ஸ்கென்டினேவிய பெண்கள் இருவரைக் கொன்ற சந்தேக நபர் மொரோக்கோ அதிகாரிகளால் கைது

0 558

ஹை அட்லஸ் மலைப் பகு­தியில் வைத்து சுற்­றுலாப் பய­ணி­க­ளான ஸ்கென்­டி­னே­விய பெண்கள் இரு­வரைக் கொன்ற சந்­தேக நபர் மொரோக்கோ அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக உள்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது.
குறித்த நபர் மொரோக்­கோவின் மிகப் பெரிய சுற்­றுலா மைய­மான மர்­ராக்­கெச்சில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கழுத்து அறுக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டி­ருந்த டென்மார்க் மற்றும் நோர்வே நாடு­களைச் சேர்ந்த இரு பெண்­க­ளது உடல்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஏனைய சந்­தேக நபர்கள் தேடப்­பட்டு வரு­வ­தாக அமைச்சு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அறி­வித்­தது.

24 வயது டென்­மார்க்கைச் சேர்ந்த லொயிசா வெஸ­டி­ரேஜர் ஜெபர்சன் கழுத்­த­றுத்துக் கொல்­லப்­பட்­டுள்ளார் என அவ­ரது தாயாரை மேற்கோள் காட்டி டென்மார்க் செய்­தித்­தா­ளான பீரி தெரி­வித்­துள்­ளது. மொரோக்­கோவில் நடை­பெறும் குழப்­ப­மான செயற்­பா­டுகள் கார­ண­மாக அங்கு செல்ல வேண்டாம் என அதி­கா­ரிகள் எச்­ச­ரித்­தி­ருந்­தனர்.

உயி­ரி­ழந்த மற்­றைய பெண் 28 வய­தான மாரென் உயிலேன்ட் என நோர்வே ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. பாது­காப்பே அவ­ரது முன்­னு­ரி­மை­யாக இருந்­தது. இந்த பய­ணத்தை தொடங்­கு­வ­தற்கு முன்னர் அவர் அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­தி­ருந்தார் என மாரென் உயி­லேன்ட்டின் தாயார் ஐரேனி உயிலேன்ட் தெரி­வித்தார்.

வட ஆபிரிக்­காவின் மிக உய­ர­மான மலை­யுச்­சி­யான தொப்­கல்­லிற்குச் செல்லும் சன நட­மாட்­ட­மற்ற பிர­தே­சத்தில் இவர்கள் இரு­வ­ரது உடல்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

மர்­ராக்­கெச்சில் இருந்து 82 கிலோ­மீற்­ற­ருக்கு அப்­பா­லுள்ள தொப்கல் பகுதி மலை­யேறும் சாகச விளை­யாட்­டுக்கு பிர­சித்தி பெற்ற பிர­தே­ச­மாகும். தென்­கி­ழக்கு நோர்வே பல்­க­லைக்­க­ழ­கத்தின் மாண­வி­க­ளான இரு­வரும் நத்தார் விடு­மு­றையைக் கழிப்­ப­தற்­காக மொரோக்­கோ­வுக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்­தனர் என நோர்வே ஊட­க­மொன்று தெரி­வித்­துள்­ளது.

அவர்கள் மொரோக்­கோவில் ஒரு மாத­கா­லத்தைச் செல­விட திட்­ட­மிட்­டி­ருந்­த­தாக தென்­கி­ழக்கு நோர்வே பல்­க­லைக்­க­ழ­கத்தின் முதல்வர் பீட்டர் ஆசென் தெரி­வித்தார். இந்தக் குற்­றத்­திற்­கான பின்­னணி என்­ன­வெனக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணைகள் முடக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன. கொலை இடம்­பெற்ற இடத்­திற்குச் செல்லும் வீதி பொலி­ஸா­ரினால் மூடப்­பட்­டுள்­ளது.

ரபாட்டில் அமைந்­துள்ள தூத­ர­கத்­தி­லி­ருந்து நோர்வே பொலிஸார் அதி­கா­ரி­க­ளுக்­கி­டையே தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தும் நோக்கில் மர்­ராக்­கெச்­சிற்கு சென்­றுள்­ளனர்.

குறித்த பகு­தியில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தோடு, உடல்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து மலை­யேறும் சாகச விளை­யாட்டு தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் மொரோக்கோ ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

இது பிராந்­தி­யத்­திற்கு மோச­மான ஒன்­றாக அமையும், சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி சுற்­றுலாப் பய­ணிகள் தமது பய­ணங்­களை இரத்துச் செய்யும் நிலை­யினை ஏற்­ப­டுத்தும் என உள்ளூர் சுற்­றுலாப் பயண வழி­காட்­டி­யான ஹுஸைன் இமிலில் தெரி­வித்தார்.

மொரோக்­கோவின் பொரு­ளா­தார ஆதா­ர­மாக சுற்­று­லாத்­துறை காணப்­ப­டு­கின்­றது. விவ­சா­யத்­திற்கு அடுத்­த­ப­டி­யாக நாட்டின் இரண்­டா­வது பெரும்­பங்­கினை அது வகிக்­கின்­றது. தேசிய வரு­மா­னத்தில் 10 வீத பங்­கினைக் கொண்டதாக இத்துறை காணப்படுவதோடு நாட்டின் பிரதான அந்நியச் செலாவணி வருமான மூலமாகவும் காணப்படுகின்றது.

பல ஆண்டுகள் மந்த நிலையில் காணப்பட்ட மொரோக்கோவின் சுற்றுலாத்துறை 2017 ஆம் ஆண்டு 11.35 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்றிருந்தது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 மில்லியனைத் தாண்டியது அதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.