வீதியில் கண்டெடுத்த 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணத்தை பொலிஸில் ஒப்படைத்தார்

0 972

கொழும்பு, புறக்­கோட்டைப் பிர­தே­சத்தில் வீதி­யொன்­றி­லி­ருந்து ஒரு இலட்­சத்து 90 ஆயிரம் ரூபா பணத்­துடன் கூடிய பார்­ச­லொன்றைக் கண்­டெ­டுத்த நடை­பாதை வியா­பா­ரி­யொ­ருவர் அதனை கோட்டை பொலிஸ் மக்கள் தொடர்பு பிரி­வி­ன­ரிடம் கைய­ளித்­துள்ளார்.

கொழும்பு புறக்­கோட்டைப் பகுதி வீதி­யொன்­றி­லி­ருந்து இந்தப் பார்­சலை அப்­ப­கு­தியில் நடை­பாதை வியா­பா­ரத்தில் ஈடு­பட்டு வரும், கொழும்பு –14 பகு­தியைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி முபாரக் என்­ப­வரே கண்­டெ­டுத்­துள்ளார்.

தான் கண்­டெ­டுத்த பார்­சலில் பணம் அடங்­கி­யி­ருப்­பதை அறிந்த அவர் தனது எஜ­மா­னரைத் தொடர்பு கொண்­டுள்ளார். பின்பு புறக்­கோட்டை பொலிஸ் நிலை­யத்­துக்கும், நடை­பாதை வியா­பா­ரிகள் சங்­கத்தின் தலைவர் மொஹமட் இம்­தி­யா­ஸுக்கும் அறி­வித்­துள்ளார். பின்பு அந்தப் பார்­சலை புறக்­கோட்டை பொலிஸ் நிலை­யத்தில் பொலிஸ் சார்ஜன்ட் அநுர விஜே­ரத்­ன­விடம் கைய­ளித்­துள்ளார்.

பணத்­துக்கு உரிமை கோரி இன்­று­வரை (நேற்று) எவரும் முன்­வ­ர­வில்லை என புறக்­கோட்டை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இந்தப் பணத்தைத் தவ­ற­விட்­டவர் புறக்­கோட்டை பொலிஸ் நிலை­யத்தில் அதற்­கு­ரிய ஆதா­ரங்­க­ளையும் அடை­யா­ளத்­தையும் சமர்ப்­பித்து பணத்தைப் பெற்­றுக்­கொள்ள முடியும் எனவும் தெரி­விக்­கப்பட்டுள்ளது.

மேல­திக விப­ரங்கள் தேவைப்­படின் 011 2421515 அல்­லது 011 2320389 ஆகிய இலக்­கங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளலாம்.

கிறிஸ்மஸ் மற்றும் புது­வ­ருட கொண்­டாட்­டங்கள் தொடர்­பாக தேவை­யான பொருட்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்குப் பல இடங்­க­ளி­லி­ருந்தும் கொழும்பு புறக்­கோட்­டைக்கு வரும் மக்­களின் பாது­காப்பு மற்றும் தேவைகள் தொடர்பில் புறக்­கோட்டை பொலிஸின் விஷேட பிரிவு பல விழிப்­பு­ணர்வு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இந்த வேலைத்­திட்­டங்­களில் வீதி நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
-VIdivelli

Leave A Reply

Your email address will not be published.