விவசாயத்தை வலியுறுத்தும் இஸ்லாம்

0 969

அஷ்ஷைக் பளீல் (நளீமி)

மனித வாழ்வின் அடிப்­படைத் தேவை­களுள் ஒன்­றான உணவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முற்­சி­யாக விவ­சாயம் காணப்­ப­டு­கி­றது. அத்­துடன் ஆடைக்குத் தேவை­யான பருத்தி, கட்­டு­மான பணி­க­ளுக்கு தேவை­யான மரங்கள், மருத்­துவப் பொருட்கள், வாசனை திர­வி­யங்கள் என ஏரா­ள­மான விஷ­யங்­க­ளுக்கு விவ­சா­யமே மூலா­தாரம்.
பொரு­ளா­தார சுபீட்­சத்­தையும் தேசிய உற்­பத்தி உயர்­வையும் உணவில் சுய­தேவைப் பூர்த்­தி­யையும் எதிர்­பார்க்கும் ஒரு சமூகம் விவ­சா­யத்தில் கட்­டா­ய­மாக ஈடு­பாடு காட்ட வேண்டும்.

இஸ்­லா­மிய கண்­ணோட்­டத்தில் விவ­சாயம் ஒரு பர்ளு கிஃபா­யா­வாகும். அத்­து­றையில் தேவை­யான எண்­ணிக்­கை­யினர் சம்­பந்­தப்­பட்டு விவ­சாய உற்­பத்­தி­களில் ஈடு­பட்டு சமு­தா­யத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்­யாத போது சமு­தா­யத்தில் உள்ள அனை­வரும் பாவி­க­ளாவர்.

இஸ்­லா­மிய சட்டப் பகு­தியில் நிலத்தை வாட­கைக்கு விடுதல், மரங்­களை வாட­கைக்கு விடுதல் என்ற இரு பகு­தி­க­ளுடன் தொடர்­பான சட்­டங்கள் உள்­ளன. உதா­ர­ண­மாக ஸஹீஹுல் புகா­ரியில் வேளாண்­மையும் நிலக் குத்­த­கையும், நீர்ப்­பா­சன அடிப்­ப­டையில் தோப்­பு­களைக் குத்­த­கைக்கு விடுதல் (முஸாக்காத்)ஆகிய இரு தலைப்­புக்­க­ளிலும் பல ஹதீஸ்கள் முறையே 41,42 பாடங்­களில் பதி­யப்­பட்­டுள்­ளன. நபித்­தோ­ழர்­களிற் சிலர் விவ­சா­யி­க­ளா­கவும் வேறு சிலர் வியா­பா­ரி­க­ளா­கவும் இருந்­தார்கள்.
உலகில் வந்த முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் பல நபி­மார்கள் விவ­சா­யத்­து­றையில் ஈடு­பட்­டுள்­ளார்கள். அதிலும் குறிப்­பாக யூஸுஃப் (அலை) அவர்கள் மிகவும் பஞ்­சத்தில் இருந்த எகிப்து நாட்டை முறை­யான விவ­சாய கட்­ட­மைப்பின் மூலம் சீர்ப்­ப­டுத்தி, பொரு­ளா­தார ரீதி­யாக மிகப்­பெரும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்­தார்கள்.

மனித வாழ்வு பூமியில் நிலைக்க வேண்­டு­மாயின் விவ­சாய மற்றும் தொழில்­நுட்பத் தேவை­க­ளுக்­காக அந்த பூமி­யிலும் புவி­மேற்­ப­ரப்­பிலும் வளி­மண்­ட­லத்­திலும் அல்லாஹ் ஏற்­ப­டுத்­தி­யுள்ள வளங்­களை மனி­தர்கள் உச்ச அளவில் பயன்­ப­டுத்­துவது அவ­சி­ய­மாகும். இதற்கு இமா­ரத்துல் அர்ள்(பூமியை வளப்­ப­டுத்தல்) என்ற சொல்லை அல்லாஹ் குர்­ஆனில்(61:11) பயன்­ப­டுத்­தி­யுள்ளான்.

