குர் ஆனை அவமதிக்கும் வண்ணம் ஞானசாரர் வெளியிட்ட கருத்துக்கள் : மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு தாக்கல் செய்ய தீர்மானம்

சட்ட மா அதிபரின் ஆலோசனையை நீதிமன்றுக்கு அறிவித்தது சி.சி.டி.

0 276

(எம்.எப்.எம்.பஸீர்)
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக, மத உணர்­வு­களைப் புண்படுத்தும் வார்த்தைப் பிர­யோ­கங்­களை செய்­தமை தொடர்பில் தண்­டனை சட்டக் கோவையின் 291 அ அத்­தி­யா­யத்தின் கீழ் குற்றச் சாட்­டுக்­களை முன் வைக்­கு­மாறு சட்ட மா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.
2014.04.12 அன்று மதங்­க­ளுக்கு இடையே வேற்­று­மைகள் தோன்றும் வகையில் ஊட­கங்­க­ளிடம் புனித அல்குர் ஆனை அவ­ம­திக்கும் வண்ணம் ஞானசார தேரர் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­தாக முன் வைக்­கப்­பட்ட முறைப்­பா­டு­க­ளுக்கு அமைவாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு அமைய இந்த ஆலோ­ச­னையை சட்ட மா அதிபர், விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கி­யுள்ளார்.

அல்குர் ஆன் அவ­ம­திப்பு தொடர்பில் கொம்­பனி தெரு பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டப்­பட்ட நிலையில் அதன் விசா­ர­ணைகள் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு கோட்டை நீதிவான் முன்­னி­லையில் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இது தொடர்பில் 2014.05.05 அன்று கோட்டை நீதிவான் நீதி­மன்றில் ஞான­சார தேரர் சட்­டத்­த­ரணி ஒரு­வ­ரூ­டாக சர­ண­டைந்­தி­ருந்த நிலையில் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.

அவ்­வா­றான நிலையில், குறித்த வ­ழக்கு கோட்டை நீதிவான் திலின கமகே முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது, விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ரான பொலிஸ் அதி­காரி, விசா­ர­ணைகள் நிறைவு பெற்று சட்ட மா அதி­ப­ரிடம் ஆலோ­சனை கோரப்பட்­டி­ருந்த நிலையில், ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 291 அ அத்­தி­யா­யத்தின் கீழ் குற்றச்சாட்டு தாக்கல் செய்ய ஆலோ­சனை கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக மன்­றுக்கு தெரி­வித்தார். அதன்­படி அதனை தாக்கல் செய்ய திக­தி­யொன்­றினை தரு­மாறு அவர் கோரினார்.

இதன்­போது மன்றில், இந்த விவ­கா­ரத்தில் பொலிஸில் முறைப்­பாடு செய்­­த­வர்­க­ளுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன், பாதிக்­கப்­பட்ட தரப்பை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

ஞான­சார தேர­ருக்­காக சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்த மன்றில் முன்னிலையானார்.

இந் நிலையில் பொலி­ஸாரின் கோரிக்கை பிர­காரம், ஞான­சார தேர­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்டை தாக்கல் செய்ய வழக்கு எதிர்­வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திக­தி­வரை ஒத்திவைக்­கப்­பட்­டது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.