இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது சவூதி அரேபியா

0 188

சவூதி அரே­பி­யாவின் மன்னர் சல்மான் மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் நிவா­ர­ணங்­க­ளுக்­கான மையம் இலங்­கைக்கு 50 தொன் பேரீச்­சம்­ப­ழங்­களை நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளது. சவூதி அரே­பி­யாவின் இலங்­கைக்­கான தூதுவர் கலித் ஹமூத் அல்-­கஹ்­தானி, புத்­த­சா­சனம் மற்றும் மத கலா­சார அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­கா­விடம் இந்த பேரிச்­சம்­ப­ழங்­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளித்தார்.

இந் நிகழ்வு கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூத­ர­கத்தில் கடந்த 16ம் திகதி வியா­ழக்­கி­ழமை இடம் பெற்­றது. இந்த விழாவில் கிரா­மிய பொரு­ளா­தார இரா­ஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ. எச். எம். பெளஸி மற்றும் முஸ்லிம் சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஸைனுல் ஆபிதீன் முகம்­மது பைசல் உட்­பட இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சின் அதி­கா­ரிகள், அரச திணைக்­க­ளங்கள் மற்றும் தூத­ரக அதி­கா­ரிகள் எனப் பலரும் கலந்­து­கொண்­டனர்.

 

மன்னர் சல்மான் நிவா­ர­ணங்­க­ளுக்­கான மையம் உல­கெங்­கிலும் மேற்­கொண்டு வரும் மனி­தா­பி­மான முயற்­சி­களை சவூதி அரே­பிய தூதுவர் பாராட்­டி­ய­தோடு அம்­மு­யற்­சிகள் இரு புனி­தஸ்­த­லங்­க­களின் பாது­கா­வலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத், பட்­டத்து இள­வ­ரசர் பிர­தமர் போன்­றோரின் தலை­மை­யி­லான சவூதி அரே­பியா அர­சாங்கம் பல்­வேறு சூழ்­நி­லை­க­ளையும், இன்­னல்­க­க­ளையும் எதிர்­கொள்ளும் சகோ­தர மற்றும் நட்பு நாடு­க­ளுக்கும் அந்­நா­டு­க­ளி­லுள்ள மக்­க­ளுக்கும் உத­வு­வதில் காட்டும் ஆர்­வத்தை பிர­தி­ப­லிப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார். அவ்­வாறே சவூதி அரே­பி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான வலு­வான உற­வு­க­ளையம் தூதுவர் சுட்­டிக்­காட்­டினார்.

மத விவ­கார அமைச்சர், இலங்கை மக்­க­ளுக்கு வழங்­கிய அனைத்து உத­வி­க­ளுக்­கா­கவும் சவூதி அரே­பிய அர­சுக்கு தனது நன்­றியைத் தெரி­வித்­துக்­கொண்­ட­தோடு, இவ்­வாறு மனி­தா­பி­மா­னத்தின் இராச்­சி­ய­மான சவூதி அரே­பியா, உலகின் அனைத்துப் பகு­தி­க­ளிலும், தாரா­ள­மான நன்­கொ­டை­களை வாரி­வ­ழங்­கு­வ­தென்­பது ஆச்­ச­ரித்­தக்க விட­ய­மல்ல என்றும் அவர் தெரி­வித்தார்.

இந் நன்­கொ­டை­யா­னது இரு புனி­தத்­த­லங்­களின் பாது­கா­வலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசர் பிரதமர் அவர்களால், பல சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்கு வழங்கும் திட்டங்களின் கீழ், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மிகவும் தேவைப்படும் குடும்பங்களைச் சென்றடையும் நோக்கோடு வழங்கப்பட்டதாகும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.