நேபாள முஸ்லிம்களின் வாழ்வியல்!

0 442

காத்மண்டுவிலிருந்து றிப்தி அலி

தெற்­கா­சிய நாடு­களில் ஒன்­றான நேபா­ளத்தில் சுமார் இரண்டு மில்­லியன் முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். ஆரம்ப காலத்தில் காஷ்­மீ­ரி­லி­ருந்தே நேபா­ளத்­திற்கு முஸ்­லிம்கள் வந்­த­தாக அந்­நாட்டு வர­லா­றுகள் கூறு­கின்­றன.

பின்னர் இந்­தியா, பாகிஸ்தான் உள்­ளிட்ட பல நாடு­க­ளி­லி­ருந்து முஸ்­லிம்கள் இங்கு வந்து குடி­யே­றி­யுள்­ளனர். சுமார் 500 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட வர­லாற்­றினைக் கொண்­டுள்ள நேபாள முஸ்­லிம்கள், அந்­நாட்டு சனத்­தொ­கையில் ஐந்து சத­வீ­த­மாகக் காணப்­ப­டு­கின்­றனர்.

நேபா­ளத்­தி­லுள்ள ஏழு மாகா­ணங்­க­ளிலும் அதன் கீழுள்ள 77 மாவட்­டங்­க­ளிலும் முஸ்­லிம்கள் வாழ்ந்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நேபா­ளத்தின் தென் பகு­தி­யி­லேயே அதிக முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். இவர்கள் – நேபாளி, ஹிந்தி, உருது, நேவாரி, போஜ்­புரி போன்ற பல மொழி­களைப் பேசு­கின்­றனர்.
நேபா­ளத்தில் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­னத்­தர்களாக வாழ்ந்­தாலும் எந்­த­வித பிரச்­சி­னை­க­ளு­மின்­றியே வாழ்­வ­தாக அங்­குள்ள முஸ்­லிம்­களை சந்­தித்த போது தெரி­வித்­தனர்.

விரும்­பிய மதத்­தினைப் பின்­பற்­று­வ­தற்­கான சுதந்­திரம் காணப்­ப­டு­கின்­றது எனவும் அவர்கள் குறிப்­பிட்­டனர். இலங்­கை­யினைப் போன்று நேபாள முஸ்­லிம்­களும் தெஹீத், தப்லீக், சுன்னத் வல் ஜமாஅத் போன்ற பல கொள்­கை­களை பின்­பற்­று­கின்­றனர்.
இதனால், நேபா­ளத்தின் தலை­ந­க­ரான காத்­மண்­டுவில் உள்ள இரண்டு பள்­ளி­வா­சல்­க­ளிலும் வெவ்­வேறு கொள்­கைகள் பின்­பற்­றப்­ப­டு­வ­தனை அவ­தா­னிக்க முடிந்­தது. இதில் ஒரு பள்­ளி­வா­சலை ‘காஷ்­மீ­ரி’­பள்­ளி­வாசல் என்றும் மற்­றை­யதை ‘நேபாளி’ பள்­ளி­வா­ச­லென்றும் அழைக்­கின்­றனர்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், இலங்­கையில் காணப்­ப­டு­கின்ற காதி நீதி­மன்றம், வக்பு சபை, ஜம்­இய்­யதுல் உலமா, பிறை தீர்­மா­னித்தல் மற்றும் ஸகாத் நிதியம் போன்ற அனைத்து செயற்­பா­டு­களும் எந்­த­வித தடை­யு­மின்றி நேபா­ளத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.
நேபா­ளத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களை மைய­மாகக் கொண்டு இஸ்­லா­மிய பாட­சா­லைகள் செயற்­ப­டு­கின்­றன. இப்­பா­ட­சா­லை­களில் மார்க்கக் கல்­வியும், உலகக் கல்­வியும் சமாந்­த­ர­மாக போதிக்­கப்­ப­டு­வ­தாக காத்­மண்­டு­வி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்றின் நிர்­வாக சபை உறுப்­பி­ன­ரொ­ருவர் தெரி­வித்தார்.

எனினும், இந்தப் பாட­சா­லை­களில் தரம் எட்டு வரை மாத்­தி­ரமே கற்றல் செயற்­பா­டுகள் நடை­பெ­று­கின்­றன. அதன் பின்னர் அர­சாங்க பாட­சா­லை­களில் இம்­மா­ணவர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர்.

காத்­மண்டு நக­ரி­லுள்ள நேபாளி பள்­ளி­வா­ச­லினால் நிர்­வ­கிக்­கப்­படும் பாட­சா­லையில் 130 மாணவர்களும் 18 ஆசி­ரியர்களும் உள்­ளனர். இப்­பா­ட­சா­லையில் முஸ்­லி­மல்­லாத ஆசி­ரியர்களும் கற்­பிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்­தி­யாவின் மேற்கு, தெற்கு, கிழக்கு எல்­லைகள் நேபா­ளத்­திற்கு அண்­மை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன. நேபாளம் மலை­க­ளினால் சூழப்­பட்ட நாடாக காணப்­பட்­டாலும் இந்­தி­யா­வு­ட­னான தரை வழி போக்­கு­வ­ரத்­தினைக் கொண்­டுள்­ளது.

