வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

0 29

(எம்.வை.எம்.சியாம்)
வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உதவி புரி­யு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­பட்­டுள்ள இந்­நி­லையில் கடந்த சில நாட்­க­ளாகப் பெய்து வரும் கடும் மழையின் கார­ண­மாக நாட்டின் பல பகு­திகள் வெள்­ளத்­தி­னாலும் மண்­ச­ரி­வி­னாலும் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது யாவரும் அறிந்­ததே. இவ்­வா­றான நிலையில் எம்மால் முடி­யு­மான உத­வி­களை பாதிக்­கப்­பட்ட பிர­தேச மக்­க­ளுக்கு வழங்­கு­வது அல்­லாஹ்வின் பொருத்­தமும், உத­வியும் எமக்குக் கிடைப்­ப­தற்கும், ஆபத்­து­க­ளி­லி­ருந்து பாது­காப்புப் பெறவும் கார­ண­மாக அமை­கின்­றன.

ஆதலால், வசதி படைத்தோர் மற்றும் பாதிக்­கப்­ப­டாத பிர­தே­சங்­களில் உள்­ள­வர்கள் பாதிக்­கப்­பட்ட பிர­தேச மக்­க­ளுக்கு அப்­பி­ர­தே­சங்­களில் உள்ள ஜம்­இய்­யாவின் பிர­தேசக் கிளைகள் மற்றும் மஸ்ஜித் நிர்­வா­கங்கள் ஊடாக தங்­க­ளது உத­வி­களை மேற்­கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அனை­வ­ரையும் வேண்டிக் கொள்­கின்­றது.
அத்­துடன், தங்­க­ளது உத­வி­களை பண ரீதி­யாக மேற்­கொள்ள விரும்­பு­ப­வர்கள் கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் அல்­லது கண்டி மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் மற்றும் ஜம்­இய்­யாவின் கண்டி மாவட்டக் கிளை ஆகி­ய­வற்றைத் தொடர்பு கொண்டு அப்­பி­ர­தே­சங்­க­ளுக்கு உத­வி­களை வழங்­கு­மாறு ஜம்­இய்­யத்துல் உலமா வேண்டிக் கொள்­கின்­றது.

மேல­திக தக­வல்­க­ளுக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் சமூக சேவைப் பிரிவின் ஒருங்­கி­ணைப்­பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம்.பவாஸ் (0777-571876) அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம் என்று குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.