ஹம்தியின் அகற்றப்பட்ட சிறுநீரகங்கள் எங்கே?

0 391
  • முறையான விசாரணைகளை நடத்துமாறு நீதிமன்றம் பணிப்பு
  • சத்திரசிகிச்சை திகதி முற்படுத்தப்பட்டமை தொடர்பிலும் சந்தேகம்

(எம்.எப்.அய்னா)
சிறு­நீ­ரக சத்­திர சிகிச்­சை­களை அடுத்து உயி­ரி­ழந்த கொழும்பு ‍ கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த 3 வய­தான ஹம்தி பஸ்­லிமின் மரணம் தொடர்பில் நீதி­மன்றில் இது­வரை முன் வைக்­கப்பட்­டுள்ள சாட்­சி­யங்கள் மற்றும் குழந்தையின் மருத்­துவ அறிக்­கை­களை முன்­னி­றுத்தி விசா­ர­ணை­களை நடாத்­து­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் ரஜீந்ரா ஜய­சூ­ரிய பொரளை பொலி­ஸா­ருக்கு நேற்று (9) உத்­த­ர­விட்டார்.

குறித்த குழந்­தையின் மரண விசா­ரணை நேற்று தொடர்ந்த நிலையில் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

நேற்­றைய தினம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொரளை பொலிஸார், மேல­திக விசா­ரணை அறிக்­கை­யினை நீதி­மன்­றுக்கு சமர்ப்­பித்­தனர்.
இதன்­போது திறந்த மன்றில் பேசிய நீதிவான் ரஜீந்த்ரா ஜய­சூ­ரிய ‘உயி­ரி­ழந்த குழந்­தையின் சிறு­நீ­ர­கங்கள் உரிய வகையில் உரிய இடத்தில் அமையப் பெற்­றி­ருந்தன என்­பதை வைத்­திய அறிக்­கை­களும் சாட்­சி­களும் பறை­சாற்று­கின்­றன. அவ்­வா­றான நிலையில் அந்த அறிக்­கைகள் ஊடாக விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட வேண்டும்.’ என்றார்.

இதன்­போது, விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொரளை பொலிஸார், குழந்­தையின் அகற்­றப்­பட்ட சிறு­நீ­ர­கங்­களில் ஒன்று வைத்­தி­ய­சா­லையில் இருப்­ப­தாக தகவல் உள்­ளது என குறிப்­பிட்­டனர்.

மர­ணித்த குழந்­தையின் குடும்­பத்­தாரின் நல­னுக்­காக மன்றில் ஆஜ­ராகும் சட்­டத்­த­ர­ணிகள் குழாமின் சட்­டத்­த­ரணி வைத்­தியர் யூசுப் இதன்­போது, முன் வைக்­கப்­பட்­டுள்ள வைத்­திய அறிக்­கைகள் தொடர்பில் மன்­றுக்கு தெளி­வு­ப­டுத்­தினார். அத்­துடன் இதன்­போது திறந்த மன்றில் விட­யங்­களை முன் வைத்த சட்­டத்­த­ரணி வைத்­தியர் யூசுப், குழந்தை ஹம்­திக்கு பெப்­ர­வரி மாதமே சத்­திர சிகிச்சை செய்­யப்­பட உத்­தே­சிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அவ­ரது சத்­திர சிகிச்சை எந்த அவ­சர கார­ணமும் இன்று முன் கூட்டி நவம்பர் மாதத்­துக்கு மாற்­றப்­பட்­ட­மையை மையப்­ப­டுத்தி கேள்வி எழுப்­பினார். இலங்­கையில் மருந்து தட்­டுப்­பாடு இருந்த காலப்­ப­கு­தியில், எந்த அவ­சர தேவையும் அற்ற நிலையில், அந்த சிறு­நீ­ரக சத்­திர சிகிச்சை செய்­யப்­பட்­டமை சந்­தே­கத்­துக்­கு­ரி­யது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­ய­டுத்து, அவ்­வா­றெனில், குழந்­தையின் இரு சிறு­நீ­ர­கங்­களும் உரிய வகையில் இருந்­தமை தெளி­வாகும் பின்­ன­ணியில், ஒன்றை அகற்றும் போது மற்­றை­யது தானாக வந்­து­விட்­டது என கூறு­வதை எல்லாம் இல­கு­வாக நம்­பி­விட முடி­யாது என திறந்­த மன்றில் கூறினார். அதனால் பொலிசார் கூறு­வதைப் போன்று ஒரு சிறு­நீ­ரகம் இருக்­கு­மாக இருந்தால் மற்­றை­யது தொடர்­பிலும் தக­வல்­களை வெளிப்­ப‌­டுத்­து­வது அவ­சியம் என சுட்­டிக்­காட்­டிய நீதிவான், எந்த முடி­வு­க­ளுக்கும் வராது சாட்­சி­களின் அடிப்­ப­டையில் உரிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பொலி­சா­ருக்கு பணித்தார்.

இந் நிலையில் குழந்தை ஹம்­தியின் மரண விசா­ர­ணைகள் நேற்றும் இடம்­பெற்­றன. நேற்று குழந்­தையின் தந்தை மொஹம்மட் நிசார் மொஹம்மட் பஸ்லிம் சாட்­சியம் அளித்தார். பொரளை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரி­சோ­தகர் தயா­சி­ரியின் நெறிப்­ப­டுத்­தலில் இந்த சாட்­சியம் பதிவு செய்­யப்­பட்­டது.

இதன்­போது பிறப்பில் அக்­கு­ழந்­தைக்கு எந்த நோய் நிலை­மையும் இருக்­க­வில்லை எனவும் பிறந்து ஒன்­பது மாதங்­களின் பின்னர் ஏற்­பட்ட நிலைமை மற்றும் அதற்­காக குழந்­தைக்கு அளிக்­கப்­பட்ட சிகிச்சை தொடர்பில் விரிவாக தந்தை சாட்சியமளித்தார்.

தன் குழந்தையின் மரணத்துக்கு முன்னர் வைத்தியர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்திருந்த்தன என்பது தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து மேலதிக மரண விசாரணை சாட்சிப் பதிவு எதிர்வரும் 22 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.