெரி­வித்­துள்ளார்.

இந்த கொள்­க­ல­னி­லுள்ள அரபு மொழி மூல­மான புனித அல்­குர்­ஆன்­களை மாத்­திரம் நாட்­டுக்குள் அனு­ம­திப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் புத்­தக விமர்­சன மற்றும் வெளி­யீட்டுக் குழு, கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

இத­னை­ய­டுத்து பாது­காப்பு அமைச்சும் அரபு மொழி­யி­லுள்ள புனித அல்­குர்­ஆன்­களை நாட்­டுக்குள் அனு­ம­திப்­ப­தற்கு அண்­மையில் அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

எனினும், அரபு மொழி­யி­லுள்ள புனித அல்­குர்­ஆன்­களை துறை­மு­கத்­தி­லி­ருந்து வெளியில் எடுப்­ப­தற்கு நேற்று (14) புதன்­கி­ழமை வரை எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இந்த விடயம் தொடர்பில் மக்­கா­வி­லுள்ள சாதீக் ஹாஜி­யாரை தொடர்­பு­கொள்ள முயற்­சித்த போதிலும் அது பய­ன­ளிக்­க­வில்லை.

குறித்த அல்­குர்­ஆன்கள் துறை­மு­கத்தில் கடந்த 50 நாட்­க­ளாக தேங்கிக் கிடந்­த­மைக்­காக சுமார் 30 இலட்சம் ரூபா­வினை செலுத்­து­மாறு துறை­முக அதி­கார சபை­யினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இதே­வேளை, துறை­மு­கத்தில் தேங்கிக் கிடக்­கின்ற புனித அல்­குர்ஆன் மற்றும் அதன் சிங்­கள, தமிழ் மொழி­பெ­யர்ப்பு, இஸ்லாமிய நூல்கள் ஆகியவற்றினை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அண்மையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.