தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலகுவதாக சமூக நீதிக் கட்சி அறிவிப்பு

0 126

தேசிய மக்கள் சக்­தி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக நஜா முஹம்மத் தலை­மை­யி­லான சமூக நீதிக் கட்சி அறி­வித்­துள்­ளது. இது தொடர்பில் அக் கட்­சியின் பொதுச் செய­லாளர் சட்­டத்­த­ரணி றுடானி ஸாஹிர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் தேசிய அர­சி­ய­லிலும் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சி­ய­லிலும் மாற்­றங்­களை கொண்டு வர வேண்­டு­மென நாம் 2012 ஆம் ஆண்­டி­லி­ருந்து தொடர் தேர்ச்­சி­யாக செயல்­பட்டு வரும் ஒரு முற்­போக்­கான அர­சியல் குழு­வாகும்.

அந்த வகையில் மாற்று அர­சி­ய­லுக்­காக செயல்­படும் முற்­போக்கு சக்­தி­க­ளுடன் நாம் இணைந்து செயல்­பட்டு வரு­கிறோம். அந்த வகையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யு­டனும் நாம் 2012/2013 இலி­ருந்து நல்­லு­றவைப் பேணி வரு­வ­துடன் அர­சியல் ரீதி­யான செயல்­பா­டு­க­ளிலும் பல சந்­தர்ப்­பங்­களில் இணைந்து செயல்­பட்­டுள்ளோம்.

அந்தப் பின்­ன­ணியில் 2018/19 காலப்­ப­கு­தி­களில் மாற்று அர­சி­ய­லுக்­கான மூன்­றா­வது சக்தி ஒன்றை உரு­வாக்கும் செயல் திட்­டங்கள் பல்­வேறு அர­சியல் சமூக அமைப்­புக்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அவ்­வா­றான பல்­வேறு அமைப்­பு­க­ளு­டனும் நாம் நெருங்கி செயல்­பட்­டுள்­ள­துடன் அதனை உரு­வாக்­கு­வ­தற்­கான காத்­தி­ர­மான பங்­க­ளிப்­பு­க­ளையும் நாம் வழங்கி வந்தோம். 2019 ஆரம்­பத்தில் தேசிய மக்கள் சக்­தியின் உரு­வாக்­கத்தில் நாம் முக்­கிய பங்­கா­ளர்­க­ளாக நாம் செயற்­பட்டோம். 2019 ஜனா­தி­பதி தேர்­தலில் தோழர் அனு­ர­கு­மார திசா­நா­யக்­கவின் வெற்­றிக்­காக நாம் முன்­னின்று உழைத்தோம்.

எனினும் 2020 பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போது நாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய கட்­சியின் தீர்­மா­னத்தின் படி தேசிய மக்கள் சக்­தி­யி­லி­ருந்து நாம் வெளி­யே­றி­யமை ஒரு தவிர்க்க முடி­யாத நிகழ்­வாக அமைந்­து­விட்­டது.

எனினும் அந்தத் தீர்­மா­னத்தை நாம் மீள் பரி­சீ­லனை செய்து 2021 டிசம்பர் 20ஆம் திகதி நடை­பெற்ற தேசிய மக்கள் சக்­தியின் பேராளர் மாநாட்டில் நாம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கலந்து கொண்டோம்.

அன்­றி­லி­ருந்து நாம் தேசிய மக்கள் சக்­தியில் இணைந்து மாவட்ட மற்றும் உள்­ளூர் மட்ட அர­சியல் செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வந்தோம்.

இந்­நி­லையில் 2022 பெப்­ர­வரி நான்காம் திகதி நாம் சமூக நீதிக் கட்சி என்ற பெயரில் எமது கட்­சியை ஸ்தாபித்தோம்.

2023 மே 13ஆம் திகதி எமது கட்­சியின் முத­லா­வது பேராளர் மாநாடு நடை­பெற்­றது. அதில் தேசிய மக்கள் சக்­தியின் தலைவர் அனுர குமார மற்றும் பொதுச் செய­லாளர் வைத்­தியக் கலா­நிதி நிஹால் அபே­சிங்ஹ ஆகியோர் பங்­கேற்­றனர். அதனைத் தொடர்ந்து நாம் ஏற்­பாடு செய்த பல்­வேறு முக்­கிய அர­சியல் நிகழ்­வுகள் மற்றும் கலந்­து­ரை­யா­டல்­களில் தேசிய மக்கள் சக்­தியின் முக்­கிய பிர­மு­கர்கள் பேச்­சா­ளர்­க­ளா­கவும் வள­வா­ளர்­க­ளா­கவும் கலந்து கொண்­டனர். 2024 மார்ச் மாதம் நடை­பெ­ற­வி­ருந்த உள்­ளூ­ர­ாட்சி மன்றத் தேர்­தலில் பல இடங்­களில் எமது கட்சி சார்­பாக வேட்­பா­ளர்­க­ளையும் நாம் களம் இறக்கி இருந்தோம்.

இவ்­வாறு நாம் மிகவும் நெருக்­க­மாக அவர்­க­ளுடன் செயல்­பட்­டாலும் எம்மை ஒரு கூட்­ட­ணியின் பங்­கா­ளி­க­ளாக இணைத்துக் கொள்­வ­தற்கு தயக்கம் காட்டி வந்­தனர்.

இது தேசிய மக்கள் சக்­தி­யு­ட­னான தொடர் தேர்ச்­சி­யான சுமு­க­மான பய­ணத்­திற்கு எமக்கு ஒரு இடைஞ்­ச­லாக இருப்­ப­தா­கவே நாம் கரு­து­கின்றோம்.

எனவே இந்த விட­யத்­தையும் அதனால் களத்தில் ஏற்­படும் கருத்து, கொள்கை ரீதி­யான முரண்­பா­டுகள், நிர்­வாக ரீதி­யான முரண்­பா­டுகள், நாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் எமது வாக்­கா­ளர்கள், ஆத­ர­வா­ளர்கள் சார்­பான சமூக அர­சியல் விவ­கா­ரங்கள் குறித்த விட­யங்­களை கலந்­து­ரை­யாடி தீர்­வு­களை எட்­டு­வ­தற்­கான எந்த ஒரு உத்­தி­யோ­க­பூர்­வ­மான ஏற்­பாடும் தேசிய மக்கள் சக்­தி­யிடம் இருக்­க­வில்லை. இந்த விட­யத்­தினை தேசிய மக்கள் சக்­தியின் வழி­ந­டத்தும் குழு­வுக்கு நாம் பல­முறை வாய் மூல­மா­கவும் எழுத்து மூல­மா­கவும் தெரி­யப்­ப­டுத்­தியும் அதற்குப் பொருத்­த­மான முறையில் எந்த ஒரு சாத­க­மான பதிலும் அவர்கள் தரவும் இல்லை. அதற்­கான ஏற்­பா­டுகள் எத­னையும் மேற்­கொள்­ளவும் இல்லை. சுமார் கடந்த நான்­கரை வரு­டங்­க­ளாக நாம் இவ்வளவு நெருக்கமாக அவர்களுடன் இணைந்து செயல்பட்டும் இந்த அடிப்படையான நிர்வாக ரீதியான ஒரு கோரிக்கையை கூட அவர்களால் செய்து தர முடியாமல் போனமை எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் அவர்கள் மீதான அவநம்பிக்கையும் ஏற்படுத்திவிட்டது. இப் பின்னணியிலேயே நாம் தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீனமாக செயல்பட தீர்மானித்துள்ளோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.