அரசாங்கத்தில் இணையேன் என்கிறார் கபீர்

இணைவது குறித்து யோசிப்பதாக கூறுகிறார் பௌசி

0 280

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கபீர் ஹாஷிம் மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் அர­சாங்­கத்தில் இணை­ய­வுள்­ளனர் என செய்­திகள் பரவி வரும் நிலையில் கபீர் ஹாஷிம் அதனை மறுத்­துள்­ளார்.

எனினும், தான் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வது குறித்து யோசித்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக ஏ.எச்.எம்.பௌஸி தெரி­வித்­துள்ளார்.

கபீர் ஹாஷிம் (எம்.பி.)
‘நான் அர­சாங்­கத்­துடன் இணைந்து கொள்­ளப்­போ­கிறேன் என்று சில ஊட­கங்கள் தவ­றான செய்­தி­களைப் பிர­சு­ரிக்­கின்­றன. நாட்டின் பிர­தான எதிர்­க்கட்சி என்ற வகையில் எங்­க­ளுக்கு பாரிய பொறுப்பு உள்­ளது. எவ­ருக்கும் நினைத்த மாத்­தி­ரத்தில் ஒரு­வ­ரிடம் போய்ச்­சேர முடி­யாது என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், நாட்டின் பிர­தான எதிர்­க்கட்சி என்ற வகையில் ஐக்­கிய மக்கள் சக்­திக்கு பாரிய பொறுப்பு உள்­ளது. அர­சாங்­கத்தின் தவ­று­களை சுட்­டிக்­காட்டி மக்கள் சார்­பாக செயற்­பட வேண்­டி­யுள்­ளது. இதுவே ஜன­நா­ய­கத்தின் அடிப்­ப­டை­யாகும்.

மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்கும் பொறுப்பு எதிர்க்­கட்­சி­க­ளி­டமே இருக்­கி­றது. எங்­க­ளுக்­கென்று ஓர் அர­சியல் கொள்­கை­யி­ருக்­கி­றது. நினைத்­த­வாறு கொள்­கை­களை மாற்­றிக்­கொள்ள முடி­யாது. ஒரு­வ­ரிடம் போய்ச் சேரவும் முடி­யாது. கட்சி என்ற ரீதியில் நாம் கலந்­து­ரை­யா­டியே தீர்­மா­னங்­களை மேற்­கொள்வோம்.

சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் உத­வியைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு நாம் எப்­போதோ கோரிக்கை விடுத்தோம். பேச்­சு­வார்த்தை நடத்­து­மாறு கோரினோம். ஆனால் அர­சாங்கம் அன்று செவி­சாய்க்­க­வில்லை. காலம் கடந்தே அர­சாங்­கத்­துக்கு ஞானம் பிறந்­தது. நாம் கூறி­யதை அர­சாங்கம் அன்றே கேட்­டி­ருந்தால் நாடு இந்த பாதா­ளத்தில் வீழ்ந்து அவ­திப்­படும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­காது.

கட்­சியில் அங்கம் பெற்­றி­ருக்கும் நாம் கட்­சி­யுடன் கலந்­து­ரை­யா­டுவோம். கட்­சியின் தீர்­மா­னமே இறு­தித்­தீர்­மா­ன­மாகும் என்றார்.

ஏ.எச்.எம். பெளஸி (எம்.பி.)
ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு தற்­போது மக்கள் செல்­வாக்கு அதி­க­ரித்து வரு­கி­றது. நாட்டை பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­ப­தற்கு அவர் மேற்­கொண்­டு­வரும் நட­வ­டிக்­கைகள் அவ­ருக்கு மக்கள் ஆத­ரவைத் தேடித்­தந்­துள்­ளது. ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து நாட்டின் மீட்­சிக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வதா என்­பது தொடர்பில் யோசித்துக் கொண்­டி­ருக்­கிறேன். ஆனால் நான் இது­வரை தீர்­மா­ன­மொன்று மேற்­கொள்­ள­வில்லை என பாரா­ளு­மன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.

‘எனது தீர்மானம் தீவிர ஆராய்வுகளின் பின்பு, சாதக பாதகங்களை ஆராய்வதன்பின்பே மேற்கொள்ளப்படும். அது சமூகத்துக்கான சேவையினை அடிப்படையில் அமைந்திருக்கும்” என்றும் அவர் மேலும் கூறினார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.