மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகார வழக்கு: மூவர் விடுதலை; 11 பேருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறை

0 237

 விரைவான விடுதலையை கருதி குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கேகேலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு; நெளபர் மெளலவி, சாஜித் மெளலவிக்கு எதிராக மட்டும் சாட்சி விசாரணை

 

எம்.எப்.எம்.பஸீர்

மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில்  கைது செய்­யப்­பட்டு, வழக்குத் தொட­ரப்­பட்ட 16 பிர­தி­வா­தி­களில் மூவரை வழக்­கி­லி­ருந்து விடு­வித்த சப்­ர­க­முவ மாகாண மேல் நீதி­மன்றின் (கேகாலை) மூவர் கொண்ட நீதி­ப­திகள் அமர்வு (ட்ரயல் அட் பார்) மேலும் 11 பேருக்கு 7 வரு­டங்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட 3 மாத கால சிறைத் தண்­ட­னையை அளித்து தீர்ப்­ப­ளித்­தது.

குறித்த வழக்கில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்­டுக்­களை  விலக்­கிக்­கொள்ள சட்ட மா அதிபர்  இணங்­கிய நிலையில், தண்­டனை சட்டக் கோவையின் கீழ் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டினை, விரை­வான விடு­தலை கருதி 11 பிர­தி­வா­திகள் ஏற்­றுக்­கொண்ட நிலை­யி­லேயே அவர்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

எவ்­வா­றா­யினும் குற்­றச்­சாட்­டுக்­களை   8 ஆவது பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டுள்ள அபூ செய்த் எனும்  மொஹம்மட் இப்­ராஹீம் நெளபர் மெள­லவி, 9 ஆவது பிர­தி­வா­தி­யான அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெள­லவி ஆகியோர் ஏற்­றுக்­கொள்ள மறுத்த நிலையில், அவ்­வி­ரு­வ­ருக்கு எதி­ராக மட்டும் குறித்த வழக்கை முன்­னெ­டுத்து செல்ல நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள்  கடந்த 2 ஆம் திகதி  சப்­ர­க­முவ மாகாண  மேல் நீதி­மன்றில் (கேகாலை) நீதி­பதி  ஜகத் கஹந்­த­க­மகே தலை­மை­யி­லான  ஜயகி டி அல்விஸ் மற்றும்  இந்­திகா காலிங்­க­வங்ச ஆகிய நீதி­ப­திகள் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்ற அமர்வு  முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்­ப­கு­தியில் மாவ­னெல்லை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­களில் மாவ­னெல்லை திதுல்­வத்­தை­யிலும் ஏனைய இடங்­க­ளிலும் ஐந்து புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் 16 பேருக்கு எதி­ராக, கேகாலை மேல் நீதி­மன்றில் சட்ட மா அதிபர் வழக்குத் தொடர்ந்­துள்ளார்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழும், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி அளித்­தலை தடுப்­பது தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­காப்­பாட்டு சட்­டத்தின் கீழும்  21 குற்­றச்­சாட்­டுக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இரு சமூ­கங்­க­ளி­டையே மோதலை உரு­வாக்க சதித் திட்டம் தீட்­டி­யமை, 5 புத்தர் சிலை­களை தகர்த்­தமை,  சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்­வு­களை தூண்­டி­யமை, தோப்பூர் மாவ­னெல்லை, ஹம்­பாந்­தோட்டை மற்றும் நுவ­ரெ­லியா பகு­தியில் அதற்­கான வதி­விட கருத்­த­ரங்­குகள் மற்றும் ஆயுதப் பயிற்­சி­யினைப் பெற்­றமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழும்,  ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்­த­ரங்­கு­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை நேர­டி­யா­கவும் மறை­முக மாகவும் வழங்­கி­யமை தொடர்பில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி­ய­ளிப்­பதை தடுக்கும் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழும்  குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன.

