கொவிட் சடலங்களை எரிக்க வேண்டுமென நிபுணர் குழுவை தவறாக வழிநடாத்தியவர் மெத்திகா விதானகே

ரவூப் ஹக்கீம் எம்.பி.யின் கேள்விக்குப் பதிலளிக்கையில் சுகாதார அமைச்சர் கெஹலிய

0 73

கொவிட் -19 வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களை தகனம் செய­வ­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மானம் தொடர்பில் கடந்த வாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெ­ல­விடம் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார். அவர் எழுப்­பிய கேள்­வி­க­ளையும் சுகா­தார அமைச்­சரால் அளிக்­கப்­பட்ட பதில்­க­ளையும் இங்கு தொகுத்து தரு­கிறோம். இதே­வேளை இத் தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட காலப்­ப­கு­தியில் சுகா­தார அமைச்­ச­ராகப் பதவி வகித்த பவித்ரா வன்­னி­யா­ராச்­சி­யி­டமும் ரவூப் ஹக்கீம் 2021 இல் சில கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்தார். அது தொடர்­பான விப­ரங்­களும் இங்கு
இணைக்­கப்­பட்­டுள்­ளன.

ரவூப் ஹக்கீம் எம்.பி: கொவிட் -19 வைரஸ் தொற்று கார­ண­மாக எரிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் அடக்கம் செய்­யப்­பட்­ட­வர்கள் பற்றி தீர்­மா­னிப்­பது தொடர்பில் ஒரு விசேட செய­ல­ணியை நிய­மித்­தி­ருந்­த­தாகக் கூறி­னீர்கள். ஸ்ரீ ஜய­வர்த்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் பிர­யோக விஞ்­ஞா­ன­பீ­டத்தின் பேரா­சி­ரி­யை­யொ­ருவர், வைரஸ்கள் நிலக்கீழ் நீரினால் பர­வு­வ­தான ஒரு வதந்­தியை பரப்­பு­வதில் முன்­னிலை வகித்தார். அது நீங்கள் கூறி­யது போல, முஸ்­லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்­லா­த­வர்­களின் உடல்­களை பெரும் எண்­ணிக்­கையில் வெகு தூரத்தில் உள்ள ஓட்­ட­மா­வ­டிக்கு, இந்த விஞ்­ஞா­ன­பூர்­வ­மற்ற மற்றும் நியா­ய­மற்ற, இன­வாத கொள்­கையின் அடிப்­ப­டையில் கொண்டு செல்ல வழி வகுத்­தது. ஆகையால், இப்­போது இந்த வைரஸ்கள் நீரினால் பர­வு­வதில்லை என விஞ்­ஞா­ன­பூர்­வ­மாக நிரூ­பிக்­கப்­பட்டு, வைரஸ்கள் இறந்த உடலில் உயிர் வாழ்­வ­தில்லை, இறந்த கலங்­களில் அவை இருப்­ப­தில்லை என நன்கு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கத்­தக்கதாக, அர­சாங்கம், துறை­சார்ந்த இன­வா­திகள் சிலரை இந்தச் செய­ல­ணியில் நிய­மித்­தி­ருப்­பதை நீங்கள் ஏற்றுக் கொள்­கி­றீர்­களா?

சுகா­தார அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல: நான் அப்­போது சுகா­தார அமைச்­ச­ராக இருக்­க­வில்லை. அப்­போ­தைய ஊடக அமைச்சர் என்­ற ­வ­கை­யி­லேயே நான் அந்தக் குழுவில் இடம்­பெற்­றி­ருந்தேன். ஆனால், இந்த விவ­கா­ரத்­தோடு முழு­மை­யாக சம்­பந்­தப்­பட்­டி­ருந்தேன். நீங்கள் சரி­யாக சுட்­டிக்­காட்­டி­ய­வாறு உரிய விட­யங்கள் தொடர்­பான துறைசார் விற்­பன்­னர்கள் அதற்­காகத் தேர்ந்­த­டுக்­கப்­பட்டு, ஆராய்ந்து தீர்­மானம் எடுக்கச் சந்­தர்ப்­ப­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். நான் உங்­க­ளோடு உடன்­ப­டு­கின்றேன். பேரா­சி­ரி­யர்கள் கூட தவ­றி­ழைத்திருக்­கின்­றார்கள். ஆனால், அவை சீர்­செய்யக் கூடி­ய­தான தவ­றுகள். துறைசார் நிபு­ணர்கள் என்ற வகையில் நீங்கள் கூறு­வது போல அதி­க­மானோர் உலக சுகா­தார நிறு­வத்தின் வழி­காட்­ட­லோடு இணங்­கி­னார்கள். ஆனால், மெத்­திகா விதா­னகே என்ற அர­க­ல­யவில் (ஆர்ப்­பாட்டம் ) ஈடு­பட்ட பேரா­சி­ரியை அதற்கு எதி­ராக இருந்தார். இணங்­காது விட்டால் தான் தொழிலை விட்டு வெளி­யே­று­வ­தா­கவும் அவர் அச்­சு­றுத்­தினார்.

