அமீரக, பாக். ஜனாதிபதிகள் ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்து

0 232

இலங்கை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஐக்­கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் ஜனா­தி­ப­திகள் வாழ்த்­து­களை தெரி­வித்­துள்­ளனர்.

இலங்கை ஜனா­தி­ப­தி­யுடன் தொலை­பேசி ஊடாக பேசி தமது வாழ்த்­து­களை ஐக்­கிய அரபு அமீ­ரக ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ள அதே­வேளை, பாகிஸ்தான் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு வாழ்த்­து­களை அறிக்கை ஊடாக அனுப்பி வைத்­துள்ளார்.

அமீ­ரக ஜனா­தி­பதி
இலங்கை எதிர்­நோக்கும் சிர­மங்­களைக் கடந்து நிலை­யான மற்றும் அமை­தி­யான சூழலை அடை­வ­தற்கு வாழ்த்­து­வ­தாக ஐக்­கிய அரபு அமீ­ரக ஜனா­தி­பதி ஷெய்க் முஹம்மத் பின் ஸாயித் அல் நஹ்யான் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையின் புதிய ஜனா­தி­ப­தி­யாக ரணில் விக்­ர­ம­சிங்க தெரிவு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, அவ­ருக்கு வாழ்த்துத் தெரி­விக்கும் வகையில் நேற்று முன்­தினம் தொலை­பேசி ஊடாக உரை­யா­டிய வேளை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இதன்­போது இரு நாட்டுத் தலை­வர்­களும் இரு­த­ரப்பு உற­வுகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­ய­தாக ஐக்­கிய அரபு இராச்­சியம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

பாகிஸ்தான் ஜனா­தி­பதி
ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ரணில் விக்­கி­ர­ம­சிங்கவுக்கு, பாகிஸ்தான் ஜனா­தி­பதி கலா­நிதி ஆரிப் அல்வி தனது வாழ்த்­து­களை தெரி­வித்­துள்ளார்.
ஜனா­தி­ப­திக்கு கடந்த ஞாயி­றன்று விசேட வாழ்த்துச் செய்­தியை தெரி­வித்­துள்ள பாகிஸ்தான் ஜனா­தி­பதி, இரு நாடு­க­ளுக்­கி­டையில் நில­வு­கின்ற உறவை இரு நாட்­டி­னதும் முன்­னேற்­றத்­திற்­காக மேலும் வலுப்­ப­டுத்­து­வதே தமது எதிர்­பார்ப்­பாகும் எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையின் கீழ், இலங்கை தற்­போ­துள்ள பொரு­ளா­தார சவால்­களை வெற்­றி­கொள்ளும் எனக் குறிப்­பிட்­டுள்ள ஆரிப் அல்வி, எதிர்காலத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தி, மிக நெருக்கமாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.