2019 ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­திய பயங்­க­ர­வாதி சஹ்ரான் மற்றும் முறைப்­பாட்­டாளர் அறி­யா­த­வர்­க­ளுடன் இணைந்து பிர­தி­வா­திகள் இக்­குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.
இக்­குற்­றச்­சாட்­டுக்­களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்­க­ளையும், 92 சாட்­சி­யா­ளர்­களின் பட்­டி­ய­லையும் சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் இணைத்­துள்ளார்.

  1.  மொஹம்மட் அல்பர் மொஹம்மட் அஸ்பாக்
  2.  மொஹம்மட் பைசர் மொஹம்மட் முப்தி
  3. மொஹம்மட் அக்பர் மொஹம்மட் முனீப்
  4.  மொஹம்மட் சுபியான் மொஹம்மட் இர்ஷாத்
  5. மொஹம்மட் அஸ்ஹர் அதீக் அஹமட்
  6. நஜி­முதீன் மொஹம்மட் பெளசான்
  7. ரஷீத் மொஹம்மட் இப்­ராஹீம் அல்­லது இப்­ராஹீம் மெள­லவி அல்­லது இப்­ராஹீம் சேர்
  8. அபூ செய்த் எனும்  மொஹம்மட் இப்­ராஹீம் நெளபர் மெள­லவி
  9. அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெள­லவி
  10. அபூ பலாஹ் எனப்­படும் மொஹம்மட்  இப்­ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
  11. அபூ உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம்  சாதிக் அப்­துல்லாஹ்
  12. அபூ ஹினா  அல்­லது சிவப்பு தாடி என அறி­யப்­படும் மொஹம்மட் ஹனீபா சைனுல் ஆப்தீன்
  13. ஹிஸ்­புல்லாஹ் கான் ஹாமித்
  14. அபூ சியா எனப்­படும் ஹயாத்து மொஹம்­மது அஹ­மது  மில்ஹான்
  15. ஹாஜா மொஹிதீன்
  16. ஹனன் ஹம்­சுதீன் எனும் ஹனன்

ஆகிய 16 பேருக்கு எதி­ரா­கவே இந்த குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.
இந் நிலை­யி­லேயே  வழக்கின் சாட்சி விசா­ர­ணை­களை  முன்­னெ­டுக்க முன்னர், கடந்த ஜூலை மாதம் குற்றப் பத்­தி­ரிகை திருத்­தப்­பட்­டது.

பிர­தி­வா­திகள் தரப்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் , சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான ருஷ்தி ஹபீப் சம்பத், ஹேவா பத்­தி­ரன, கஸ்­ஸாலி ஹுசைன் உள்­ளிட்­டோரின் வாதங்கள் மற்றும் சட்ட மா அதி­பரின் இணக்­கத்­துடன்  இக்­குற்றப் பத்­தி­ரிகை திருத்­தப்­பட்­டது.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்ட குற்றப் பத் ரிகையில் 21 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்த நிலையில்,  அது திருத்­தப்­பட்டு தண்­டனைச் சட்டக் கோவையின் 209 மற்றும் 290 ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழ் மட்டும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன.

இவ்­வா­றான நிலை­யி­லேயே கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தி­ருந்­தது.

இதன்­போது  வழக்குத் தொடுநர் சார்பில் இந்த வழக்கில்,  அரசின்  பிரதி சொலி­சிட்டர் ஜெனரால்  வசந்த பெரேரா தலை­மையில் சிரேஷ்ட அரச சட்­ட­வா­தி­க­ளான  உதார கரு­ணா­தி­லக, சஜின் பண்­டார சட்­ட­வாதி  ஹரீந்ர ஜய­சிங்­க ­ஆ­கியோர் ஆஜ­ரா­கினர்.
1,2,5,12,13,16 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான  எம்.சி.எம். முனீர்,  எம்.ஐ.எம். நளீம், ரிஸ்வான் உவைஸ் உள்­ளிட்டோர் ஆஜ­ரா­கினர்.