ஸாலிஹ்(அலை) அவர்கள் தனது சமூ­கத்தை நோக்கி “எனது சமூ­கமே நீங்கள் அல்­லாஹ்­வுக்கு இபாதத் செய்­யுங்கள். அவனைத் தவிர உங்­க­ளுக்கு வேறு இறைவன் கிடை­யாது. அவன் தான் உங்­களை பூமி­யி­லி­ருந்து உரு­வாக்­கினான். அதில் உங்­களை வாழ­வைத்து, அதனை வளப்­ப­டுத்தும் படியும் கேட்­டுக்­கொண்டான்” என்று கூறினான். இங்கு வந்­துள்ள ‘இஸ்­தஃ­ம­ரகும்’ என்ற சொற்­பி­ர­யோகம் நீங்கள் பல­வி­த­மான கட்­ட­டங்­களை அமைப்­ப­திலும் விதைப்­பது, நாட்­டு­வது போன்­ற­வற்­றிலும் ஈடு­ப­ட­வேண்டும் என்று உங்­களை பணித்­தி­ருக்­கிறான் என இமாம்­க­ளான பகவீ, ஸஅதீ போன்றோர் விளக்கம் சொல்­கி­றார்கள். பூமியில் கட்­டு­மானப் பணி­களில் ஈடு­ப­டு­வ­தற்கும் விவ­சாய உற்­பத்­தி­களை மேற்­கொள்­வ­தற்கும் விரும்­பி­யதை அறு­வடை செய்­வ­தற்கு அதன் பலன்­களை பயன்­ப­டுத்­து­வ­தற்­கு­மான வச­தி­களை அல்லாஹ் செய்து கொடுத்­தி­ருப்­ப­தாக இந்த வச­னத்தில் குறிப்­பி­டு­கிறான்.

பூமிக்குள் மறைந்­துள்ள வளங்­களை வெளிக் கொண்டு வரு­வ­தோடு புவி மேற்­ப­ரப்பில் உள்­ள­வற்றை இமாரத் பணிக்­காக அவன் பயன்­ப­டுத்த வேண்டும் என பணிக்­கப்­பட்­டுள்ளான்.

அல்­குர்­ஆனில் அல்லாஹ் விவ­சா­யத்­துடன் நேர­டி­யாக சம்­பந்­தப்­படும் கூறு­க­ளான நிலங்கள், காற்று, மழை,ஆறுகள், மலைகள்,மக­ரந்த சேர்க்கை, நீர், பயி­ரிடல், முளைப்­பித்தல், அறு­வடை செய்தல் போன்­றன பற்­றியும் பழங்கள், தாவ­ரங்கள் தோப்­புக்கள், கீரை வகைகள் பற்­றியும் பல நூற்­றுக்­க­ணக்­கான இடங்­களில் பிரஸ்­தா­பிக்­கிறான். அவ­னது பேராற்­ற­லுக்­கான அடை­யா­ளங்­க­ளா­கவும் மனி­தர்­க­ளுக்கு வழங்­கிய பாக்­கி­யங்­க­ளா­கவும் அவற்றை அவன் குறிப்­பி­டு­கின்றான்.

80:24. எனவே, மனிதன் தன் உணவின் பக்­கமே (அது எவ்­வாறு பெறப்­ப­டு­கி­றது) என்­பதை நோட்­ட­மிட்டுப் பார்க்­கட்டும்.
80:25. நிச்­ச­ய­மாக நாமே மழையை நன்கு பொழியச் செய்­கிறோம்.
80:26. பின், பூமியைப் பிளப்­ப­தாகப் பிளந்து-
80:27. பின் அதி­லி­ருந்து வித்தை முளைப்­பிக்­கிறோம்.
80:28. திராட்­சை­க­ளையும், புற்­பூண்­டு­க­ளையும்-
80:29. ஒலிவ் மரத்­தையும், பேரீச்­சை­யையும் –
80:30. அடர்ந்த தோட்­டங்­க­ளையும்,
80:31. பழங்­க­ளையும், தீவ­னங்­க­ளையும்-
80:32 (இவை­யெல்லாம்) உங்­க­ளுக்கும், உங்கள் கால் நடை­க­ளுக்கும் பய­ன­ளிப்­ப­தற்­காக,(தரப்­பட்­டுள்­ளன.)
23:18. மேலும், வானத்­தி­லி­ருந்து நாம் திட்­ட­மான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்­கிறோம்; நிச்­ச­ய­மாக அதனைப் போக்­கி­வி­டவும் நாம் சக்­தி­யு­டையோம்.
23:19. அதனைக் கொண்டு, நாம் உங்­க­ளுக்கு பேரீச்சை, திராட்சை தோட்­டங்­களை உண்­டாக்­கி­யி­ருக்­கின்றோம்; அவற்றில் உங்­க­ளுக்கு ஏரா­ள­மான கனி­வ­கைகள் இருக்­கின்­றன; அவற்­றி­லி­ருந்து நீங்கள் புசிக்­கின்­றீர்கள்.
23:20. இன்னும் தூர் ஸினாய் மலைக்­க­ருகே உற்­பத்­தி­யாகும் மரத்­தையும் (உங்­க­ளுக்­காக நாம் உண்­டாக்­கினோம்) அது எண்­ணெயை உற்­பத்தி செய்­கி­றது. மேலும் (ரொட்டி போன்­ற­வற்றை) சாப்­பி­டு­வோ­ருக்கு தொட்டு சாப்­பிடும் பொரு­ளா­கவும் (அது அமைந்­துள்­ளது).

