அரபு நாடுகள் உதவத் தயங்குவது ஏன்?

0 539

இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­கடி நாளுக்கு நாள் மோச­ம­டைந்து செல்­கின்ற நிலையில் அர­சாங்கம் சர்­வ­தே­சத்தின் உத­வியை நாடி நிற்­கி­றது. சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் உத­வியைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் துரி­த­மாக இடம்­பெற்று வரு­கின்­றன. அதன் பிர­தி­நி­திகள் தற்­போது இலங்­கைக்கு வருகை தந்து பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்­தியா குறிப்­பி­டத்­தக்க உத­வியை வழங்­கி­யுள்ள நிலையில், இன்­றைய தினமும் அதன் உயர்­மட்டப் பிர­தி­நி­திகள் இலங்­கைக்கு வருகை தந்து எதிர்­கால கட­னு­த­விகள் குறித்து ஆரா­ய­வுள்­ளனர். சீனாவும் தற்­போது உத­வி­களை வழங்­க­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

இத­னி­டையே கடந்த சில மாதங்­க­ளாக மத்­திய கிழக்கு நாடு­களின் உத­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான பகீ­ரதப் பிர­யத்­த­னங்­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­வதை நாம் அறிவோம். முன்­னைய அர­சாங்­கத்தின் பல சிரேஸ்ட அமைச்­சர்கள் பல்­வேறு அரபு நாடு­க­ளுக்கும் விஜயம் செய்து எரி­பொருள் இறக்­கு­ம­திக்­காக உத­வி­களைக் கோரி­யி­ருந்­தனர். எனினும் எந்­த­வொரு நாடும் குறிப்­பி­டும்­ப­டி­யான உத­வி­களை வழங்க முன்­வ­ர­வில்லை.

ஜனா­தி­பதி அண்­மையில் அரபு நாடு­களின் தூது­வர்­களை அழைத்து விருந்­து­ப­சா­ர­ம­ளித்தார். இதன்­போதும் இலங்­கைக்கு சாத்­தி­ய­மான வழி­களில் உத­வி­களைப் பெற்றுக் கொள்­வது குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ளது. எனினும் இது­வரை இந்­நா­டுகள் சாத­க­மாக பதி­ல­ளிக்­க­வில்லை. மறு­புறம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, மத்­திய கிழக்கு உள்­ளிட்ட வெளி­நாட்டு உத­வி­களை ஒருங்­கி­ணைக்க மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய சபா­நா­ய­க­ரு­மான அஹமட் நஷீடை இணைப்­பா­ள­ராக நிய­மித்­தி­ருந்தார். எனினும் அவ­ரது நிய­ம­னத்தின் மூலமும் எதுவும் நடந்­த­தாக தெரி­ய­வில்லை.

துர­திஸ்­ட­வ­ச­மாக மேற்­படி முயற்­சிகள் எதுவும் இது­வரை உரிய பலனைக் கொடுத்­த­தாக தெரி­ய­வில்லை. வழக்­க­மாக இலங்­கைக்கு பல மில்­லியன் டொலர்­களை அள்­ளி­யி­றைக்கும் மத்­திய கிழக்கு நாடுகள் தற்­போது இக்­கட்­டான கட்­டத்­திலும் கூட உத­வு­வ­தற்கு தயங்­கு­வது ஏன் என்ற கேள்­விக்கு தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் முதலில் விடை காணத் தலைப்­பட வேண்டும்.