3,4,14 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக  சட்­டத்­த­ரணி முபீ­னுடன் சட்­டத்­த­ரணி சஷிக பெரேரா ஆஜ­ரா­கினர்.

15 ஆம் பிர­தி­வா­திக்­காக சட்­டத்­த­ரணி சம்பத் ஹேவா­பத்­தி­ர­ணவும் சட்­டத்­த­ரணி  ஏ.சி.எம். அக்­ரமும் ஆஜ­ரா­கினர். 9 ஆம் பிர­தி­வா­திக்கு சட்­டத்­த­ரணி துஷாரி வரா­பிட்­டி­ய­வுடன் சட்­டத்­த­ரணி  கஸ்­ஸாலி ஹுசைன் ஆஜ­ரா­கினார். 6,7,8,10 மற்றும் 11 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக  சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், இம்­தியாஸ் வஹாப்,  அசாத் முஸ்­தபா ஆகியோர்  ஆஜ­ரா­கினர்.

இதன்­போது,  குற்­றச்­சாட்­டுக்கள் திருத்­தப்­பட்­டதும்,  வழக்­கி­லி­ருந்து 3 பிர­தி­வா­தி­களை விடு­விக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் நட­வ­டிக்கை எடுத்­தது.

3 ஆம் பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டி­ருந்த மொஹம்மட் அக்பர் மொஹம்மட் முனீப் 4 ஆம்  பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டி­ருந்த மொஹம்மட் சுபியான் மொஹம்மட் இர்ஷாத், 16 ஆம் பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டி­ருந்த ஹனன் ஹம்­சுதீன் எனும் ஹனன் ஆகி­யோரே இவ்­வாறு வழக்­கி­லி­ருந்து முற்­றாக விடு­விக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர்.

இந் நிலையில்  8,9 ஆம் பிர­தி­வா­தி­க­ளான நெளபர் மெள­லவி மற்றும் சாஜித் மெள­லவி தவிர்ந்த ஏனைய 11 பிர­தி­வா­தி­களும், திருத்­தப்­பட்ட தண்­டனை சட்டக் கோவையின் கீழான குற்­றச்­சாட்­டினை ஏற்­றுக்­கொள்­வ­தாக நீதி­மன்­றுக்கு அறி­வித்­தனர். விரை­வான விடு­த­லையை கருத்தில் கொண்டு அவர்கள் இதனை நீதி­மன்­றுக்கு அறி­வித்­தனர்.
இந் நிலையில் குறித்த 11 பேரும் குற்­றச்­சாட்­டினை ஒப்­புக்­கொண்ட நிலையில், அது தொடர்பில் செயற்­பட்டு தண்­ட­னையை அறி­விக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் தீர்­மா­னித்து, தண்­டனை எவ்­வாறு அமைய வேண்டும் என்­ப­தற்­கான  வாதங்கள் நீதி­மன்றில் முன் வைக்­கப்­பட்­டன.

குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்­த­வர்­களில்  பெரும்­பா­லா­ன­வர்கள் குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட நிலையில் அவர்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட சிறைத் தண்­டனை  ஒன்­றினை வழங்கி விடு­விக்க வேண்டும் என  பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் வாதங்­களை முன் வைத்தார்.  அவர் ஆஜ­ரான, 1,2,5,12,16 ஆம் பிர­தி­வா­திகள் சார்பில் அவர் குறித்த வாதங்­களை முன் வைத்த போதும், அவ்­வா­தங்கள் ஏனைய பிர­தி­வா­திகள் தொடர்­பிலும்  ஆரா­யப்­பட்­டி­ருந்­தது.