திராட்சை, அத்தி, ஈத்­தம்­பழம், போன்ற சுமார் 30க்கும் அதி­க­மான பழங்கள் பற்றி அல்­குர்­ஆனில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

விவ­சாயம் தொடர்­பாக அல்­குர்­ஆ­னிலும் சுன்­னா­விலும் வந்­துள்ள வச­னங்­களைப் பார்த்தால் அதன் சிறப்பு, உல­கிலும் மறு­மை­யிலும் கிடைக்கும் பலா­ப­லன்கள் பற்­றி­யெல்லாம் அவை பேசு­கின்­றன. இஸ்லாம் உடல் தேவை­க­ளுக்கும் ஆத்­மாவின் தேவை­க­ளுக்கும் சம­நிலை காண்­பதன் அவ­சி­யத்தை அவற்­றி­னூ­டாக உண­ர­மு­டி­கி­றது
விவ­சா­யத்தில் மனி­தனின் முயற்சி பற்றி பின்­வரும் வசனம் கூறு­கி­றது:-
36:34. மேலும், அதில் நாம் பேரீத்த மரங்­க­ளி­னாலும், திராட்சை(க் கொடி)களி­னாலும் தோட்­டங்­களை உண்­டாக்­கு­கிறோம்; இன்னும் அதில் நீரூற்­றுக்­களைப் பீறிட்டு ஓடச்­செய்­கின்றோம்.
36:35. அதன் பழ­வ­கை­களில் இருந்தும் அவர்­க­ளு­டைய கைகள் செய்­த­வற்றில் இருந்தும் அவர்கள் உண்­ப­தற்­காக (இந்த ஏற்­பாட்டை செய்­தி­ருக்­கிறோம்) ஆகவே, அவர்கள் நன்றி செலுத்­த­மாட்­டார்­களா?

இங்கு வந்­துள்ள ‘அவர்­க­ளது கைகள் செய்­தவை’ என்ற சொற்­றொடர் மனி­தர்­க­ளது விவ­சாய உற்­பத்தி முயற்­சி­களை குறிக்கும். அது அவர்கள் தமது கைகளால் செய்யும் மர­ந­டு­கை­யாகும் என்­பது இமாம் இப்னு அப்பாஸ், இமாம் தபரீ போன்­றோ­ரது கருத்­தாகும்.
இவ்­வ­ச­னத்தில் “அவர்கள் நன்றி செலுத்­து­வ­தில்­லையா?” என்ற கேள்­விக்கு வியாக்­கி­யானம் கூறும் இமாம்கள் பிர­பஞ்­சத்தை சூழல் மாச­டைதல் போன்ற அழிவு வேலை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தாமல் விவ­சாயம் போன்ற ஆக்க முயற்­சி­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­வதன் ஊடா­கவே அல்­லாஹ்­வுக்கு நன்றி செலுத்­து­கின்ற கட­மையை மனிதன் நிறை­வேற்­றி­ய­வ­னாவான் என்றும் அவர்கள் கூறு­கி­றார்கள்.

