உயர்நீதிமன்றம் செல்லாவிடின் நசீர் எம்.பி.யின் பாராளுமன்ற ஆசனம் 25 ஆம் திகதியோடு வறிதாகும்

ஹரீஸ், பைஸல், தௌபீக்குக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஹக்கீம்

0 551

மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நசீர் அஹ­மடை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­யுள்­ளோம். அவர் உயர் நீதி­மன்­றத்­திற்கு செல்­லா­விடின் எதிர்­வரும் 25 ஆம் திக­தி­யுடன் அவரின் பாரா­ளு­மன்ற ஆசனம் வறிதா­கி­விடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அத்­தோடு, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஸல் காஸிம், எம்.எஸ்.தௌபீக் ஆகி­யோ­ருக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம் எனவும் அவர் ஊட­க­மொன்றில் இடம்­பெற்ற அர­சியல் நிகழ்ச்­சி­யொன்றில் தெரி­வித்தார்.
நசீர் அஹமட் அமைச்­ச­ர­வையில் அமைச்சுப் பொறுப்பை ஏற்­றதன் அடிப்­ப­டையில் அவரை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­கின்­ற­தொரு தீர்­மா­னத்தை தாங்கள் எடுக்­கப்­பட்­டது. அதே­வே­ளையில் 20ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்கும் அதற்கு பின்னர் வந்த அர­சாங்­கத்தின் வரவு செலவுத் திட்டம் சம்­பந்­த­மான விட­யங்­களில் கட்­சி­யி­னு­டைய தலை­மைக்கு மாறாக தங்­க­ளு­டைய விருப்­பங்­களை வெளிப்­ப­டுத்­திய உறுப்­பி­னர்கள் விட­யத்தில் சில ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களைத் தாங்கள் மேற்­கொண்­டமை தொடர்பில் கேள்வி எழுப்­பப்­பட்­ட­போதே ஹக்கீம் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை நாங்கள் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டோம். அவ­ரு­டைய பாரா­ளு­மன்ற ஆசனம் வரு­கின்ற 25ஆம் திக­தி­யோடு அவர் உயர்­நீ­தி­மன்­றத்­திற்கு செல்­ல­வில்லை என்றால் வறி­தா­கி­விடும். மற்ற மூவ­ருக்கும் எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. எனவே அந்த நட­வ­டிக்­கைகள் அப்­படி இருக்­கத்­தக்­க­தாக அவர்­க­ளு­டைய உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்தும் அவர்கள் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இந்தச் சூழலில் முஸ்லிம் காங்­கிரஸ் தலைமை அவர்­க­ளோடு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எதையும் கதைப்­பது சாத்­தி­ய­மல்ல.

எனவே அண்­மையில் எதிர்க்­கட்சி தலை­வரைச் சந்­தித்து “நாங்கள் எதிர்­க்கட்­சியில் மீளவும் இணைந்து பய­ணிப்­ப­தற்கு தயா­ராக இருக்­கின்றோம் ” என்று அவர்­களும் இஷாக் ரஹ்மானும்  அறி­வித்­தி­ருப்­பதை நான் கண்­ணுற்றேன். எனவே இந்த விட­யங்கள் சம்­பந்­த­மாக இன்று பாரா­ளு­மன்­றத்தில் இருக்­கின்ற சமன்­பாடு என்­பது இந்த கட்­டத்தில் எதிர்க் கட்­சி­க­ளுக்கு முக்­கி­ய­மான விடயம். எனவே அந்த சமன்­பாட்டை கையாள்­வதில் இயன்­ற­வரை எங்­க­ளு­டைய உத­வி­களை செய்ய வேண்டும். அதை குழப்­பு­வ­தற்கு நாங்கள் முயற்­சிக்கப் போவ­தில்லை. எனவே இதை நாங்கள் மிகவும் அவதானமாக அந்த விட­யத்தை கையாள வேண்­டிய அவ­சியம் இருக்­கின்­றது.

ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய அர­சியல் எதிர்­காலம் சம்­பந்­த­மான விட­யத்தில் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் அது சம்­பந்­த­மான அனு­மா­ன­மி­ருக்கும். நடந்த விவ­கா­ரங்கள் சம்­பந்­த­மாக இன்று கட்சிப் போரா­ளி­க­ளு­டைய எண்­ணங்கள் என்ன என்­ப­தற்கு எல்­லோரும் இன்று பத்­தி­ரி­கை­களை வாசிக்கத் தேவையில்லை. இன்று சமூகவலைத்தளங்களில் வருகின்ற பதிவுகளைப் பார்த்தால் எல்லோருக்கும் அந்த தெளிவு வரும். எனவே இந்த கட்டத்தில் அதைவிடவும் கூடுதலாக நாங்கள் எதையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. காலம் இதற்கெல்லாம் தகுந்த பதில் சொல்லும் என்று மாத்திரம் நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.