ஊக்குவிக்கப்படவேண்டிய ‘வீட்டிலிருந்து ஒரு பார்சல்’ உணவு விநியோக திட்டங்கள்

0 142

நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை கார­ண­மாக மக்கள் பாரிய இன்­னல்­களை அனு­ப­வித்து வரு­வதை நாம் அறிவோம். பொருட்­களின் விலை அதி­க­ரிப்பு, எரி­பொருள் பற்­றாக்­குறை, போக்­கு­வ­ரத்து வச­திகள் இன்மை, தொழி­லின்மை போன்ற பல்­வேறு கார­ணங்­களால் மக்கள் அன்­றாடம் ஒரு வேளை உணவு உண்­ப­தற்குக் கூட கஷ்­டங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் இவ்­வாறு உண்­ப­தற்கு வழி­யின்றித் தவிக்கும் மக்­க­ளுக்கு கை கொடுக்கும் வகையில் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் சமூக சமை­ய­ல­றைகள், வீட்­டி­லி­ருந்து ஒரு பார்சல், உண்போம் உண­வ­ளிப்போம், பசித்­த­வ­ருக்கு உண­வ­ளிப்போம், பட்­டி­னி­யற்ற நக­ரத்தை நோக்கி…. எனும் தலைப்­பு­களில் பல திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

சமூக சேவை அமைப்­புகள், இளைஞர், யுவ­திகள் என பலரும் ஒன்­றி­ணைந்து இவ்­வா­றான திட்­டங்­களை கடந்த சில வாரங்­க­ளாக நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.
‘குர­லற்­ற­வர்­களின் குரல் பவுண்­டேசன்’ அமைப்பின் ஏற்­பாட்டில் நாட்டின் ஆறு இடங்­களில் ‘சமூக சமை­ய­ல­றைகள்’ ( Community Kitchens) நிறு­வப்­பட்டு தினமும் நூற்றுக் கணக்­கான மக்­க­ளுக்கு சமைத்த உண­வுகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. ராஜ­கி­ரிய, கட­வத்த, நீர்­கொ­ழும்பு, மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாணம் மற்றும் நெடுந்­தீவு ஆகிய பகு­திகள் இந்த சமை­ய­ல­றைகள் இயங்கி வரு­வ­தாக அமைப்பின் தலைவர் போதகர் மோசஸ் ஆகாஷ் குறிப்­பி­டு­கிறார். தினமும் சரா­ச­ரி­யாக 700 பேருக்கு இவ்­வாறு உண­வ­ளிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பி­டு­கிறார்.

அதே­போன்று கொழும்பில் சர்­வோ­தய மற்றும் Singularity Sri Lanka போன்ற அமைப்­பு­களும் கிராண்ட்பாஸ், பஞ்­சி­கா­வத்தை போன்ற பிர­தே­சங்­களில் இவ்­வா­றான திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றன.