இதனால், உத்­தர பிரதேஷ், பிகார்,மேற்கு வங்­காளம் போன்ற மாநி­லங்­க­ளி­லி­ருந்து தரை மார்க்­க­மாக நேபா­ளத்­திற்குள் நுழைய முடியும்.

அது மாத்­தி­ர­மல்­லாமல் இந்­தியர்கள் எந்­த­வித விசா­வு­மின்றி நேபா­ளத்­திற்குள் நுழைய முடியும். இதனால், இந்­தி­யா­வி­லுள்ள பள்­ளி­வா­சல்கள், மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் இஸ்­லா­மிய நிறு­வ­னங்­க­ளுக்கு நிதி சேக­ரிப்­ப­தற்­காக புனித ரமழான் மாதத்தில் பல இந்­திய முஸ்­லிம்கள் நேபாளம் வந்­தி­ருந்­ததை காண முடிந்­தது.

நேபா­ளத்தின் எல்லைப் பிர­தே­சங்­களில் வாழ்­கின்ற இந்­திய முஸ்­லிம்கள் ஒவ்­வொரு வரு­டமும் புனித ரமழான் மாதத்தில் நேபாளம் வந்து நிதி சேக­ரிப்பில் ஈடு­ப­டு­வது வழ­மை­யான செயற்­ப­டாகும் என நேபாள முஸ்­லிம்கள் குறிப்­பிட்­டனர்.

இதே­வேளை, நேபா­ளத்தில் இந்­துக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­வ­தனால் இறைச்­சிக்­காக மாடுகள் அறுக்­கப்­ப­டு­வது மிகவும் அரி­தாகும். அது மாத்­தி­ர­மல்­லாமல், மீன் வகைகள் வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தனால் அதற்கும் அதிக கிராக்கி காணப்­பட்­டது.

இதற்கு மத்­தியில், நேபாள உண­வ­கங்­களில் ஹலால் உண­வினைப் பெற்­றுக்­கொள்­வது என்­பது சிர­ம­மான காரி­ய­மாகும். “ஹலால் உணவு உண்டு” என உண­வ­கங்­களில் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் அதனை நம்பி அந்த உண­வ­கத்தில் உண்ண வேண்டாம் என நேபா­ளத்தில் நான் சந்­தித்த ஒரு முஸ்லிம் தெரி­வித்தார். அந்த விளம்­ப­ரப்­ப­டுத்தல் ஒரு சந்­தைப்­ப­டுத்தல் யுக்தி எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கை­யினைப் போன்று நேபா­ளமும் இரா­ஜ­தந்­திர ரீதி­யாக இந்­தி­யா­வுடன் மிக நெருங்கிச் செயற்­ப­டு­கின்­றது. அது மாத்­தி­ர­மல்­லாமல் இந்­தி­யாவின் ஆதிக்கம் அங்கு அதிகம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நேபா­ளத்­திற்கு தேவை­யான எரி­பொருள், குழாய்­களின் ஊடாக இந்­தி­யா­வி­லி­ருந்தே கொண்டு வரப்­ப­டு­கின்­றது.

இலங்­கையில் இந்­தியன் ஒயில் கம்­பனி செயற்­ப­டு­வது போன்று நேபா­ளத்­திலும் இந்­தியன் ஒயில் கம்­பனி காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன், நேபா­ளத்­திற்கு தேவை­யான மின்­சா­ரத்தில் 50 சத­வீ­த­மா­னவை இந்­தி­யா­வி­லி­ருந்தே இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நேபா­ளத்தின் பெரும்­பா­லானோர் மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லேயே தொழில் புரி­கின்­றனர். இவர்களில் பெரும்­பா­லானோர் கொரோனா வைரஸ் பர­வ­லிற்கு பின்னர் அங்கு தொழில் இழந்­த­மை­யினால் நாடு திரும்­பி­யுள்­ளனர்.

இதனால், இலங்­கை­யினைப் போன்று நேபா­ளத்­திலும் அமெ­ரிக்க டொலர் சேமிப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. இதனால் இலங்­கை­யினைப் போன்ற பொரு­ளா­தார நெருக்­கடி அங்கும் காணப்­ப­டு­கின்­றது.

“இலங்­கை­யினைப் போன்ற நிலை­யொன்று நேபா­ளத்தில் ஏற்­ப­டுமா?” என அந்­நாட்டு நிதி அமைச்­ச­ரிடம் அந்­நாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்கள் அண்­மையில் வின­வி­யுள்­ள­மையும் குறிப்பிடத்தக்கது.

அது மாத்­தி­ர­மல்­லாமல், இலங்­கை­யினைப் போன்று வாகனம் உள்ளிட்ட பல பொருட்­களின் இறக்­கு­ம­திக்கும் நேபா­ளத்தில் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­யினை ஒத்த நெருக்­க­டி­யொன்­றினை நேபா­ளமும் எதிர்­நோக்­கி­யுள்­ளதை இந்த விஜ­யத்தின் போது அவதானிக்க முடிந்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.