67:15. அவனே உங்­க­ளுக்கு இப்­பூ­மியை (நீங்கள் வாழ்­வ­தற்கு) வச­தி­யாக ஆக்­கினான்; ஆகவே, அதன் பல மருங்­கு­க­ளிலும், நடந்து அவ­னு­டைய உண­வி­லி­ருந்து புசி­யுங்கள்; இன்னும் அவ­னி­டமே (யாவரும்) உயிர்த்­தெழ வேண்­டி­யி­ருக்­கி­றது.”
என்ற இந்த வச­னத்­திற்கு இமாம் குர்­துபீ அவர்கள் தனதும் வேறு சில­ரதும் வியாக்­கி­யா­னங்­களைத் தரு­கி­றார்கள். அதில் பூமியை இவ்­வாறு முரண்டு பிடிக்­காத, கட்­டுப்­ப­டக் ­கூ­டி­ய­தாக அல்லாஹ் அமைத்தி­ருப்­ப­தா­கவும் பயி­ரி­டுதல், வித்­துக்­களை நாட்­டுதல், ஊற்­றுக்­க­ளையும் ஆறு­க­ளையும் ஓடச் செய்தல், கிண­று­களைத் தோண்­டுதல் போன்ற செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்கு மனி­த­னுக்கு வசதி செய்து கொடுத்­தி­ருப்­ப­தையே காட்­டு­கி­றது என்ற விளக்­கத்­தையும் முன்­வைக்­கி­றார்கள்.

விவ­சா­யத்தை வலி­யு­றுத்­து­கின்ற, போற்றிப் புகழ்­கின்ற இது­போன்ற வச­னங்கள் அல்­குர்­ஆனில் வந்­தி­ருக்­கின்­றன என்ற உண்­மையை நாம் புரிந்து இருக்க வேண்டும்.

ஹதீஸ்­களில் விவ­சாயம் பற்றி
நபி­களார் (ஸல்) அவர்கள் விவ­சாயம் செய்­வதன் முக்­கி­யத்­து­வத்தை பல்­வே­று­பட்ட ஹதீஸ்­களில் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்கள்:-

“முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டி அல்­லது விதையை விதைத்து, விவ­சாயம் செய்து, அதி­லி­ருந்து (அதன் விளைச்­சலை அல்­லது காய்­க­னி­களை) ஒரு பற­வையோ, ஒரு மனி­தனோ அல்­லது ஒரு பிரா­ணியோ உண்டால் அதன் கார­ணத்தால் ஒரு தர்மம் செய்­த­தற்­கான பிர­தி­பலன் அவ­ருக்குக் கிடைக்கும்” (நூற்கள்-:- புஹாரீ 2320, முஸ்லிம் 1553)
மேலும் ஒரு ஹதீஸில் “எந்­த­வொரு முஸ்­லிமும் ஒரு மரத்தை நட்­டி­னாலும் அதன் விளைச்­சலில் இருந்து சாப்­பி­டப்­பட்டால் அதுவும் அவ­ருக்கு தர்­ம­மாகும். அதி­லி­ருந்து கள­வா­டப்­பாட்­டாலும் அதுவும் அவ­ருக்கு தர்­ம­மாகும். காட்டு மிரு­கங்கள் அதி­லி­ருந்து சாப்­பிட்டால் அதுவும் அவ­ருக்கு தர்­ம­மாகும். பற­வைகள் சாப்­பிட்டால் அதுவும் அவ­ருக்கு தர்­ம­மாகும். அவ­ரது பயிர்­களில் ஏதா­வது ஒன்றை ஒருவர் குறைத்­து­விட்­டாலும் அதுவும் அவ­ருக்கு தர்­ம­மாகும்.(ஸஹீஹ் முஸ்லிம்:1552)

எடுத்­துக்­காட்­டாக, பேரீச்­சம்­பழ மரத்­தி­லி­ருந்து ஒரு திருடன் திரு­டினால், இந்த திரு­ட­னது திருட்டு பற்றி அந்த விவ­சாயி அறிந்­தி­ருக்­கா­விட்­டாலும், அவ­ருக்கு அதற்­கான வெகு­மதி கிடைக்கும் என்­பது ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. இந்த திருட்டை அவ­ருக்கு மறுமை நாள் வரை தர்­ம­மாக எல்லாம் வல்ல இறைவன் எழு­து­கிறான்.

