ஏனைய சமூகங்களுடன் முரண்படாதவகையில் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

0 192

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் தனியார் சட்டம் இலங்கை சுதந்­திரம் பெற்றுக் கொள்­வ­தற்கு முன்­பி­ருந்து நடை­மு­றையில் இருந்து வரு­கின்­றது. முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மாத்­தி­ரமே பல­தார மணத்­துக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இச்­சட்­டத்தில் திருத்­தங்கள் முஸ்லிம் சமூகத்­துடன் கலந்­து­ரை­யா­டப்­பட்டு ஏனைய சமூ­கங்­க­ளுடன் முரண்­ப­டாத வகையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் இது எமது பொறுப்­பாகும் என நீதி, சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, மற்றும் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் நடை­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்; மலை­நாட்டு சிங்­க­ள­வர்­க­ளுக்கு கண்­டியர் சட்டம், முஸ்­லிம்­க­ளுக்­கென முஸ்லிம் தனியார் சட்டம், வடக்கு தமி­ழர்­க­ளுக்­கென தேச­வ­ழமை சட்டம் என தனியார் சட்­டங்கள் இங்கு அமுலில் உள்­ளன. இச்­சட்­டங்­களின் கீழ் விவாக விவ­கா­ரங்கள், சொத்து விவ­கா­ரங்கள் ஆளப்­ப­டு­கின்­றன.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­வ­தற்­கென நீண்­ட­கா­ல­மாக ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளன. கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
2015 ஆம் ஆண்டு நான் நீதி­ய­மைச்­ச­ராகப் பதவி வகித்த காலத்­திலும் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்பில் கோரிக்கை விடுத்­தது. திருத்­தங்கள் மேற்­கொள்­வ­தற்­காக நானும் சலீம் மர்சூப் தலை­மையில் நிபு­ணத்­துவக் குழு­வொன்­றினை நிய­மித்­தி­ருந்தேன். சிபா­ரி­சுகள் அக்­கு­ழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டன. முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­ சப்­ரியின் காலத்தில் இச்­சட்டத் திருத்­தங்­களை உள்­ள­டக்­கிய சட்ட மூல­மொன்று தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

காதி­நீ­தி­மன்ற முறை­மையை இல்­லாமற் செய்தல், திரு­ம­ணத்­திற்கு மணப்­பெண்ணின் அனு­ம­தியைப் பெற்றுக் கொள்ளல், பல­தார மணத்தை இல்­லாமற் செய்தல் போன்ற திருத்­தங்கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன.

பல­தார மணம் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்தில் இரு கருத்­துக்கள் உள்­ளன. பல­தார மணத்தை இல்­லாமற் செய்ய வேண்டும் என ஒரு தரப்பு கோரிக்கை விடுக்கும் நிலையில், ஒரு சாரார், முதல் மனை­வியின் அனு­மதி கிடைக்­கப்­பெற்று, கணவர் மேலுமோர் மனை­வியை தாப­ரிக்கும் வகையில் பொரு­ளா­தார வசதி உள்­ள­வ­ராக இருந்தால் பல­தார மணத்­துக்கு அனு­மதி வழங்­கப்­பட வேண்டும் என்­கின்­றனர். இறுதி முடி­வினை முஸ்லிம் சமூகம் இன்னும் சில வாரங்­களில் தெரி­விப்­ப­தாக கூறி­யி­ருக்­கி­றது. முஸ்லிம் சமூ­கத்தின் விருப்­பப்­படி இச்­சட்ட மூலத்தை தயா­ரித்து பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன்.

முஸ்லிம் தனியார் சட்டம் அவர்களது மதத்தின் அடிப்படையிலான சட்டமாகும். எனவே மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களது கருத்துக்களையும் பெற்று உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கே எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.