பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமுக்கு 7.5 மில்லியன் அபராதம்

0 120
  • கொண்டுவரப்பட்ட நகைகள், தங்க பிஸ்கட்டுகள் அரசுடமையாகின
  • சிறப்பு விருந்தினர் முனையத்தினூடாக 2வது பெரிய தங்க கடத்தலாக பதிவு
  • நேற்று பாராளுமன்றில் பிரசன்னம், அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பு

(ஏ.ஆர்.ஏ.பரீல், எம்.வை.எம்.சியாம்)
நாட்­டிற்குள் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கொண்­டு­வ­ரப்­பட்ட தங்கம் மற்றும் கைய­ட­க்கத் ­தொ­லை­பே­சி­க­ளுடன் சுங்கப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் 7.5 மில்­லியன் ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்டார்.

மேலும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சப்ரி ரஹீ­மினால் கொண்­டு­வ­ரப்­பட்ட தங்கம் உள்­ளிட்ட பொருட்கள் அர­சு­ட­மை­யாக்­கப்­பட்­டுள்­ள­தாக சுங்கத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில் சம்­பவம் தொடர்­பி­லான முறை­யான சுங்க விசா­ரணை நேற்று அதி­காலை 4 மணி­ய­ளவில் நிறை­வ­டைந்­துள்­ள­துடன், சுங்க விசா­ர­ணையை சுங்­கத்­து­றையின் சிரேஷ்ட உதவி பணிப்­பாளர், வருவாய் பாது­காப்பு பிரிவின் என்.பி. பி. பிரே­ம­ரத்ன நடத்­தி­யி­ருந்தார்.

முன்­ன­தாக, 3.5 கிலோ­கிராம் நிறை­யு­டைய தங்க பிஸ்­கட்கள், நகைகள் மற்றும் கையடக்­­கத்­தொ­லை­பே­சி­க­ளுடன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நேற்று முன்­தினம் காலை 9.45 மணி­ய­ளவில் துபா­யி­லி­ருந்து ப்ளை டுபாய் விமான சேவைக்கு சொந்­த­மான FZ 547 என்ற விமா­னத்தில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­துக்கு வருகை தந்த போது சுங்­கத்­தி­ணைக்­கள அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீ­மினால் சட்­ட­வி­ரோ­த­மாக நாட்­டுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட தங்­கத்தின் பெறு­மதி 74 மில்­லியன் ரூபா என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவர் 91 கைய­டக்க தொலை­பே­சி­க­ளையும் கொண்டு வந்­துள்­ள­தா­கவும் அந்த தொலை­பே­சி­களின் பெறு­மதி 4.2 மில்­லியன் ரூபா எனவும் இலங்கை சுங்கத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் உள்ள விசேட அதி­திகள் வருகை முனை­யத்தில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் இலங்கை சுங்க வர­லாற்றில் விமான நிலைய சிறப்பு விருந்­தினர் வருகை முனை­யத்தைப் பயன்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்ட இரண்­டா­வது பாரி­ய­ள­வி­லான தங்க கடத்தல் இது­வாகும் என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்னர் 1978 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரும் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் விசேட அதி­திகள் முனை­யத்தில் தங்­கத்தை கடத்­து­வ­தற்கு முயற்­சித்த போது கைது செய்­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சபா­நா­ய­க­ருக்கு அறி­விப்பு
இத­னி­டையே, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சட்­ட­வி­ரோ­த­மாக தங்கம் மற்றும் கைய­டக்க தொலை­பே­சிகள் எடுத்து வந்­தமை தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக சபா­நா­யகர் மஹிந்த யாபா அபே­வர்­த­ன­வுக்கு நேற்று முன்­தி­னமே சுங்க அதி­கா­ரி­களால் அறி­விக்­கப்­பட்­டது.

நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்து
கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் 3 கிலோ கிராம் தங்­கத்­துடன் கைது செய்­யப்­பட்­டுள்ள முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீ­முக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென நேற்­று­முன்­தினம் ஐக்­கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி என்­பன வலி­யு­றுத்­தின.
ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்­ஷன ராஜ­க­ருணா இது தொடர்பில் உரை­யாற்­று­கையில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் 3 கிலோ கிராம் தங்­கத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்­யப்­பட்­டுள்ளார். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்­ப­தற்­காக எந்த சிறப்­பு­ரி­மை­களும் வழங்­கப்­ப­டாது விசா­ரிக்­கப்­பட வேண்டும். ஏனெனில் அவரின் இவ்­வா­றான செயற்­பா­டு­களால் தான் மக்கள் 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் கடு­மை­யாக சாடு­கி­றார்கள். எனவே உரிய விசா­ர­ணைகள் சுயா­தீன முறையில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்றார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன உரை­யாற்­று­கையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்­ஷன ராஜ­க­ருணா குறிப்­பிட்ட கருத்­துடன் நாங்­களும் உடன்­ப­டு­கின்றோம். அலி சப்ரி ரஹீம் தொடர்பில் கடும் சட்ட நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இவ்­வா­றான செயல்­களில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஈடு­பட ஒரு­போதும் அனு­ம­திக்­கக்­கூ­டாது. எனவே அவர் கடு­மை­யாக தண்­டிக்­கப்­பட வேண்டும் என்றார்.

எதிர்க்­கட்சித் தலைவர் சாடல்
பார்­வை­யாளர் கள­ரிக்கு பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஜனக்க ரத்­நா­யக்­கவை அனு­ம­திக்­காத நிலையில், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்­ரிக்கு சபைக்குள் நுழைய் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது என நேற்­றைய தினம் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச சாடினார்.

அத்­தோடு பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்­ப­தற்­கா­கவே அவ­ருக்கு அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் இதன்­போது எதிர்க்­கட்­சித்­த­லைவர் கூறி­யி­ருந்தார்.

நேற்று சபைக்கு பிர­சன்னம்
இந்­நி­லையில், நேற்­றைய தினம் சபைக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார். அவர், பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஜனக்க ரத்­நா­யக்­கவை பத­வி­நீக்கம் செய்யும் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பில் கலந்­து­கொண்டார்.

வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்­கான வாக்­கெ­டுப்பு அழைப்பு மணி ஒலிக்­கப்­பட்­ட­போது சபைக்குள் பிர­வே­சித்தார்.கோர மணியின் சத்தம் நிறை­வ­டைந்­ததும் இலத்­தி­ர­னியல் முறைப்­படி வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.

அதன்­போது, ஒழுங்குப் பிரச்­சி­னையை எழுப்­பிய ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.மரிக்கார், சபா­நா­யகர் அவர்­களே! தங்கம் கடத்­திய எம்.பி, வாக்­க­ளிக்க வந்­துள்ளார் என்றார். எனினும், அது ஒழுங்­குப்­பி­ரச்­சினை இல்­லை­யென கூறிய சபா­நா­யகர் வாக்­கெ­டுப்பை நடத்­தினார். இந்த வாக்­கெ­டுப்பின் போது, அலி சப்ரி ரஹீம் பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அர­சாங்­கத்தை சாடும் அலி­சப்ரி
ஆபத்­தி­லி­ருந்­த­போது அர­சாங்கம் என்னை பாது­காக்க­வில்லை என்று நேற்று பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் குறித்த வாக்­க­ளிப்பின் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போது தெரி­வித்தார்.

கைப்­பற்­றப்­பட்ட தங்கம் எனக்குச் சொந்­த­மா­ன­தல்ல, அது எனது நண்பர் ஒரு­வ­ருக்கு உரி­யது. ஆனால், என்மீதே குற்றம் சாட்டப்பட்டது. பொதுச் சேவைகள் ஆணைக்குழுவில் தலைவர் ஜனகர ரத்னாயக்கவை அவரது பதவியிலிருந்து நீக்குவதற்காக பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நான் எதிர்த்து வாக்களித்தேன். நான் நெருக்கடியில் இருந்தபோது, என்னை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ, பிரதமர் தினேஷ் குணவர்தனவோ முன்வரவில்லை. அதன் காரணமாகவே எதிர்த்து வாக்களிக்கத் தீர்மானித்தேன் என்றார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி, மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்சிகள் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூகமட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.