அலி சப்ரி ரஹீமுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைப்பாடு

0 211

(எம்.வை.எம்.சியாம்)
தங்கம் மற்றும் கைய­ட­க்கத் ­தொ­லை­பே­சி­களை சட்­ட­வி­ரோ­த­மாக நாட்­டுக்கு கொண்டு வந்த குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு கோரி ஐக்­கிய இளைஞர் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தினர் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

இதன்­போது ஐக்­கிய இளைஞர் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தினர் கருத்து தெரி­விக்­கையில்,
அலி சப்ரி ரஹீ­முக்கு 75 இலட்சம் ரூபா தண்­டப்­பணம் மாத்­தி­ரமே அற­வி­டப்­பட்­டுள்­ளது. எனினும் சாதா­ரண பிரஜை ஒரு­வ­ருக்கு எவ்­வாறு 75 இலட்சம் ரூபாவை செலுத்த முடியும்? அதற்­கான இய­லுமை இல்லை. அவர் வாரத்தில் இரண்டு அல்­லது மூன்று தட­வைகள் துபாய்க்கு சென்­றுள்ளார். சாதா­ர­ண­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விசேட விருந்­தினர் பகு­தி­யி­னூ­டா­கவே வெளி­நா­டு­க­ளுக்கு செல்­வார்கள். விமான ­சீட்­டுக்கு 3 இலட்சம் ரூபா தேவைப்­படும். அவ்­வா­றாயின் எவ்­வ­ளவு நாட்கள் வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றுள்ளார் என்­பதை தேட வேண்டும்.

அதற்­கான நிதி எங்­கி­ருந்து கிடைத்­தது? என்­பதில் எமக்கு சந்­தேகம் எழுந்­துள்­ளது. இந்த விட­யங்கள் தொடர்பில் தேடியறியும் பட்சத்தில் பாராளுமன்றத்திலுள்ள இதுபோன்றுள்ள உறுப்பினர்கள் ஊழல் மோசடிகளை கண்டறிய முடியும் என்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.