குறிப்­பாக குற்­ற­வியல் சட்டக் கோவையின் 303 (1) ஆம்  அத்­தி­யா­யத்தின் கீழ்  11 விட­யங்­களை மையப்­ப­டுத்தி இந்த கோரிக்­கையை ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் முன் வைத்­தி­ருந்தார். பிர­தி­வா­திகள் ஏன் விடு­விக்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­கான நியா­யங்­களே அவ்­வா­த­மாக அமைந்­தது.  அவற்றை கருத்­திற்­கொண்டு, பிர­தி­வா­திகள்  நீதி­மன்றின் காலத்தை விரயம் செய்­யாது ஆரம்ப கட்­டத்­தி­லேயே குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டுள்­ள­மையை மையப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட சிறைத் தண்­டனை வழங்க வேண்டும் என்­பதே அவரின் வாத­மாக இருந்­தது.

குறித்த 11 விட­யங்­களும் வரு­மாறு :
1. குற்றம்  சாட்­டப்­பட்­டுள்­ள­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள், தமது வாழ் நாளில் முக்­கி­ய­மான, சிறப்­பான காலப்­ப­கு­தியில் வாழ்ந்­து­கொண்­டி­ருப்­ப­வர்கள். அவர்கள் 24 வய­துக்கும் 30 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள்.
2. பிர­தி­வா­திகள் நீதி­மன்றின் காலத்தை விரயம் செய்­யாது தண்­டனைச் சட்டக் கோவையின் கீழ் உள்ள  குற்­றச்­சாட்டு தொடர்பில்  ஆரம்ப சந்­தர்ப்­பத்­தி­லேயே குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டுள்­ளனர்.
3. 1,2,5 ஆம் பிர­தி­வா­திகள் தண்­டனை சட்டக் கோவையின் 290 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழான குற்­றச்­சாட்டு தொடர்­பிலும், 12,16 ஆம் பிர­தி­வா­திகள்  தண்­டனை சட்டக் கோவையின் 209 ஆம் அத்­தி­யா­யத்தின் 3 ஆம் பிரிவின் கீழான  குற்­றச்­சாட்­டி­னையும் ஒப்­புக்­கொண்­டுள்­ளனர்.
4. பிர­தி­வா­திகள் அக்­குற்­றச்­சாட்­டினை ஏற்­றுக்­கொள்ளும் போதும் அவர்கள் 3 வரு­டங்­களும் 7 மாதங்­களும்  அரசின் கைதில் இருந்­துள்­ளார்கள். 1,2,5 ஆகிய பிர­தி­வா­திகள் 3 வரு­டங்­களும் 7 மாதங்­களும்  அரச தடுப்பில் இருந்­துள்­ள­துடன்  12 ஆம் பிர­தி­வாதி  3 வரு­டங்­களும் 3 மாதங்­களும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.  16 ஆவது பிர­தி­வாதி  ஒரு வரு­டமும் 8 மாதங்­களும் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.
எனவே அவர்கள், விரை­வான விடு­த­லையை  நோக்­காக கொண்டே குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டுள்­ளனர்.
5. இவர்கள்  வாழ்வின் எந்த சந்­தர்ப்­பத்­திலும்  எந்­த­வொரு குற்றம், தவ­று­டனும் தொடர்­பு­ப­டா­த­வர்கள். சமூக விரோத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டா­த­வர்கள்.  கைவிரல் ரேகை பதி­வாளர் நாய­கத்தின் அறிக்கை  அவர்­க­ளுக்கு முன் குற்­றங்கள் இல்லை என்­பதை உறுதி செய்­கி­றது.
6.  பிர­தி­வா­திகள், அவர்­க­ளது மன­சாட்சிப் படி இந் நாட்டின் குடி­மக்­க­ளாவர்.  அவர்கள் மன உளைச்சல் உள்­ளிட்ட பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளனர்.  2018 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்­துக்கு முன்­பாக இருந்தே, சிறு­பான்மை மக்­களை இலக்­காக கொண்டு, விஷே­ட­மாக முஸ்­லிம்­களை இலக்­காக கொண்டு  முன்­னெ­டுக்­கப்­பட்ட பாரிய தாக்­கு­தல்கள், சம்­ப­வங்கள் கார­ண­மாக  அவர்கள்  மன வேதனை அடைந்­தி­ருந்­த­துடன்  மன அழுத்­தத்­துக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். பிர­தி­வா­திகள் எமக்கு தெரி­வித்த விட­யங்கள் மற்றும் விசா­ர­ணையில் வெளிப்­பட்ட விட­யங்­களும் இதனை உறுதி செய்­கின்­றன.