மறு­புறும் கிழக்கு மாகா­ணத்தின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் இவ்­வா­றான உண­வ­ளிக்கும் திட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்டு வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.
அம்­பாறை மாவட்­டத்தின் அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தில் கடந்த 11 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட ‘வீட்­டி­லி­ருந்து ஒரு பார்சல்’ எனும் திட்டம் தற்­போது அட்­டா­ளைச்­சேனை, ஒலுவில், பால­முனை, பொத்­துவில் போன்ற பகு­தி­க­ளுக்கும் விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது­வரை சுமார் ஏழா­யி­ரத்­துக்கும் அதி­க­மான பார்­சல்கள் இப் பகு­தி­களில் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பிர­தே­சத்­தி­லுள்ள பொது அமைப்­புகள் பல ஒன்­றி­ணைந்து இத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றன. இத்­திட்­டத்தில் பங்­கேற்­றுள்ள Iconic Youths அமைப்பின் தலைவர் தில்ஷான் முகம்மட் கருத்து வெளி­யி­டு­கையில், “தினமும் சரா­ச­ரி­யாக 300 பார்­சல்­களை இவ்­வாறு விநி­யோ­கிக்­கிறோம். மக்கள் வீடு­களில் தாம் சமைப்­ப­தி­லி­ருந்து ஒரு பார்­சலை எம்­மிடம் தரு­கி­றார்கள். சிலர் பண­மா­கவும் வழங்­கு­கி­றார்கள். இவற்றைக் கொண்டு நாம் தேவை­யு­டை­ய­வர்­களை இனங்­கண்டு அவர்­க­ளது வீடு­க­ளுக்கே கொண்டு சென்று சாப்­பாட்டு பார்­சல்­களைக் கைய­ளிக்­கிறோம். துர­திஷ்­ட­வ­ச­மாக, எரி­பொருள் நெருக்­கடி கார­ண­மாக தூரப் பிர­தே­சங்­க­ளுக்குச் சென்று தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்கு வழங்­க­மு­டி­யா­துள்­ளது. பள்­ளி­வாசல் மஹல்­லாக்கள் மற்றும் சமுர்த்தி பய­னா­ளிகள் பட்­டியல் என்­ப­வற்­றி­லி­ருந்து தேவை­யு­டை­ய­வர்­களை இனங்­காண்­கிறோம். இன்று உங்கள் வீட்­டுக்கு சாப்­பாடு கொண்டு தருவோம் என முன்­கூட்­டியே அவர்­க­ளுக்கு அறி­விக்­கிறோம். குறிப்­பாக தொழி­லற்­ற­வர்கள், பெண்கள் தலை­மை­தாங்கும் குடும்­பங்கள் போன்­ற­வர்­க­ளுக்கு இதில் முன்­னு­ரி­மை­ய­ளிக்­கிறோம். இத்­திட்­டத்­திற்கு மக்கள் தரும் ஆத­ரவு மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது” என்றார்.

இதே­போன்­ற­தொரு திட்டம் சம்­மாந்­துறை பிர­தே­சத்­திலும் கடந்த சனிக்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. “பசித்­தோ­ருக்கு உண­வ­ளிக்க கைகோர்ப்போம்” எனும் தலைப்­பி­லான இந்த திட்­டத்தை சம்­மாந்­துறை பிர­தே­சத்­தி­லுள்ள சமூக சேவைகள் அமைப்­பு­களும், சமூக ஆர்­வ­லர்­களும் இணைந்து ஏற்­பாடு முன்­னெ­டுக்­கின்­றனர். இதன் ஆரம்ப நிகழ்வில் அர­சியல் பிர­மு­கர்கள், உல­மாக்கள், அர­சாங்க அதி­கா­ரிகள் உட்­பட பலரும் கலந்து கொண்­டனர்.

இத­னி­டையே மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் காத்­தான்­குடி பிர­தே­சத்­திலும் ‘உண்போம் உண­வ­ளிப்போம்’ எனும் தலைப்­பி­லான ஒரு வேலைத்­திட்டம் நேற்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. YESDO இளைஞர் அமைப்பின் ஏற்­பாட்டில், காத்­தான்­குடி பிர­தான வீதி குட்வின் சந்­தியில் உணவு சேக­ரிப்பு நிலையம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இத் திட்டம் தொடர்பில் இவ்­வ­மைப்பின் செய­லாளர் அஸாஹிம் கருத்து வெளி­யி­டு­கையில், முதல் நாளில் நாம் 250 பார்­சல்­களை சேக­ரித்து விநி­யோ­கித்­துள்ளோம். சமைத்து பார்­சல்­க­ளாக எம்­மிடம் ஒப்­ப­டைக்­கலாம்.

