பாராளுமன்றத்தில் ‘ஜனாதிபதி தேர்தல்’

0 137

றிப்தி அலி

வழக்­க­மாக ஜனா­தி­பதித் தேர்தல் வேறா­கவும் பாரா­ளு­மன்றத் தேர்தல் வேறா­கவும் நடப்­பது வழக்கம். இவ்­விரு தேர்­தல்­க­ளுக்­கு­மான வாக்­கெ­டுப்­புகள் நாட­ளா­விய ரீதியில் அனைத்துப் பகு­தி­க­ளிலும் இடம்­பெறும். ஆனால் இம்­மு­றைதான் முதல் தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்தல் ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இதற்­க­மைய, நேற்று நடந்த வாக்­கெ­டுப்பில் இலங்­கையின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட எட்­டா­வது ஜனா­தி­ப­தி­யாக ரணில் விக்­ர­ம­சிங்க தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு 134 வாக்­கு­களும், டளஸ் அழ­க­பெ­ரு­ம­விற்கு 82 வாக்­கு­களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்­டி­யிட்ட அநுர குமார திஸா­நா­யக்­க­விற்கு 3 வாக்­கு­களும் கிடைத்­தள்­ளன.

இலங்கை வர­லாற்றில் முதற் தட­வை­யாக நடை­பெற்ற இத்­தேர்­தலை முழு உல­கமும் அவ­தா­னித்துக் கொண்­டி­ருந்­தது.

முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாசா விடு­தலைப் புலி­க­ளினால் 1993 ஆம் ஆண்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக டி.பி. விஜ­ய­துங்க ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டார். குறித்த தேர்­தலில் ஒருவர் மாத்­திரம் போட்­டி­யிட்­ட­மை­யினால் வாக்­க­ளிப்­பின்றி அவர் தெரிவு செய்­யப்­பட்டார்.

ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ, நாட்டு மக்­களின் எதிர்ப்­புக்கு மத்­தியில், நாட்டை விட்டு வெளி­யே­றி­யி­ருந்தார். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஒருவர், நாடா­ளு­மன்ற வாக்­கெ­டுப்பின் ஊடாக தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது சந்­தர்ப்பம் இது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பத­வியில் இருந்த ஜனா­தி­பதி ஒருவர் நாட்டை விட்டு வெளி­யேறி, பதவி வில­கி­யதும் தற்­போது நடந்­த­துதான் முதல் முறை.

நாட்டில் போராட்­டங்கள் உக்­கி­ர­ம­டைந்­ததைத் தொடர்ந்து சிங்­கப்பூர் சென்ற கோட்­டா­பய ராஜ­பக்ஷ, கடந்த 14 ஆம் திகதி தனது இரா­ஜி­னாமாக் கடி­தத்தை, சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­த­ன­விற்கு அனுப்­பி­யி­ருந்தார்.

இந்த நிலையில், அர­சி­ய­ல­மைப்புச் சட்­டப்­படி, பதில் ஜனா­தி­ப­தி­யாக ரணில் விக்­ர­ம­சிங்க, கடந்த 15 ஆம் திததி, பிர­தம நீதி­ய­ரசர் முன்­னி­லையில் சத்­திய பிர­மாணம் செய்­து­கொண்டார்.

இதை­ய­டுத்து, புதிய ஜனா­தி­ப­தியை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான வாக்­கெ­டுப்பு நேற்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றது. இதில் பதில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான டளஸ் அழ­க­பெ­ரும மற்றும் அநுர குமார திஸா­நா­யக்க ஆகியோர் போட்­டி­யிட்­டனர். இந்தப் போட்­டியில் வென்று, புதிய ஜனா­தி­ப­தி­யாக ரணில் விக்­ர­ம­சிங்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஐக்­கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் சில உறுப்­பி­னர்கள் என முக்­கிய கட்­சிகள் டளஸ் அழ­க­பெ­ரு­ம­விற்கு ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தன.

ஆனால், ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் பெரும்­பான்மை உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் ரணில் விக்­ர­ம­சிங்க போட்­டி­யிட்டார்.

225 உறுப்­பி­னர்­களைக் கொண்ட பாரா­ளு­மன்­றத்தில் அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் செல்­வ­ராஜா கஜேந்­திரன் ஆகிய இரு­வரும் இத்­தேர்­தலில் பங்­கேற்­க­வில்லை. இதே­வேளை செலுத்­தப்­பட்ட வாக்­கு­களில் 4 வாக்­குகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமன்­பி­ரிய ஹேரத் மற்றும் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டீ. வீர­சிங்க ஆகியோர் வைத்­தி­ய­சா­லையில் இருந்து இந்த வாக்­க­ளிப்­பிற்­காக அழைத்து வரப்­பட்­டனர்.