7.  முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது அடுத்­த­டுத்து தாக்­கு­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டமை மற்றும்  முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் மீது தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டமை, உல­க­ளவில் பில்­லியன் கணக்­கா­ன­வர்­க­ளது வணக்­கத்­துக்கு உரிய ஏக இறை­வ­னாக  ஏற்­றுக்­கொண்­டுள்ள அல்­லாஹ்வை பிர­சித்­த­மாக  அகெ­ள­ர­வப்­ப­டுத்த முயன்­றமை போன்ற சம்­ப­வங்­களும்  இதில் உள்­ள­டங்கும்.
8. அதே போல அளுத்­கம, திகன மற்றும் பல பகு­தி­களில்  முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்து, வெறுப்பை தூண்டி அவர்­களின் உணவு உள்­ளிட்ட மதம், கலா­சாரம் , சமூக  வாழ்வு மற்றும் வர்த்­தகம், வாழ்­வா­தாரம் என்­ப­வற்­றையும் மோச­மாக விமர்­சனம் செய்­தமை  இந்த மன வேதனை, உளைச்­ச­லுக்கு கார­ணங்­க­ளாக  கூறப்­பட்­டுள்­ளது.
9. இவை அண்­மைக்­கா­ல­மாக நடந்த சம்­ப­வங்கள். இவற்றால்,  இந்த இளை­ஞர்கள்  அவர்­க­ளது வாழ்வு மற்றும்  இந் நாட்டில் அவர்­க­ளது குடும்­பத்தார் மற்றும் ஏனை­யோரின்  எதிர்­காலம்  ஆபத்தில் இருப்­ப­தாக  நம்­பு­வ­தற்கு தூண்­டப்­பட்­டுள்­ளார்கள்.  அவ்­வாறு அதி­க­ரித்த  பாது­காப்­பற்ற சூழல் மற்றும் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான  தாக்­குதல் குறித்த அச்சம் மற்றும் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு அதி­கா­ரிகள் போது­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­காமை தொடர்பில்  இந்த இளை­ஞர்கள் கவலை கொண்­டுள்­ளனர்.  சிற் சில நட­வ­டிக்­கை­களை எடுக்கும் போது சிறு­பான்மை இனத்­த­வர்­களை மாற்றான் தாய் கண் கொண்டு பார்த்­த­மையும்  அக்­க­வ­லைக்கு கார­ண­மாகும்.
10.  2018 டிசம்பர் 26 ஆம் திகதி  மாவ­னெல்லை, லிந்­து­லையில்  புத்தர் சிலை ஒன்று சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.  சிலை வைக்­கப்­பட்­டி­ருந்த  கண்­ணா­டி­யி­லான மறைப்பு மீது  தாக்­கு­தலோ அல்­லது சேதப்­ப­டுத்­தலோ இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.  புத்தர் சிலை மீதான சேதப்­ப­டுத்­தலின் பின்­னரும் அந்த கண்­ணாடி மறைப்பு அவ்­வாறே இருந்­துள்­ளது.  முறைப்­பாட்­டாளர் தரப்பு பட்­டி­ய­லிட்­டுள்ள பொலிஸ் பதி­வு­களின் பிர­காரம்,  சிலைக்கு சிறிய 2 சேதங்கள் ஏற்­பட்­டுள்­ளன.  எனினும் தாக்­கு­தலை கண்ணால் கண்­ட­வர்கள் எவரும் இல்லை.
11. எனினும், வணங்­கப்­படும் ஒரு பொருளை யார் சேதப்­ப­டுத்­தி­னாலும் அது குற்றம். அவ்­வா­றான செயற்­பா­டு­களை ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.  வழக்கின் பிர­தி­வா­தி­களும்,  அவர்­க­ளுடன் சுமு­க­மாக வாழ்ந்த  ஒரு பிர­தே­சத்தின்,  பெளத்­தர்­களின் கெள­ர­வத்­துக்கு பாத்­தி­ர­மான   லிந்­துல புத்தர் சிலயை  சேதப்­ப­டுத்­தி­யமை   தவறு எனவும் அது நடந்தே இருக்கக் கூடாத செயல் எனவும்  கூறு­கின்­றனர்.  2018 ஆம் ஆண்டு இந்த சம்­ப­வத்­துக்கு முன்னர் நடந்த   18 முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்­களை போன்றே இத­னையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

