பாரிய பரிசுத் தொகைகளுடன் சவூதி தூதரகம் நடாத்திய அல்குர்ஆன் மனன போட்டி

0 195

இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூத­ரகம் மற்றும் புத்த மத, சமய மற்றும் கலாச்­சார அலு­வல்கள் அமைச்சு,- முஸ்லிம் சமய, பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­களம் ஆகி­ய­வற்றின் ஒருங்­கி­ணைப்பிலான முத­லா­வது அல் குர்ஆன் மனனப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் இந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றன.

இலங்­கையின் பல்­வேறு நக­ரங்கள் மற்றும் மாகா­ணங்­களைச் சேர்ந்த போட்­டி­யா­ளர்­களின் பங்­கேற்­புடன், இந்தப் போட்­டியின் இறுதிச் சுற்று, கடந்த சனிக்­கி­ழமை கொழும்பில் உள்ள மூவன்பிக் ஹோட்­டலில் நடை­பெற்­றது. இந்தப் போட்­டியின் நிறைவு விழா இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூத­ர­கத்தின் அனு­ச­ர­ணையில் கடந்த திங்­கட்­கி­ழமை மாலை கொழும்பில் உள்ள ஷங்­க­ரிலா ஹோட்­டலில் நடை­பெற்­றது.

 

ஆண்களுக்கும் பெண்களுக்குமாக வெவ்வேறாக முழுக் குர்ஆன், 20 ஜுஸ்உக்கள், 10 ஜுஸ்உக்கள், 5 ஜுஸ்உக்கள் என 4 பிரிவுகளாக இப்போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரபு மத்ரஸாக்களிலும் ஹிப்ழ் மத்ரஸாக்களிலிலும் கல்வி கற்கும் இலங்கையின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 1500 போட்டியாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 240 போட்டியாளர்களுக்கு இறுதிச் சுற்று இடம்பெற்றது. அவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் ஆண்களிலிருந்தும் பெண்களிலிருந்தும் வெவ்வேறாக மூவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 24 பேர் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

அதிகூடுதல் பரிசாக 823,000 ரூபாவும் குறைந்த பரிசாக 83,000 ரூபாவும் வழங்கப்பட்டன. இலங்கையில் அல்குர்ஆன் மனன போட்டி ஒன்றில் இவ்வாறு பாரிய பரிசுத் தொகை வழங்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
கண்பார்வையை இழந்த புத்தளத்தைச் சேர்ந்த மாணவி அஷ்பா நான்காம் பிரிவில் முதலாம் பரிசைப் பெற்றமை நிகழ்வில் அனைவரதும் கவனத்தை ஈர்த்தது.

இவ் வைப­வத்தில், சவூதி அரே­பி­யாவின் இலங்­கைக்­கான தூதுவர் காலித் ஹமூத் அல்-­கஹ்­தானி உரையாற்றுகையில், சவூதி அரே­பிய மன்னர் சல்மான் பின் அப்­துல்­அசீஸ் அல்­சஊத் மற்றும் பட்­டத்து இள­வ­ர­சரும் பிர­தம மந்­தி­ரி­யு­மான இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்­துல்­அசீஸ் அல்­சஊத் ஆகி­யோரின் தலை­மையின் கீழ், புனித அல் குர்ஆன் பிர­தி­களை அச்­சி­டுதல், உல­க­ளா­விய ரீதியில் அதனைக் கற்­பிப்­ப­வர்கள் மற்றும் அதனை மனனம் செய்­வோர்­களை கெள­ர­வித்தல் போன்ற விட­யங்­களில், சவூதி அரே­பிய அரசு மேற்­கொள்ளும் முயற்­சி­களை விளக்­கினார். அத்­தோடு, சில தீவி­ர­வா­தி­களால் புனித அல்­குர்ஆன் பிர­தி­களை எரித்த சம்­பவம் தொடர்­பாக சவூதி அரே­பிய இராச்­சியம் மற்றும் இலங்கைக் குடி­ய­ரசு உட்­பட உலகின் சில நாடு­களால் வெளி­யி­டப்­பட்ட கண்­டன அறிக்­கை­க­ளையும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன தனது உரையில், இலங்கை முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில், அல் குர்ஆன் மனனப் போட்டி போன்ற போட்­டி­களை நடத்­து­வது மிகவும் முக்­கி­ய­மா­னது என்றும், அதனை ஆழ்ந்து கற்­பது நல்­லொ­ழுக்­கத்­தையும், மதப்­பற்­றையும் விதைக்க உத­வு­வ­தோடு, பல்­லின மக்கள் வாழும் இலங்­கையில் சிறந்த சமூக வாழ்­வொன்றை ஏற்­ப­டுத்த உதவும் எனக் குறிப்­பிட்டார். அத்துடன் பௌத்த பெரும்­பான்­மை­யினர் ஆரம்­பத்தில் இருந்தே முஸ்­லிம்­க­ளுடன் நட்­பு­றவைப் பேணி அவர்­க­ளுடன் இணைந்து வாழ்­கி­றார்கள் என்றும் குறிப்­பிட்டார். அவ்­வாறே, இலங்­கையின் அபி­வி­ருத்­திக்கு ஆத­ர­வ­ளிக்கும் சவூதி அரே­பியத் தூதுவர் காலித் ஹமூத் அல்­கஹ்­தானி அவர்­க­ளுக்கும் சவூதி அரே­பிய அர­சுக்கும் நன்­றி­களைத் தெரி­வித்­த­தோடு, இவ்­வா­றான நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­வது இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான நல்லுற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்த உதவும் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

சவூதி அரே­பிய இஸ்­லா­மிய விவ­கா­ரங்கள், அழைப்பு மற்றும் வழி­காட்டல் அமைச்சின் பிர­தி­நிதி பத்ர் அல்-­அ­னஸி உரை நிகழ்த்­து­கையில், இப் போட்­டி­யையும் அதன் நிறைவு விழா­வையும் வெற்­றி­க­ர­மாக நிறை­வ­டையச் செய்­வதில் உத­விய அனை­வ­ருக்கும் தனது நன்­றி­க­ளைத் தெரி­வித்­தார்.
இந் நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், உலமாக்கள் என பலர் கலந்து கொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.