இஸ்லாம் பாட பரீட்சார்த்திகளுக்கு பாதிப்பு ஏற்படாது

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

0 247

(எம்.ஆர்.எம்.வசீம், இரா­ஜ­துரை ஹஷான்)
இஸ்லாம் பாடப்­புத்­தகம் மாண­வர்­க­ளி­ட­மி­ருந்து மீள பெறப்­பட்­ட­தனால் சாதா­ரண தர பரீட்­சைக்கு தோற்ற இருக்கும் மாண­வர்­க­ளுக்கு இதன் மூலம் பாதிப்பு ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. படித்­துக்­கொ­டுக்க ஆசி­ரி­யர்­க­ளுக்கு பாடப்­புத்­தகம் தேவை­யில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று தெளி­வு­ப­டுத்தல் கூற்­றொன்றை முன்­வைத்து எதிர்க்­கட்சி உறுப்­பினர் இஷாக் ரஹ்மான் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

இஷாக் ரஹ்மான் தெரி­விக்­கையில், கல்வி பொதுத் தரா­தர பரீட்­சைக்­கான கேள்­விகள் 10 மற்றும் 11 தர புத்­த­கங்­களில் இருந்தே வரு­கின்­றன. ஆனால் இஸ்லாம் பாடப்­புத்­தகம் மாண­வர்­க­ளி­மி­ருந்து மீள பெறப்­பட்டு இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை. அப்­படி இருக்­கையில், அடுத்த மார்ச் மாத­ம­ளவில் பரீட்சை இட­ம­பெற இருக்­கின்­றது. இதனால் இஸ்லாம் பாட பரீட்சை எழுதும் மாண­வர்­க­ளுக்கு அநீதி ஏற்­ப­டு­கின்­றது. அதனால் இந்த மாண­வர்­க­ளுக்கு ஏதா­வது சலு­கைகள் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா என கேட்டார்.

அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில்,
தரம் 6முதல் 11வரை­யான இஸ்லாம் பாடப்­புத்­த­கத்தில் திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என பாது­காப்பு அமைச்­சினால் தெரி­விக்­கப்­பட்டதன் பிர­காரம் கல்வி அமைச்சின் புத்­தக வெளி­யீட்டு திணைக்­களம் அந்த திருத்­தங்­களை மேற்­கொண்­டுள்­ளது. அடுத்த மாதத்தில் மாண­வர்­க­ளி­மி­ருந்து பெறப்­பட்ட புத்­த­கங்கள் மீண்டும் வழங்­கப்­படும். அத்­துடன் இஸ்லாம் பாடப்­புத்­தகம் மீள பெறப்­பட்­ட­தனால் கல்வி பொதுத் தரா­தர சாதா­ரண தர பரீட்­சைக்கு தோற்ற இருக்கும் மாண­வர்­க­ளுக்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.

ஏனெனில் மாண­வர்­க­ளுக்கு படித்­துக்­கொ­டுக்க அச்­சுப்­புத்­தகம் தேவை­யில்லை. பாடத்­திட்­டத்தை ஆசி­ரி­யர்கள் முறை­யாக கற்­றுக்­கொ­டுப்­பார்கள். மாண­வர்­க­ளுக்கு அச்­சுப்­புத்­தகம் வழங்குவது பரிசீலனை செய்வதற்கு மாத்திரமாகும். அதனால் அச்சுப்புத்தகம் இல்லாமை சாதாரண தர பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கு பாரியதொரு தாக்கம் ஏற்படப்போவதில்லை என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.