இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும் என ‘திக்குவெல்லை ஷெய்க்’ கூறினார்

பிணையில் விடுதலையான பின் ஞானசார தேரர்

0 84

2014 ஜூன் 24ஆம் திகதி திக்­வெல்ல பகு­தியில் ஷேக் ஒரு­வரை சந்­தித்த போது இந்த நாட்­டுக்கு ஆபத்­தான விட­ய­மொன்று இருப்­ப­தாக கூறி, உல­க­ளா­விய பயங்­க­ர­வாத குழு­வொன்று இந்த நாட்டில் பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­யாக தாக்­கு­த­லொன்றை நடத்­த­வுள்­ள­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக கூறினார். அதன்­படி அதனை பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு நாங்கள் கூறினோம். நாட்டில் பிர­தான இடங்­களை இலக்கு வைத்து தாக்­கு­தல்­களை நடத்­த­வுள்­ள­தா­கவும் ஆயிரக் கணக்­கா­னோரை கொல்­வ­தற்கு திட்­ட­மி­டு­வ­தா­கவும் அவரால் கூறப்­பட்­டி­ருந்­தது. அன்று ராஜ­பக்ஷ ஆட்­சியின் போது அது தொடர்பில் பாது­காப்பு தரப்­பி­னரால் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது என பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

நான்கு வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தால் பிணையில் விடு­விக்­கப்­பட்ட பின்னர், கடந்த திங்­கட்­கி­ழமை சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் ஊட­கங்­களை சந்­தித்த போதே இவ்­வாறு கூறினார். அதன்­போது அவர் மேலும் கூறு­கையில்,
எங்­களால் அடை­யாளம் காட்­டப்­பட்ட அடிப்­ப­டை­வாத குழுக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்­காக செயற்­பட்ட ஜே.வி.பி.யி­ன­ரிடம் சென்றே மறைந்­து­கொண்­டனர். அத்­துடன் இந்த நாட்டில் அந்த அடிப்­ப­டை­வா­திகள் தாக்­குதல் குழுக்கள் அர­சியல் தலை­வர்­களின் பின்­னா­லேயே ஒளிந்­து­கொண்­டனர். இப்­போது அடி­முடி தேடு­வ­தாக அனு­ர­கு­மார ஜப்­பானில் இருந்­து­கொண்டு கூறு­கின்றார். ஆனால் அவ­ருக்­குதான் அனைத்தும் தெரியும். தாக்­குதல் குழுக்கள் அவரின் பின்­னா­லேயே மறைந்­து­கொண்­டி­ருந்­தன. அன்று நாங்கள் கூறி­யதை எவரும் கேட்­க­வில்லை. இது தொடர்பில் அர­சியல் கட்­சிகள் எதுவும் கதைக்­க­வில்லை. மக்­க­ளுக்­காக பேசிய எங்­களை சிறையில் தள்­ளினர்.

பல தட­வைகள் நான் சிறையில் இருக்க வேண்­டி­யேற்­பட்­டது. என்ன கார­ணத்­திற்­காக நான் சிறையில் இருக்­கின்றேன் என்று மக்­க­ளி­டையே பல்­வேறு கருத்­துக்கள் உள்­ளன. இந்த நாட்டில் ஆட்சி செய்யும் மற்றும் அதி­கா­ரத்தை கோரும் அனைத்து அர­சி­யல்­வா­தி­களும் உண்­மை­களை கொன்­றுள்­ளனர்.

நான் சிறையில் இருக்கும் போது அர­சியல் மேடை­களில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் பேசப்­படும் விட­யங்கள் தொடர்பில் செய்­தி­களில் பார்ப்பேன். உண்­மையில் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் அனை­வரும் வெளியில் இருக்கக் கூடாது. சிறை­க­ளுக்­குள்­ளேயே இருக்க வேண்டும்.
அவர்­க­ளுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் பேச உரி­மை­யில்லை. எல்­லா­வற்­றுக்கும் முன்னர் இங்கு அனர்த்­த­மொன்று ஏற்­படும் என்­ப­தனை நாங்கள் பௌத்த பிக்­கு­க­ளாக அன்றி பொது­வான மனி­தர்­க­ளாக பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினோம்.

பேராயர் போன்றோர் நீதி கேட்­கின்­றனர். பௌத்­தர்கள் செய்த தவறைப் போன்று மற்­றை­ய­வர்கள் கைகளை துடைத்­துக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர். இந்த கதை­களை கூறும் போது இன­வாதம் என்­றெல்லாம் கூறலாம். எங்­க­ளுக்கு பிரச்­சினை உள்­ளது. அமை­தி­யான முறையில், நிரா­யு­த­பா­ணி­யாக இந்த நாட்டில் மத நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துச் செல்­லக்­கூ­டிய சூழலில் நாங்கள் வாழ்­கின்றோம். ஆனால் வேறு யாரா­வது மதத்தின் பெயரில் ஆயு­தத்­துடன் வந்து மக்­களை கொல்­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யுமா? இது­பற்றி கதைப்­பது இன­வா­தமா? அல்­லது வேறு பிரச்­சி­னையா? இது தொடர்பில் கலந்­து­ரை­யாட வேண்டும்.

நிச்­ச­ய­மாக இந்த பிரச்­சி­னைகள் மூடி மறைக்­கப்­பட இட­ம­ளிக்­கக்­கூ­டாது. ஆனால் உண்­மை­யான பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் உரு­வாகும் குழுக்கள் தொடர்பில் எவரும் கதைப்­ப­தில்லை. வாக்­கு­க­ளுக்­காக இவ்­வாறு பேசாது இருக்­கின்­றனர். இப்­போது சில அரசியல் சக்திகளானது பௌத்த தேரர்களை இலக்கு வைத்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதற்கு எதிராக நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. மீண்டும் மீண்டும் சிறையில் போட்டாலும் பேசாமல் அமைதியாக இருக்க மாட்டோம் என்பதனை பொறுப்புடன் கூறுகின்றேன். நாங்கள் இறக்கும் மனிதர்களே. உண்மைக்காக முன்னின்று இறந்து போக வேண்டும் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.