பலஸ்தீன ஆக்கிரமிப்பின் 75 ஆவது தினத்தை நினைவுகூரும் நிகழ்வு கல்கிஸ்ஸை கடற்கரையில்

0 50

(அஸ்ரப் ஏ சமத்)
பலஸ்தீன் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு 75 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டு, பலஸ்­தீ­னுக்­கான இலங்கை ஒரு­மைப்­பாட்டுக் குழு­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட விசேட நக்பா தின நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கல்­கிஸ்ஸை கடற்­க­ரையில் நடை­பெற்­றது.

இலங்­கைக்­கான பலஸ்­தீனத் தூதுவர் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லாஹ் சைட் தலை­மையில் இடம்­பெற்ற இந் நிகழ்வில் ஒரு­மைப்­பாட்டுக் குழுவின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிமல் ரத்­நா­யக்க, முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் சவூதி அரே­பியா, இந்­தோ­னே­சியா, ஓமான், மலே­சியா, ரஷ்யா, எகிப்து, ஈரான், பங்­க­ளாதேஷ் ஆகிய நாடு­களின் தூது­வர்கள் உட்­பட பலர் கலந்து கொண்­டனர்.

இதன்­போது இலங்கை மற்றும் பலஸ்தீன் நாடு­களின் தேசியக் கொடிகள் தாங்­கிய பலூன்கள் பறக்­க­வி­டப்­பட்­ட­துடன் விசேட உரை­களும் இடம்­பெற்­றன.

பலஸ்­தீன தூதுவர் டாக்டர் ஸுஹைர் ஹம்­தல்லாஹ் ஸைத் இங்கு உரை­யாற்­று­கையில், பலஸ்­தீன மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட பேர­ழி­வான நக்­பாவின் 75வது ஆண்டு நிறைவை நாம் நினை­வு­கூ­ரு­கிறோம். இத்­தனை ஆண்­டு­க­ளாக பலஸ்­தீ­னி­யர்கள் தங்­க­ளுக்கு நீதி கோரி போராடி வரு­கின்­றனர். எனினும் நீதியைப் பெற்றுக் கொடுப்­பதில் சர்­வ­தேச சமூ­கத்தின் ஒத்­து­ழைப்பு போது­மான வகையில் கிடைக்­காமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும் என்றார். அத்துடன் இலங்கை மக்கள் தொடர்ச்சியாக பலஸ்தீனுக்கு வழங்கி வரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.