உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: 25 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை Pre Trial Conference ஆகஸ்ட் 4 இல்

பிணை கோரிக்கையை 2 வாரங்களுக்கு முன் சமர்ப்பிக்க கோரிக்கை

0 58

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் திணைக்­களம் தாக்கல் செய்­துள்ள வழக்கை, ‘வழக்கு விசா­ர­ணைக்கு முன்­ன­ரான ஒன்­று­கூ­ட­லுக்கு’ (Pre trial conference) திகதி குறித்து கொழும்பு சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் எதிர்­வரும் ஆகஸ்ட் 4 ஆம் திக­திக்கு அதனை ஒத்தி வைத்­தது.

அன்­றைய தினம் ‘வழக்கு விசா­ர­ணைக்கு முன்­ன­ரான ஒன்­று­கூ­ட­லுக்கு ‘ பிர­தி­வா­தி­களை கண்­டிப்­பாக மன்றில் ஆஜர் செய்­யு­மாறும்,  விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த சி.ஐ.டி.யின் பணிப்­பாளர் அல்­லது அவ­ரது பிர­தி­நிதி, சி.ரி.ஐ.டி. எனும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பணிப்­பாளர் அல்­லது அவ­ரது பிர­தி­நிதி, சி.சி.டி. எனும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் அல்­லது அவ­ரது பிர­தி­நிதி ஒரு­வ­ரையும் மன்றில் ஆஜ­ராக சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் அறி­வித்தல் அனுப்­பி­யது.

பிர­தான பிர­தி­வா­தி­யாக அரச தரப்பால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் அபூ செய்த் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்­லது நெளபர் மெள­லவி உட்­பட 25 பேருக்கு எதி­ரா­கவே இவ்­வாறு வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள நிலையில் கடந்த திங்­க­ளன்று அவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது.

ஏற்­க­னவே மே 12 ஆம் திகதி அவ்­வ­ழக்கு, விசா­ர­ணைக்கு வர இருந்த நிலையில் அன்­றைய தினம் நாடு முழுதும் ஊர­டங்கு நிலை அமுல் செய்­யப்­பட்ட நிலையில் இவ்­வாறு வழக்கு திங்­க­ளன்று விசா­ர­ணைக்கு வந்­தது.

வழக்கு விசா­ரணை ஆரம்பம் :
இந்த குண்டுத் தாக்­குதல் தொடர்­பி­லான விவ­கா­ரத்தை விசா­ரிக்­க­வென நிய­மிக்­கப்­பட்­டுள்ள, கொழும்பு மேல் நீதி­மன்றின் தலைமை நீதி­பதி தமித் தொட­வத்த தலை­மையில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான அமல் ரண­ராஜ மற்றும் நவ­ரத்ன மார­சிங்க ஆகியோர் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்ற குழாம் முன்­னி­லை­யி­லேயே இந்த வழக்கு இவ்­வாறு விசா­ர­ணைக்கு வந்­தது.

பாது­காப்பு பலப்­ப­டுத்தல்:
கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசா­ரணை அறையில் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்த நிலையில், நீதி­மன்றின் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.
குறிப்­பாக வழக்கு விசா­ர­ணைக்கு வந்த கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசா­ரணை அறைக்குள் மூன்றாம் தரப்­பினர் உள் நுழைய அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை. நீதி­மன்ற செய்­தி­யா­ளர்கள் உள்­ளிட்ட அனை­வ­ருமே சோதனை செய்­யப்­பட்ட பின்­னரே நீதி­மன்­றுக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லையில், இந்த விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 25 பிர­தி­வா­தி­களும் நேற்று நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், மெகஸின், அங்­கு­ண­கொல பெலஸ்ஸ, மஹர, நீர்­கொ­ழும்பு உள்­ளிட்ட பல சிறைச்­சா­லை­களிலிருந்து அவர்கள் அழைத்து வரப்­பட்­டனர்.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன சில்வா தலை­மை­யி­லான குழு­வினர் மன்றில் ஆஜ­ரா­கினர்.
பிர­தி­வா­தி­க­ளுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், ரிஸ்வான் ஹுசைன், சச்­சினி விக்­ர­ம­சிங்­க உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­கினர்.

இந் நிலையில் வழக்குத் தொடுநர் சட்ட மா அதி­ப­ருக்­காக மன்றில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா, வழக்கு விசா­ர­ணைக்கு முன்­ன­ரான ஒன்று கூட­லுக்கு திகதி ஒன்­றினை குறிக்­கு­மாறு கோரினார். அத்­துடன் வழக்கில் சில விட­யங்­களை மையப்­ப­டுத்­திய பட்­டி­ய­லொன்­றினை சட்ட மா அதிபர் தரப்பு முன் வைக்க உள்­ள­தா­கவும் அதனை பிர­தி­வா­திகள் தரப்பு ஒப்­புக்­கொண்டால் அவ்­வந்த விட­யங்கள் குறித்த சாட்சி விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­காது ஏனைய விட­யங்கள் குறித்து சாட்­சி­களை அழைக்க முடியும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில், மன்றில் நெளபர் மெள­லவி உள்­ளிட்ட இரு பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஆஜ­ரா­கிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், பிர­தி­வா­திகள் சார்பில் பிணைக் கோரிக்­கையை மன்றில் முன் வைக்க எதிர்­பார்ப்­ப­தாக குறிப்­பிட்டார்.

இந்­நி­லையில் பிர­தி­வா­திகள் தொடர்பில் முன் வைக்­கப்­படும் பிணைக் கோரிக்­கையின் எழுத்து மூல சமர்ப்­ப­ணங்­களை மன்றில் முன் வைக்­கவும், அவற்றை அடுத்த தவ­ணைக்கு இரு வாரங்­க­ளுக்கு முன்­பா­கவே சமர்ப்­பிக்­கவும் பிர­தி­வாதி தரப்­புக்கு நீதி­மன்றம் அறி­வு­றுத்­தி­யது. அதன்­ப­டியே வழக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் 4ஆம் திக­திக்கு நீதி­ப­திகள் ஒத்தி வைத்­தனர்.

வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள பிர­தி­வா­திகள்:
1. அபூ செய்த் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்­லது நெளபர் மெள­லவி.
2. அபூ ஹதீக் எனப்­படும் கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் பெயரால் அறி­யப்­படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை.
3. அபூ சிலா எனப்­படும் ஹயாத்து மொஹம்­மது மில்ஹான்.
4. அபூ உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ்.
5. அபூ பலா எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாஹித் அப்துல் ஹக்.
6.அபூ தாரிக் எனப்­படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்.
7. அபூ மிசான் எனப்­படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்.
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்­தெளஸ்.
9. அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெள­லவி.
10. ஷாபி மெள­லவி அல்­லது அபூ புர்கான் எனப்­படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி.
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்.
12.அபூ தவூத் எனப்­படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்.
13. அபூ மொஹம்மட் எனப்­படும் மொஹம்மட் இப்­திகார் மொஹம்மட் இன்சாப்.
14. ரஷீத் மொஹம்மட் இப்­றாஹீம்.
15. அபூ ஹினா எனப்­படும் மொஹம்மட் ஹனீபா செய்னுல் ஆப்தீன்.
16.அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்.
17. யாசின் பாவா அப்துல் ரவூப்.
18. ராசிக் ராசா ஹுசைன்.
19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்.
20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்.
21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்.
22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி.
23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்.
24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி.
25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.