கடும் நிபந்­த­னை­க­ளு­ட­னேயே இந்த வாக்­கெ­டுப்பு இடம்­பெற்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் யாரும் வாக்­க­ளிப்பு பிர­தே­சத்தில் கைய­டக்க தொலை­பே­சி­களை கொண்டு செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. இதனை மீறி கைய­டக்க தொலை­பே­சி­யினை கொண்டு வந்த திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்­றத்தில் உறுப்­பினர் கபில அது­கோ­ர­ளவின் கைய­டக்க தொலை­பேசி பறிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, ஏ.எல்.எம். அதா­உல்லா, சி.வீ. விக்­னேஸ்­வ­ரன், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அலி சப்ரி, ஹாபிஸ் நசீர் அஹமட், முஷாரப் முது­நபீன், அலி சப்ரி றஹீம் ஆகியோர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.

ஐக்­கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், விமல் வீர­வன்ச தலை­மை­யி­லான சுயா­தீன குழு, தமிழ் முற்­போக்கு முன்­னணி போன்ற கட்­சிகள் டலஸ் அழ­க­பெ­ரு­ம­விற்கு வாக்­க­ளிப்­ப­தாக முன்னர் அறி­வித்­தி­ருந்­தன.

இதற்­க­மைய சுமார் 100க்கு மேற்­பட்ட வாக்­குகள் டளஸ் அழ­க­பெ­ரு­ம­விற்கு ஆத­ர­வாக கிடைத்­தி­ருக்க வேண்டும். எனினும் 82 வாக்­குகள் மாத்­திரம் கிடைக்கப் பெற்­றன.
இத­னி­டையே ரணில் விக்­க­ர­ம­சிங்­க­வினை உட­ன­டி­யாக பதவி விலக வேண்டும் என காலி முகத்­திடல் போராட்­டக்­கா­ரர்கள் கோரிக்கை முன்­வைத்­துள்­ளனர். அவர் இரா­ஜி­னாமா செய்யும் வரை எமது போராட்டம் தொடரும். பாரிய மக்கள் ஆத­ர­வுடன் வந்த கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினை வீட்­டுக்கு அனுப்­பிய எமக்கு ரணில் விக்­ர­ம­சிங்­க­வினை வீட்­டுக்கு அனுப்­பு­வது பெரிய விட­ய­மல்ல என்றும் அவர்கள் நேற்று ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தனர்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு நாடா­ளு­மன்­றத்தில் உள்ள ஒரே எம்.பி. அவர் மட்­டுமே. ஒரே எம்.பி.யாக உள்­ளவர் தற்­போது நாடா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆத­ரவு பெற்று தற்­போது ஜனா­தி­பதி ஆகி­யி­ருக்­கிறார்.

ரணில் ஜனா­தி­ப­தி­யா­ன­மையை அடுத்து வெற்­றி­ட­மான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்கு, அவரின் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்து ஒருவர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ளார்.
நேற்­றைய தினம் பாரா­ளு­மன்றில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, பொரு­ளா­தார ரீதியில் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு தமக்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­மாறு சபை­யி­லுள்ள அனை­வ­ரி­டமும் கோரிக்கை விடுத்தார். தமிழ் கட்­சி­க­ளையும் தம்­முடன் கை­கோர்த்து, நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­மாறும் அவர் கோரிக்கை விடுத்தார். அத்­துடன், தனது பதவிப் பிர­மாண நிகழ்வை, நாடா­ளு­மன்­றத்தில் நடத்­து­வ­தற்கு தனக்கு அனு­ம­தியை வழங்­கு­மாறு, சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­த­ன­விடம், ரணில் விக்­ர­ம­சிங்க கோரிக்கை விடுத்தார்.

இலங்கை அர­சி­யலில் தவிர்க்க முடி­யாத ஆளு­மை­யாக பரி­மாணம் பெற்­றுள்ள இந்த ரணில் விக்­ர­ம­சிங்க யார்?

எஸ்மண்ட் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் நளினி விக்­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கு 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி ரணில் விக்­ர­ம­சிங்க மக­னாக பிறந்தார்.
கொழும்பு ரோயல் கல்­லூ­ரியில் கல்­வியை தொடர்ந்த ரணில் விக்­ர­ம­சிங்க, கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது உயர்­கல்­வியை தொடர்ந்தார்.