ரவூப் ஹக்கீம் எம்.பி: அந்த பேரா­சி­ரி­யையின் பெயரை கூட நான் குறிப்­பிட விரும்­ப­வில்லை. நீங்கள் இப்­போது அந்தப் பெயரைக் கூறி­னீர்கள். அது நல்­லது. தவ­றான முன்­னெ­டுப்பின் ஊடாக ஒரு தவ­றான தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தாக நீங்கள் ஏற்றுக் கொள்­கி­றீர்கள். நிறைய பேர் பாதிக்­கப்­பட்டு, மன உளைச்­ச­லுக்கும் ஆளாகி இருக்­கின்­றனர். அவர்கள் இன ரீதி­யாக அநீ­தி­யி­ழைக்­கப்­பட்­டுள்­ளனர். ஆகையால், சம்­பந்­தப்­பட்ட நிபு­ணர்­க­ளுக்கு எதி­ராக இழப்­பீட்டு வழக்குத் தொடுக்க அரு­க­தை­யி­ருக்­கின்­றது. பவித்ரா வன்­னி­யா­ராச்சி அமைச்­ச­ராக இருக்­கும்­போது இது பற்றி அவ­ரிடம் கேட்­ட­போ­தெல்லாம் அவர் பந்தை நிபு­ணர்கள் குழுவின் பக்கம் திருப்­பி­விட்டார்.

அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல: அவரை குறை­கான முடி­யாது. அவர் ஒரு சட்­டத்­த­ரணி.ஒரு துறைசார் நிபுணர் அல்லர். நிபு­ணர்கள் எனப்­ப­டு­ப­வர்கள் தவ­றாக வழி­ந­டத்­தி­யதை ஏற்றுக் கொள்­கின்றேன்.
ரவூப் ­ஹக்கீம் எம்.பி : அமைச்­சரே இவ்­வாறு நீங்கள் அர­சாங்­கத்தின் தவறை பகு­தி­ய­ள­வி­லேயே ஏற்றுக் கொள்­கி­றீர்கள். இப்­போது இந்த விடயம் தவ­றான தீர்­மானம் என பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருப்­பதால், மூவா­யி­ரத்­திற்கு மேற்­பட்­ட­வர்­களை கஷ்­டப்­பட வைத்­த­தற்­காக அர­சாங்கம் அவர்­க­ளுக்கு உரிய இழப்­பீடை வழங்­குமா?
தூர பிர­தே­ச­மான ஓட்­ட­மா­வ­டிக்கு உடல்­களை கொண்­டு­சென்­றது மட்­டு­மல்­லாமல், இரா­ணு­வத்தை பின்­தொ­டர வைத்து அவை அங்கு கொண்டு செல்­லப்­பட்­டன. உற­வினர் இரு­வரே அடக்கம் செய்யும் இடத்­திற்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர். பெரும் தொகை­யான அர­சாங்க பணம் வீணாக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான மன உளைச்­சலை ஏற்படுத்­தி­ய­தற்கா­க­வும்­ உ­ரிய இழப்­பீடு வழங்க வேண்டும் என்றார்.
2021 இல் கேட்கப்பட்ட கேள்விகள்
இவ்­வா­றி­ருக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் அப்­போ­தைய சுகா­தார அமைச்சர் பவித்­ரா­தேவி வன்­னி­யா­ராச்­சி­யிடம் 2021 இல் கேட்ட எழுத்து மூல கேள்வியொன்­றிக்கு அவர் 2021 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி நேரத்தில் பதி­ல­ளிக்கும் போது, 2021 மார்ச் 19ஆம் திகதி வரை கொவிட் 19 வைரஸ் தொற்று கார­ணத்­தினால் மர­ணித்­த­வர்­களின் எண்­ணிக்கை 546 என்று தெரி­வித்­துள்ளார். கேள்­வியில் அடங்­கி­யி­ருந்த ஏனை­ய­வற்றை சமர்ப்­பிக்க முடி­யா­துள்­ள­தாக மறுத்­துள்ளார். வேண்­டப்­படும் தகவல் மற்றும் ஆவ­ணங்­களில் மர­ணித்த நோயா­ளர்­களின் தனிப்­பட்ட தக­வல்கள் உள்­ள­டக்கி உள்­ளதால் அவை இர­க­சிய தக­வல்கள் எனவும் குறிப்­பிட்­டுள்ளார். (ஆதாரம்: ஹன்சாட் 21. 3.2021 பக்கம் 739 தொடக்கம் பக்.742)