57 அரபு நாடுகள் அங்கம் வகிக்கும் ஓ.ஐ.சி எனப்­படும் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான கவுன்சில் இலங்கை அர­சாங்­கத்தின் கட்­டாய தகனக் கொள்கை தொடர்பில் பலத்த கண்­ட­னங்­களை வெளி­யிட்­டி­ருந்­த­துடன் இவ்­வி­ட­யத்தை ஐக்­கிய நாடுகள் சபை­யிலும் பிர­தான பேசு­பொ­ரு­ளாக முன்­வைத்­தி­ருந்­தது. குறிப்­பாக இலங்­கையில் பிறந்து 20 நாட்­க­ளே­யான சிசுவின் சடலம் கூட எரிக்­கப்­பட்­டமை உல­க­ளா­விய முஸ்லிம் உம்­மாவை கடும் கோபத்­திலும் கவ­லை­யிலும் ஆழ்த்­தி­யி­ருந்­தது. இந்த அர­சாங்கம் அன்று கடைப்­பி­டித்த இன­வாத ரீதி­யான கடும்­போக்கு கொள்­கையே இன்று அரபு நாடு­களை விரண்­டோடச் செய்­துள்­ளது என்­பதில் எந்­த­வித சந்­தே­க­மு­மில்லை.

சுதந்­தி­ரத்­துக்குப் பின்­ன­ரான காலத்தில் இலங்­கையின் பாரிய அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்­காக கோடிக் கணக்­கான டொலர்­களை சவூதி, கட்டார், ஐக்­கிய அரபு இராச்­சியம், குவைத் உள்­ளிட்ட பல நாடுகள் வாரி­யி­றைத்­துள்­ளன. மேற்­கு­லக நாடு­களின் ஆக்­கி­ர­மிப்­பினால் இன்று சிதைக்­கப்­பட்­டுள்ள ஈராக், லிபியா போன்ற நாடுகள் கூட ஒரு கட்­டத்தில் இலங்­கைக்கு தாரா­ள­மாக உத­வி­களை வழங்­கி­யுள்­ளன.

இலங்­கைக்கும் அரபு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான வர­லாற்று ரீதி­யான தொடர்­புகள் கார­ண­மாக மேற்­படி நாடுகள் எப்­போ­துமே பிர­தி­பலன் பாராது உத­வி­களை வழங்­கியே வந்­துள்­ளன. எனினும் இப்­போது அவர்கள் உதவத் தயங்­கு­வது இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் தொடர்பில் சர்­வ­தேச அரங்கில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்ள மோச­மான பதி­வு­க­ளி­னா­லேயே என்­பது தெளி­வா­ன­தாகும். இதனை மாற்­றி­ய­மைக்க ஆட்­சி­யா­ளர்கள் முன்­வர வேண்டும்.

யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் ஏரா­ள­மான அரபு நாட்டு செல்­வந்­தர்கள் இலங்­கையில் முத­லீ­டு­களை மேற்­கொள்ள முன்­வந்­தி­ருந்­தனர். எனினும் அரபு நாட்­ட­வர்­களை முத­லீடு செய்ய அனு­ம­தித்தால் இலங்­கையை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மித்­து­வி­டு­வார்கள் என்ற இன­வாதப் புரளி கிளப்­பப்­பட்­டமை, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அளுத்­கம முதல் மினு­வாங்­கொடை வரை வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்­டமை கார­ண­மாக அவ்­வா­றான முத­லீட்­டா­ளர்கள் கூட இலங்­கை­யி­லி­ருந்து வெளி­யேற வேண்­டிய துர­திஸ்­ட­நிலை தோற்றம் பெற்­றது.

எவ்­வா­றி­ருப்­பினும் இன்று இலங்கை எதிர்­கொண்­டுள்ள அந்­நியச் செலா­வணி பற்­றாக்­குறை மற்றும் எரி­பொருள் நெருக்­கடி என்­பன வர­லாற்றில் முன்­னெப்­போதும் கண்­டி­ராத ஒன்­றாகும். அந்த வகையில் இலங்­கையை இந்தப் பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­ப­தற்­கான கடப்­பாடு இலங்­கை­யுடன் நட்­பு­றவைக் கொண்­டுள்ள சகல நாடு­க­ளுக்கும் உரி­ய­தாகும். இதில் அரபு நாடு­களும் விதி­வி­லக்­கல்ல. அந்த வகையில் இலங்கைக்கு நிபந்தனைகளுடன் கூடிய உதவிகளை வழங்குவதற்கு அரபு நாடுகள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.