அது­போ­லவே ஒரு செடியை பூமியில் உள்ள மிரு­கங்­களும், பூச்­சி­களும் தின்றால் அதன் உரி­மை­யா­ள­ருக்கு தர்மம் கிடைக்கும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள்:-

”யாரி­ட­மா­வது ஒரு நிலம் இருந்தால் அவர் அதில் பயிர்­செய்­யட்டும். அவ்­வாறு பயிர்­செய்ய முடி­யாமல் அவர் பல­வீ­னப்­பட்­ட­வ­ராக இருந்தால் தனது சகோ­தர முஸ்­லி­முக்கு அதனை வழங்­கட்டும்” என்­றார்கள்.

”யார் ஒரு நிலத்தை உயிர்ப்­பிக்­கி­றாரோ (பயிர்ச்­செய்­கைக்கு பொருத்­த­மற்ற நிலையில் உள்ள -பயன்­ப­டு­தப்­ப­டாமல் உள்ள ஒரு பூமியை பயிர்ச் ­செய்­கைக்கு உகந்­தாக மாற்­று­கி­றாரோ) அவ­ருக்கு அதில் கூலி – (அல்­லாஹ்வின் வெகு­மதி) கிடைக்கும். அதி­லி­ருந்து யாரோ ஒரு மனி­தனோ அல்­லது உயி­ரி­னங்­களோ சாப்­பிட்டால் அது அவ­ருக்கு ஸத­கா­வாக அமையும்.”(ஸுனன் நஸாயீ)

”உங்­களில் ஒரு­வ­ரது கையில் ஒரு மரத்தின் கிளை (நட்­டு­வ­தற்கு தயா­ரான நிலையில்) இருக்கும் போது மறுமை நாள் வந்து விட்­டது என்று வைத்துக் கொண்டால் மறுமை நாள் வர முன்னர் அவரால் அந்தக் கிளையை நாட்ட முடிந்தால் அதனை அவர் நாட்­டட்டும்” என நபி (ஸல்) கூறி­னார்கள்.

இந்த ஹதீஸ் விவ­சா­யத்­து­றை­யி­ன­ருக்கு அற்­பு­த­மான உற்சா­கத்தைத் தரு­கி­றது. அடுத்த நிமிடம் உலகம் அழி­யப்­போ­வது நிச்­சய­மான சூழ­லிலும் கூட உற்­பத்தி முயற்­சி­களைக் கைவி­டக்­கூ­டாது என்­ப­தையும் விளை­வுகள் பற்றி அவ­நம்­பிக்கை நிலவும் சூழலிலும் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் அதன் கூலியை அல்லாஹ் தருவான் என்பதையும் இது காட்டுகிறது.

மேற்கூறப்பட்ட விளக்கத்திலிருந்து சில கருத்துக்களைப் பெற முடியும்:
1.விவசாயம் செய்வது அல்லாஹ்வின் ஆசீர்வாதத்தையும் மகத்தான கூலியையும் பெற்றுத்தரும் ‘இபாதத்’ ஆகும். அது ‘இமாரதுல் அர்ள்’ எனப்படும் பூமியை வளப்படுத்தும் மகத்தான பணியுமாகும்.
2. அதில் நபிமார்கள், ஸஹாபாக்கள் என்போர் ஈடுபட்டு தமது ஜீவனோபாயத்தை தேடியிருக்கிறார்கள்.
3. இஸ்லாமிய சட்டப் பகுதியில் அது தொடர்பான சட்டங்கள் உள்ளன.
4. விவ­சாய முயற்­சி­களில் ஈடு­ப­டு­வது ‘ஃபர்ளு கிபாயா’ மட்­டு­மன்றி மனி­தர்­க­ளது அடிப்­படைத் தேவை­யான உணவைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான மூலமுமாகும்.
5. விவசாயத்தில் ஈடுபடும் ஒருவர் தனது இறைவனின் கட்டளைக்கு அடிபணிகிறார்; அவனது நற்கூலியைப் பெறுகிறார்; உலக மாந்தர்களதும் தான் வசிக்கும் நாட்டு மக்களதும் ஏன் உலக மாந்தர்களதும் உணவுத் தேவையின் ஒரு பகுதி பூர்த்தி செய்யப்பட பங்களிப்பு செய்கிறார்.

அல்லாஹ் எமது முயற்சிகளை அங்கீகரிப்பானாக!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.