அப்­போது ரவூப் ஹக்கீம் எம்.பி. கேட்­டி­ருந்த கேள்­விகள்:
(அ)(1), கொவிட்-19 வைரஸ் தொற்று கார­ண­மாக இலங்­கையில் இது­வரை உயி­ரி­ழந்த ஆட்­களின் எண்­ணிக்கை யாது ?
(2) மேற்­படி ஒவ்வோர் ஆளி­னதும் பெயர், முக­வரி, உயி­ரி­ழந்த திகதி, உயி­ரி­ழக்கும் போது வயது, உயி­ரி­ழந்த இடம், சட­லங்­களை இனம் கண்­டுள்ள நெருங்­கிய உற­வி­னர்­களின் பெயர், மேற்­படி சட­லங்கள் தகனம் செய்­யப்­பட்ட இடம் மற்றும் தகனம் செய்­யப்­பட்ட திகதி என்­பன தனித்­த­னியே யாவை?
(3) மேற்­படி உயி­ரி­ழந்த ஒவ்வோர் ஆளி­னதும் மரணம் பதிவு செய்­யப்­பட்ட திகதி, பதிவு இலக்கம் மற்றும் பிரிவு என்­பன தனித்­த­னியே யாவை?
(4) மேற்­படி உயி­ரி­ழந்த ஒவ்வோர் ஆளி­னதும் மரணச் சான்­றி­தழின் தலா ஒரு பிரதி வீதம் சபா­பீ­டத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­ப­டுமா என்­பதை அவர் இச்ச­பைக்கு அறி­விப்­பாரா?
(ஆ)இன்றேல் ஏன்?
அவற்­றிற்கு அப்­போ­தைய சுகா­தார அமைச்சர் பவித்­ரா­தேவி வன்­னி­யா­ராச்சி அளித்த பதில்கள்:
(அ) (1)கொவிட் 19 வைரஸ் தொற்றின் கார­ண­மாக 2021.03.19ஆம் திகதி யாகும்­போது இலங்­கையில் மர­ணித்­த­வர்­களின் எண்­ணிக்கை 546 ஆகும்.
(2)சமர்ப்­பிக்க முடி­யா­துள்­ளது. (3)சமர்ப்­பிக்க முடி­யா­துள்­ளது. (4)சமர்ப்­பிக்க முடி­யா­துள்­ளது .
(ஆ) வேண்டப்பட்டவர்களின் தகவல்கள் மற்றும் ஆவணங்களில் மரணித்த நோயாளிகளது தனிப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளன.அவை இரகசியத் தகவல்கள் ஆகும் என்றுள்ளது.
மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பி அதுவரை எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் பற்றி அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்வதற்கும், தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குமாகவே,பொதுவாக எரிக்கப்பட்ட அனைவரினதும் தகவல்கள் கேள்விகளாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அப்பொழுது கேட்டிருந்தார். இவை பற்றி இன்னும் சில கேள்விகளை தாம் கேட்டிருப்பதாகவும் இந்த கொவிட்-19 ஜனாஸா விவகாரத்தில் தொடர்ந்தும் கூடுதலான கரிசனை செலுத்தி வருவதாகவும் மு.கா தலைவர் ஹக்கீம்,”விடிவெள்ளி” க்குத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.