லிந்­து­லையில்  நடந்த  குறித்த சம்­பவம் தொடர்பில்  பிர­தி­வா­திகள் கவ­லை­ய­டையும் நிலையில்,  சமா­தானம், நல்­லி­ணக்கம், அமைதி ஏற்­பட அவர்கள் பிரார்த்­திக்­கின்­றனர்.   அவர்கள் தமது கல்வி,  தொழில் உள்­ளிட்ட அன்­றாட வாழ்­வுக்கு மிக விரைவில் திரும்ப எதிர்­பார்ப்­புடன் உள்­ள­னர் ­என குறிப்­பிட்டு, பிர­தி­வா­தி­க­ளுக்கு  ஒத்தி வைக்­கப்­பட்ட சிறைத் தண்­ட­னையை  வழங்க வேண்டும் என அவர் கோரினார்.

இதனை ஒத்­த­தாக பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஆஜ­ரான ஏனைய சட்­டத்­த­ர­ணி­க­ளான ருஷ்தி ஹபீப் உள்­ளிட்­ட­வர்­களும் இலகு ரக தண்­டனை வழங்­கப்­படல் வேண்டும் என்­பதை மையப்­ப­டுத்தி வாதங்­களை முன் வைத்­தனர்.

இதன்போது தண்­டனை தொடர்பில் மன்றில் விட­யங்­களை முன் வைத்த அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால்  வசந்த பெரேரா,  பிர­தி­வா­திகள் நீண்ட நாட்கள் தடுப்புக் காவ­லிலும் விளக்­க­ம­றி­ய­லிலும் இருந்­த­மையை மையப்­ப­டுத்தி, அவர்­க­ளுக்கு இலகு தண்­டனை ஒன்­றினை அளிப்­பது தொடர்பில் ஆட்­சே­பனை இல்லை என தெரி­வித்தார். எனினும், 1 ஆம் பிர­தி­வாதி மொஹம்மட் அல்பர் மொஹம்மட் அஸ்பாக், 10 ஆம் பிர­தி­வாதி அபூ பலாஹ் எனப்­படும் மொஹம்மட்  இப்­ராஹீம் சாஹித் அப்துல் ஹக்,11 ஆம் பிர­தி­வாதி அபூ உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம்  சாதிக் அப்­துல்லாஹ் ஆகி­யோ­ருக்கு மட்டும் கண்­டிப்­பாக சிறைத் தண்­டனை அளிக்­கப்­படல் வேண்டும் என அவர் வாதிட்டார்.

இவ்­வா­றான நிலையில் அனைத்து விட­யங்­க­ளையும் ஆராய்ந்த சிறப்பு நீதி­மன்ற அமர்வு, தண்­டனை சட்டக் கோவையின் கீழான குற்­றச்­சாட்­டுக்­களை ஏற்ற 11 பிர­தி­வா­தி­க­ளுக்கும் 7 வரு­டங்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட 3 மாத சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது.

