குச்சவெளியில் முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை அபகரிக்க பிக்கு முயற்சி

0 105

திரு­கோ­ண­மலை, குச்­ச­வெளி, இலந்­தைக்­குளம் பகு­தியில் முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான வயல் காணி­களை அப்­ப­கு­தி­யி­லுள்ள விகா­ரையின் விகா­ரா­தி­பதி துப்­ப­ரவு செய்­வதால் அப்­ப­கு­தியில் பதற்ற நிலை எழுந்­துள்­ளது. இச் சம்­ப­வ­மா­னது 25.07.2024 அன்று இடம்­பெற்­றுள்­ளது.

குச்­ச­வெளி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட இலந்­தைக்­குளம் 5ஆம் கட்­டைப்­ப­கு­தி­யி­லுள்ள பிச்­சமல் புரான ரஜ­மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி குச்­ச­வெ­ளியான் குளத்­துக்கு அருகே, முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான விவ­சாய நிலங்­களை ஜே.சி.பி இயந்­திரம் மூலம் துப்­பு­ரவு செய்ய முயற்­சித்த போது அங்கு பதற்ற நிலை தோன்­றி­யது. அப் பகு­திக்கு வருகை தந்த காணி உரி­மை­யா­ளர்கள் தமது காணி­களை பௌத்த பிக்கு தலை­மை­யி­லான குழு­வினர் ஆக்­கி­ர­மிப்­ப­தாக குற்­றம்­சாட்­டி­ய­தை­ய­டுத்து அங்கு பதற்­ற­மான நிலை தோற்றம் பெற்­றது. இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட காணி உரி­மை­யா­ளர்கள் குச்­ச­வெளி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ள­துடன்; ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கும் அறி­வித்­துள்­ள­தாக குச்­ச­வெளி விவ­சாய சம்­மே­ள­னத்தின் தலைவர் ஜே.எம்.ரகுமான் யூசுப் தெரி­வித்தார்.

இந்த விடயம் குச்­ச­வெளி பிர­தேச செய­லா­ளரின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, குறித்த காணி துப்­பு­ரவு நட­வ­டிக்கை தற்­கா­லி­க­மாக இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜே.எம்.ரகுமான் யூசுப் தெரி­வித்தார்.

இக் காணி­களின் வர­லாறு தொடர்பில் ஜே.எம்.ரகுமான் யூசுப் மேலும் குறிப்­பி­டு­கையில், “இலந்­தைக்­குளம் பகு­தியில் காலா­கா­ல­மாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் யுத்­தத்தின் கார­ண­மாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்­டிய காலப்­ப­கு­தி­களில் வெவ்­வேறு பிர­தே­சங்­களில் இடம்­பெ­யர்ந்து வாழ்ந்து வந்­தனர். இங்கு வாழ்ந்த மக்­க­ளுக்கு 1 ஏக்கர் குடி­யி­ருப்புக் காணியும் 2 ஏக்கர் வயல் நிலமும் சொந்­த­மா­க­வி­ருந்­தது.

யுத்தம் நிறை­வுக்கு வந்த பின்னர் இப் பகு­தியில் மக்கள் குடி­யி­ருக்­கா­விட்­டாலும் தமது வயல் நிலங்­களில் விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வந்­தனர். இந் நிலையில் இப் பிர­தே­சத்­தி­லுள்ள பௌத்த விகா­ரையில் உள்ள பிக்கு, ஹம்­பாந்­தோட்டை வீர­கெட்­டிய பகு­தியைச் சேர்ந்­தவர். இவர் வீர­கெட்­டிய பகு­தி­யி­லுள்ள சிங்­க­ள­வர்­களை இங்கு அழைத்து வந்து எமது காணி­களை சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரித்து, துப்­பு­ரவு செய்து விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டவும் அங்கு பௌத்த விகாரை ஒன்றை அமைக்­கவும் முயற்­சித்து வரு­கிறார். இப் பகு­தியில் சிங்­கள மக்­களைக் குடி­யேற்­று­வ­தற்­கான சதித்­திட்­ட­மா­கவே இதனைப் பார்க்க வேண்­டி­யுள்­ளது.

இப் பகு­தியில் மக்கள் வாழ்ந்­த­தற்­கான பிறப்பு அத்­தாட்சி பத்­திரம், இறப்பு அத்­தாட்சிப் பத்­திரம், காணி ஆவ­ணங்கள் உட்­பட உடைந்த பாட­சாலைக் கட்­டடம், அரச கட்­ட­டங்­களும் இன்னும் ஆதா­ரங்­க­ளாக உள்­ளன. 1968 ஆம் ஆண்டு நிர்­மா­ணிக்­கப்­பட்ட கிணறு ஒன்றும் அதே இடத்தில் இன்­னமும் உள்­ளது. அப்­போது கட்­டப்­பட்ட வயல் வரம்­பு­களும் இன்னும் அழி­யாமல் காணப்­ப­டு­கின்­றது.

இப் பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான சுமார் 300 ஏக்கர் காணி உள்­ளது. அதில் 22 ஏக்கர் தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மீத­முள்ள நிலத்­தையே இப்­போது பௌத்த பிக்கு ஆக்­கி­ர­மிக்க முனை­கிறார். முன்னாள் ஆளுநர் அநுராதா யஹம்பத் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு கடந்த காலங்களில் உடந்தையாகவிருந்தார். எனினும் வன இலாகா திணைக்களத்தின் எதிர்ப்பு காரணமாக அவரது காலப்பகுதியில் இக் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கை வெற்றி பெறவில்லை. இந்நிலையில்தான் சில வருடங்கள் கழிந்து மீண்டும் இந்த ஆக்கிரமிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.