இன்றேல் ஒரு பார்­ச­லுக்கு 300 ரூபா வீதம் பணத்தை எம்­மிடம் ஒப்­ப­டைக்­கலாம். நாம் கிராம சேவை­யா­ளர்கள் மூல­மாக தேவை­யு­டை­ய­வர்­களை இனங்­கண்டு அவர்­க­ளுக்கு இந்த உணவுப் பார்­சல்­களை விநி­யோ­கிக்­கிறோம். வாரத்தில் இரண்டு நாட்­க­ளுக்கு இந்த திட்­டத்தை முன்­னெ­டுக்­க­வுள்ளோம்” என்றார். புதிய காத்­தான்­குடி பிர­தே­சத்­தி­லுள்ள அல் அக்ஸா பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினால் ‘உணவு வங்கி’ திட்டம் ஒன்றும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வாசல் பேஷ் இமா­மிடம் தமது உத­வி­களை மக்கள் கைய­ளிக்க முடியும் என்றும் தேவை­யு­டை­ய­வர்கள் பள்­ளி­வா­சலை அணுகி உத­வி­களைப் பெற்றுக் கொள்­ளலாம் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை உணவு விநி­யோகத் திட்டம் ஒன்றை பேரு­வ­ளை­யி­லுள்ள மரு­தானை சரிட்டி அமைப்பும் ஆரம்­பித்­துள்­ளது. மரு­தானை மற்றும் சீனங்­கோட்டை ஆகிய பகு­தி­களில் உணவுப் பார்­சல்­களை சேக­ரிக்கும் நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இத்­திட்டம் கடந்த ஜுன் 16 இல் ஆரம்­பிக்­கப்­பட்­டது முதல் நேற்று வரை 3000 இற்கும் மேற்­பட்ட பார்­சல்கள் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தா­கவும் அமைப்பின் செய­லாளர் ரூமி ஹாரிஸ் தெரி­வித்தார்.

பேரு­வளை பிர­தே­சத்தில் மரு­தா­னையில் மாத்­தி­ர­மன்றி வத்­தி­ரா­ஜ­புர, மஹ­கொட, மாளி­கா­ஹேன, கொர­கா­துவ உட்­பட மேலும் பல கிரா­மங்­க­ளுக்கும் உணவுப் பார்­சல்கள் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக சிங்­கள மக்கள் வாழும் மீனவக் கிரா­மங்­க­ளான பண்­டா­ர­வத்தை, பொன்­ன­ல­கொட ஆகிய பிர­தே­சங்­களும் இத்­திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.

“ தினமும் ஒரு சகோ­தரர் 50 பார்­சல்­களை எம்­மிடம் ஒப்­ப­டைக்­கிறார். ஏனைய மக்கள் தமது வீடு­களில் சமைத்து 50 பார்­சல்கள் வரை தரு­கி­றார்கள். சிலர் எமக்கு வழங்கும் பணத்தில் சுமார் 100 முதல் 120 பார்­சல்கள் வரை கொள்­வ­னவு செய்­கிறோம். தேவை­யுள்­ள­வர்­களை நேரில் சந்­தித்து அவர்­க­ளது உண்­மை­யான குடும்ப நிலை­வ­ரத்தை அறிந்த பின்­னரே உத­வு­கிறோம்” என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அக்­கு­றணை நக­ரிலும் Akurana Food Campaign Team இன் ஏற்­பாட்டில் ‘பட்­டி­னி­யற்ற நகரை நோக்கி’ எனும் தலைப்­பி­லான உணவு விநி­யோக வேலைத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. சுமார் ஆறு இடங்­களில் உணவுப் பொதிகள் சேக­ரிக்­கப்­பட்டு விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு வார காலத்தில் சுமார் 1200க்கும் அதி­க­மான உணவுப் பொதிகள் இவ்­வாறு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான வேலைத்­திட்­டங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள் இவற்றை ஒருங்கிணைக்க முடியும். பிரதேச, இன, மத வேறுபாடின்றி மக்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு மக்களின் தேவையறிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் இவ் வேலைத்திட்டங்கள் பாராட்டுக்குரியவை. இதில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களுக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும். எம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். மேற்படி வேலைத்திட்டங்களுக்கு நீங்களும் ஆதரவளிக்க விரும்பினால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

அக்கரைப்பற்று : 075331999
அட்டாளைச்சேனை : 0767620601
அக்குறணை : 0770202016
பேருவளை : 0767810699
காத்தான்குடி : 0776521555
சம்மாந்துறை : 0779930640

Leave A Reply

Your email address will not be published.