பலஸ்தீன் மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்

இலங்கை - பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம்

0 108

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இஸ்­ரே­லிய படைகள் கடந்த வாரம் இஸ்­ரே­லிய குடி­யற்றேப் பகு­தியில் இஸ்ரேல் பலஸ்தீன் மக்­களை படு­கொலை செய்­துள்­ள­மையை இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது.

ஜெனின் அகதி முகாமில் 10 பலஸ்­தீ­னி­யர்கள் இஸ்­ரே­லிய படை­களின் தாக்­கு­தல்­க­ளினால் பலி­யா­கி­யுள்­ளனர். கடந்த மாதங்­க­ளிலும் இவ்­வா­றான தீடீர் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன.

பென்­ஜமின் நெதன் யாகுவின் புதிய அர­சாங்­கத்தின் கீழ் இம்­மாதம் இஸ்­ரே­லிய படை­யி­னரால் 30 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இதே­வேளை சியோ­னிஸ தீவி­ர­வா­திகள் இஸ்­ரே­லிய குடி­யேற்­றப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்தும் பலஸ்­தீன மக்கள் வெளி­யேற வேண்­டு­மென கோரி­யுள்­ளனர்.

இஸ்­ரே­லிய படை­யினர் வைத்­தி­ய­சா­லை­யொன்றின் சிறுவர் பிரிவின் மீது கண்­ணீர்­புகை பிர­யோகம் செய்­துள்­ளனர் என்ற செய்­திகள் எம்மை கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது. கண்ணீர் புகை பிர­யோ­கத்­துடன் மாத்­திரம் நின்று விடாது காஸா பள்­ளத்­தாக்கின் மீது ஆயு­தப்­பி­ர­யோ­கமும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்­ப­தையும் இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

நாங்கள் பலஸ்­தீ­னர்­களின் தலை­மைத்­து­வத்­துக்கும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் ஒத்­து­ழைப்பு வழங்­கு­கிறோம். அண்­மைய பலஸ்­தீன மக்கள் மீதான தாக்­கு­தல்­க­ளுக்கு இஸ்ரேல் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றின் முன்­நி­றுத்­தப்­பட வேண்டும் என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறோம். இஸ்­ரேலின் புதிய தலை­மைத்­துவம் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை மேலும் அதி­க­ரிக்கும் என்­பது அண்­மைக்­கால தாக்­கு­தல்கள் உறுதி செய்­கின்­றன.
இலங்கை அர­சாங்கம் பலஸ்­தீ­னர்­களின் பக்கம் சார்ந்து, குடி­யேற்றப் பிராந்­தி­யங்­களில் இஸ்ரேல் மேற்­கொள்ளும் யுத்தக் குற்­றங்­களைக் கண்­டிக்க வேண்­டு­மென வேண்­டுகோள் விடுக்­கின்றோம்.

நாங்கள் சர்­வ­தே­சத்தில் சமா­தா­னத்தை, அன்பை விரும்பும் மக்­க­ளுடன் இணைந்து கொள்­கிறோம். அத்­தோடு பலஸ்­தீன குடி­யேற்றப் பிராந்­தி­யங்­க­ளி­லி­ருந்து இஸ்­ரே­லிய படைகள் உட­ன­டி­யாக நிபந்­த­னைகள் எது­வு­மின்றி வெளி­யேற வேண்டும். சட்டவிரோத குடியேற்றங்களை பலஸ்தீனத்திலிருந்து அகற்றிக்கொள்ள வேண்டும். பலஸ்தீனர்களின் நிலம் விடுவிக்கப்படவேண்டும். பலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்புகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.