தொழில் ரீதி­யாக வழக்­கு­ரை­ஞ­ராக செயற்­பட்ட அவர், பின்னர் அர­சி­யலில் நுழைந்தார்.
கம்­பஹா மாவட்­டத்­தி­லி­ருந்து ரணில் விக்­ர­ம­சிங்க தனது அர­சியல் வாழ்க்­கையை தொடங்­கினார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் களனி தொகுதி பிர­தான அமைப்­பா­ள­ராக 1970ம் ஆண்டு ரணில் விக்­ர­ம­சிங்க நிய­மிக்­கப்­பட்டு, பின்னர் பிய­கம தொகு­தியின் பிர­தான அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

பிய­கம தொகு­தி­யி­லி­ருந்து நாடா­ளு­மன்ற பிர­வே­சத்தை பெற்ற ரணில் விக்­ர­ம­சிங்க, ஜே.ஆர்.ஜெய­வர்­தன தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் இளம் அமைச்­ச­ராக பதவி வகித்தார்.

இளையோர் விவ­காரம் மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சர் பத­வியே, ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு கிடைத்த முத­லா­வது அமைச்சு பொறுப்­பாகும்.
இவ்­வாறு தனது அர­சியல் வாழ்க்­கையை தொடர்ந்த ரணில் விக்­ர­ம­சிங்க, ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவிர்க்க முடி­யாத ஒரு தலை­மைத்­து­வத்தை நோக்கி நகரத் தொடங்­கினார்.

இந்த நிலையில், இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாச, 1993ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி, தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி உயி­ரி­ழந்தார்.

இதை­ய­டுத்து, இடைக்­கால ஜனா­தி­ப­தி­யாக டி.பி.விஜே­துங்க நிய­மிக்­கப்­பட்ட நிலையில், அந்த அர­சாங்­கத்தின் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­மிக்­கப்­பட்டார். ரணில் விக்­ர­ம­சிங்க 1993ம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2001ஆம் ஆண்டு இரண்­டா­வது தட­வை­யா­கவும் நிய­மிக்­கப்­பட்டார்.

2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் தேதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில், ரணில் – மைத்­திரி கூட்­டணி வெற்­றி­யீட்­டி­யதை அடுத்து, மூன்­றா­வது தட­வை­யா­கவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

அத்­துடன், 2015ஆம் ஆண்டு நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு, அப்­போது நடை­பெற்ற நாடா­ளு­மன்றத் தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, நான்காவது தடவையாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

நல்­லாட்சி காலத்தில் ஏற்­பட்ட அர­சியல் குழுப்­ப­கர நிலை­மை­யினால், அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி, ரணில் விக்­ர­ம­சிங்­கவை அந்த பத­வி­யி­லி­ருந்து நீக்கி, மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக நிய­மித்தார்.
எனினும், உயர்­நீ­தி­மன்ற உத்­த­ர­விற்கு அமைய, ரணில் விக்­ர­ம­சிங்க ஐந்­தா­வது தட­வை­யா­கவும் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

2019ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் கோட்­டா­பய ராஜ­பக்ஷ வெற்­றி­யீட்­டி­யதை அடுத்து, பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து வில­கிய ரணில் விக்­ர­ம­சிங்க, இந்த ஆட்­சியின் கீழ் நடத்­தப்­பட்ட நாடா­ளு­மன்ற தேர்­தலில் பாரிய வீழ்ச்­சி­யுடன் தோல்­வியை சந்­தித்தார்.
எனினும், தேசிய பட்­டியல் ஊடாக ஒரு ஆச­னத்தை பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி, மீண்டும் நாடா­ளு­மன்ற பிர­வே­சத்தை ரணில் விக்­ர­ம­சிங்க பெற்றார்.

இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­கடி தீவி­ர­ம­டைந்து வந்த பின்­ன­ணியில், ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆளுமை மற்றும் சர்­வ­தேச விவ­கார ஆளுமை ஆகி­ய­வற்­றினால் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் திறன் அவ­ருக்கு உள்­ள­தாக பெரும்­பா­லானோர் கூறி­யி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே, ரணில் விக்­கி­ர­ம­சிங்க 6ஆவது தட­வை­யா­கவும் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்டார். பின்னர் சில வாரங்­களில் பதில் ஜனா­தி­ப­தி­யா­கவும் அதனைத் தொடர்ந்து இலங்­கையின் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட 8 ஆவது ஜனா­தி­ப­தி­யா­கவும் ரணில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.–Vidivelli

Leave A Reply

Your email address will not be published.