முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்து வழிநடாத்த செயற்திட்டம்

RPSL அமைப்பு நடவடிக்கை

0 276

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள சவால்கள், மற்றும் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆராய்ந்து சமூ­கத்தை வழி­ந­டாத்­து­வ­தற்கு ‘இலங்­கையில் சமா­தா­னத்தை மீள அடைதல் (Regain Peace Sri Lanka) எனும் அமைப்பு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது. ஏனைய சமூ­கங்­க­ளி­லி­ருந்து முஸ்லிம் சமூகம் எதிர்­கொள்ளும் சவால்கள் தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­படும். சுமு­க­மான தீர்­வு­க­ளுக்கு வழி­காட்­டப்­படும் என இலங்­கையில் சமா­தா­னத்தை மீள அடைதல் எனும் அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

Regain Peace Sri Lanka எனும் அமைப்பின் வரு­டாந்த மாநாடு அண்­மையில் கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரியின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. வரு­டாந்த மாநாட்­டுக்கு தலைமை வகித்து உரை­யாற்­று­கை­யிலேயே சப்ரி ஹலீம்தீன் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், நாட்டில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு இனங்­க­ளுக்­கி­டையில் சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்கம் சவா­லுக்­குள்­ளா­கி­யுள்­ளது. எனவே மீண்டும் சமா­தா­னத்தைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய பொறுப்பு எமக்­கி­ருக்­கி­றது என்றார்.

இவ்­வ­மைப்பு புத்­தி­ஜீ­விகள், அர­சியல் தலை­வர்கள், சட்­டத்­த­ர­ணிகள், துறைசார் நிபு­ணர்கள், சட்ட வல்­லு­நர்கள் என சுமார் 250 உறுப்­பி­னர்­களை உள்­ள­டங்­கி­யுள்­ளது. இவ்­வ­மைப்பின் செய­லா­ள­ராக விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஷாமிலா தாவூத் பதவி வகிக்­கிறார்.
ஒவ்வொரு துறைக்­கு­மான ஆறு குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு அக்­கு­ழுக்­களில் குறிப்­பிட்ட நிபு­ணர்கள் உள்­ள­டக்­கப்­பட்டுள்ளனர். ஒவ்­வொரு மாதமும் பணிப்­பாளர் சபையின் கூட்டம் இடம் பெறுகிறது.

இவ்வமைப்பு ஏற்கனவே கல்வி அபிவிருத்திக்கான அறிக்கையொன்றினை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.