இலங்கை யாத்திரிகர்கள் மினா, அரபாவில் தங்குவதற்கு கூடாரங்களின்றி பாரிய சிரமம்

0 89

சவூதி அரே­பி­யாவில் ஹஜ் யாத்­தி­ரையில் ஈடு­பட்­டு­வரும் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு மினா மற்றும் அரபா ஆகிய தலங்­களில் தங்­கு­வ­தற்கு போதி­ய­ளவு கூடா­ரங்கள் ஒதுக்­கப்­ப­ட­வில்லை என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மாக இவ்­விரு தலங்­க­ளிலும் நூற்­றுக்கும் மேற்­பட்ட இலங்கை யாத்­தி­ரி­கர்கள் தங்­கு­மி­ட­மின்றி பாரிய சிர­மங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.

இலங்­கை­யி­லி­ருந்து C பிரிவின் கீழ் யாத்­திரை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்­காக மினாவில் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்த கூடா­ரத்­தி­லேயே கடந்த திங்கட்கிழமை இச்­சம்­பவம் இடம் பெற்­றுள்­ளது.

இதன் கார­ண­மாக இலங்­கையின் குறித்த தங்­கு­மி­டத்தை ஏற்­பாடு செய்த சவூதி அரே­பிய நிறு­வ­னத்­திற்கும் ஹஜ் முக­வர்கள் மற்றும் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கு­மி­டையே வாய்த்தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, இலங்கை யாத்­தி­ரி­கர்கள் தங்­கு­வ­தற்­கென அர­பாவில் அமைக்­கப்­பட்­டி­ருந்த கூடா­ரங்­க­ளிலும் செவ்­வாய்க்­கி­ழமை இதே நெருக்­கடி நிலை ஏற்­பட்­ட­தா­கவும் இதன் கார­ண­மாக நூற்றுக் கணக்­கான யாத்­தி­ரி­கர்கள் பாதிக்­கப்­பட்­ட­ட­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவ்­வாறு தங்­கு­மி­ட­மின்றித் தவித்த இலங்கை யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சக இலங்கை யாத்­தி­ரி­கர்கள் தமக்கு கிடைக்கப் பெற்ற கூடா­ரங்­களைப் பகிர்ந்து உத­வி­ய­தா­கவும் இதன் கார­ண­மாக இட நெருக்­கடி உள்­ளிட்ட அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி ஏற்­பட்­ட­தா­கவும் அர­பாவில் குறித்த கூடா­ரத்தில் தங்­கி­யி­ருந்த யாத்­தி­ரிகர் ஒருவர் விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்தார்.

இது தொடர்பில் இலங்கை ஹஜ் முக­வர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பதில் பணிப்­பா­ள­ருக்கு எழுத்து மூலம் முறைப்­பாடு செய்­துள்­ளனர். புத்த சாசன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ரம நாயக்­க­வுக்கும் இது தொடர்பில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­வ­காரம் தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு அமைச்சர் திணைக்­கள அதி­கா­ரி­களைப் பணித்­துள்ளார்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இவ்­வி­வ­காரம் தொடர்பில் சவூதி அரே­பிய ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி வரு­வ­தாக திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் “விடி­வெள்ளி” க்குத் தெரி­வித்தார்.
இதே­வேளை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் மற்றும் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­றாஹிம் அன்சார் உட்­பட ஹஜ் குழு உறுப்­பி­னர்கள், திணைக்­கள அதி­கா­ரி­களும் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்டு தற்­போது சவூதி அரே­பி­யாவில் தங்­கி­யுள்­ளனர்.

ஹஜ் குழுவின் போதிய திட்­ட­மி­ட­லின்மை மற்றும் கண்­கா­ணிப்­பின்­மையே இவ்­வா­றான நெருக்­க­டி­க­ளுக்கு காரணம் என யாத்­தி­ரி­கர்கள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.

சவூதி அரே­பிய அர­சாங்கம் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்குத் தேவை­யான சகல வச­தி­க­ளையும் ஏற்­பாடு செய்­தி­ருந்தும், இலங்­கையின் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு முக­வர்கள் ஊடாக தேவை­யான வச­தி­களைப் பெற்றுக் கொடுப்­பதில் இலங்­கையின் ஹஜ் குழு அசி­ரத்­தை­யுடன் செயற்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட யாத்­தி­ரி­கர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.