சம்பந்தனா? மஹிந்தவா? பெரும்பான்மை மூலம் தீர்மானித்துக்கொள்ளலாம்

0 581

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனா அல்­லது ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­மு­னவின் தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷவா எதிர்­கட்சித் தலைவர் என்­பதை பாரா­ளு­மன்றின் பெரும்­பான்­மையின் அடிப்­ப­டையில் தீர்­மா­னி­க்­கப்­படும் என ஐக்­கிய தேசிய கட்சி தெரி­வித்­துள்­ளது.

எதிர்­கட்சித் தலை­வரை தெரிவு செய்­வதில் எழுந்­துள்ள சிக்கல் நிலை குறித்து விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளீன் பண்­டார மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இதே­வேளை நிலை­யியல் கட்­ட­ளையின் பிர­காரம் எதிர்­கட்­சி­த­லைவர் பத­வி­யினை யாருக்கு வழங்­கு­வது என்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை சபா­நா­யகர் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை முன்­னெ­டுப்பார் என்றும் அவர் தெரி­வித்தார்.

மேலும் அவர் குறிப்­பி­டு­கையில்,

ஆளும் தரப்பு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்ள போதிலும் எதிர்­கட்­சியின் தலைவர் யார் என்­பதை உத்­தி­யோக பூர்­வ­மாக அறி­விக்க முடி­யாமல் உள்­ளது. நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் சபா­நா­யகர் ஸ்ரீ லங்கா பொது ஜன­பெ­ர­மு­னவின் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷவை எதிர்­கட்சி தலை­வ­ராக அறி­வித்­தி­ருந்தார். ஆனால் பெரும்­பா­லான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மஹிந்த ராஜ­ப­க் ஷவை எதிர்­கட்சித் தலை­வ­ராக நிய­மிப்­ப­தற்கு பாரிய எதிர்ப்­பினை வெளி­யிட்­டி­ருந்­தனர்.

ஆகவே எதிர்­கட்சித் தலை­வரை தெரிவு செய்­வ­தற்கு நிலையியற் கட்­ட­ளையின் பிர­கா­ரமே நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜயசூரிய முன்­னெ­டுப்பார்.

மேலும் எதிர்­கட்சித் தலைவர் பத­வியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அதிக பெரும்­பான்­மை­யுள்­ளவர் ஒரு­வ­ரையே எதிர்­கட்சித் தலை­வ­ராக நியமிக்க முடியும். இரா. சம்பந்தன் அல்லது மஹிந்த ராஜபக் ஷ ஆகிய இருவர்களில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை பாராளுமன்ற  பெரும்பான்மைக்கு அமைவாகவே தெரிவு செய்வோம் என்றார்.
-Vidvelli

Leave A Reply

Your email address will not be published.