உண்­மையில் இவ்­வ­ழக்­கினை பொறுத்­த­வரை, தண்­டனைச் சட்டக் கோவையின் கீழான குற்­றச்­சாட்­டினை ஏற்க முன்னர், பிர­தி­வா­திகள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர், ருஷ்தி ஹபீப் உள்­ளிட்டோர் சட்ட மா அதி­பரைச் சந்­தித்து கலந்­து­ரை­யாடி இருந்­தனர். அவர்கள், ஒத்தி வைக்­கப்­பட்ட அல்­லது இலகு ரக தண்­டனை ஒன்­றுக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பு வெளி­யிடக் கூடாது எனவும்  அந்த நிபந்­த­னைக்கு இணங்­கினால் மட்டும் திருத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டினை ஏற்­ப­தாக அவர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். இதனை சட்ட மா அதி­பரும் ஏற்­றி­ருந்தார். அந்த அடிப்­ப­டை­யி­லேயே விரை­வான விடு­தலை கருதி இவ்­வாறு 11 பிர­தி­வா­தி­களால் குற்­றச்­சாட்டு  ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.
இந்த வழக்கை பொறுத்­த­வரை  முதலில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ்  குற்­றச்­சாட்­டுகள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தன. அதன் கீழ் 21 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.  அதே சட்­டத்தின் கீழ் வைத்­துக்­கொண்டு வழக்கு விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டி­ருந்­தாலோ அல்­லது குற்றம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தாலோ பிர­தி­வா­தி­க­ளுக்கு அதிக பட்ச தண்­டனை கிடைப்­ப­தற்­கான வாய்ப்­புக்­களே அதிகம் இருந்­தன.

காரணம் பிர­தி­வா­தி­களில் 5 பேர் கைதி­லி­ருக்கும் போது  உதவி பொலிஸ்  அத்­தி­யட்சர் ஒரு­வ­ருக்கும் நீதி­வா­னுக்கும் ஒப்­புதல் வாக்கு மூலங்களை வழங்கியிருந்தனர். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவ்வாறான ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்று மட்டும் ஒருவருக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்க போதுமானது. எனவே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருக்குமானால் பிரதிவாதிகளுக்கான விடுதலை சாத்தியம் மிகக் குறைவாகும். அத்துடன் அச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டிருப்பின் சுமார் 20 வருடங்கள் வரை கடூழிய சிறைத் தண்டனை கிடைத்திருக்கலாம்.

எனினும் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர், சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், கஸ்ஸாலி ஹுசைன், சம்பத் ஹேவாவசம் உள்ளிட்டோர் முன்னெடுத்த சிறந்த நகர்வுகள் ஊடாக முதலில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்கள்  நீக்கப்பட்டு, பின்னர் தண்டனை சட்டக் கோவையின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.

அதிலும் சட்ட மா அதிபருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய, குற்றத்தை ஒப்புக்கொண்டதன் ஊடாக 7 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 3 மாத சிறைத் தண்டனையே தீர்ப்பாக  கிடைக்கப் பெற்றுள்ளது. இது மிகப் பெரும் சட்டப் போராட்டம் எனலாம்.

இந்த விவ­கா­ரத்தில் குற்­றம்­சாட்­டப்­பட்ட பெரும்­பா­லா­ன­வர்கள் இளை­ஞர்கள்.  பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் எதிர்­கா­லமே இருளில் மூழ்கிப் போயி­ருந்த அவர்­க­ளுக்கு, இந்த தீர்ப்பு மிகப் பெரும் ஆறுதலாகும்.

7 வரு­டங்­க­ளுக்குள்  அவர்கள் ஏதேனும் குற்­ற­மொன்றில் ஈடு­பட்டால் மட்­டுமே 3 மாத சிறைத் தண்­டனை அமுல் செய்­யப்­படும். இல்­லையேல் அவர்கள் அந்த மூன்று மாத தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவே கருதப்படுவர்.

இது  பல வரு­டங்கள்  விளக்­க­ம­றி­யலில் கழித்த இளை­ஞர்­க­ளுக்கு மிகப் பெரும் நிவாரணமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.