நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில்தோற்கடிக்கப்பட்ட இன வன்முறையை ஏற்படுத்தும் முயற்சி

0 432

எம்.இஸட். ஷாஜஹான்,
எம்.எம்.இஸ்­மதுல் றஹுமான்

அர­சியல் பொரு­ளா­தர நெருக்­க­டியால் நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் அமை­தி­யற்ற சூழ்­நி­லையை இன வன்­மு­றை­யாக மாற்­றி­ய­மைக்கும் முயற்­சிகள் ஆங்­காங்கே இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இதன் ஓர் அங்­க­மாக நேற்று முன்­தினம் மாலை நீர்­கொ­ழும்பு பகு­தியில் பதற்­ற­மா­ன­தொரு சூழ்­நிலை திட்­ட­மிட்டு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
நீர்­கொ­ழும்பு பெரி­ய­முல்லை பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை (10) மாலை இரு இனங்­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலை­யொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் அங்கு விரைந்த கத்­தோ­லிக்க, இஸ்­லா­மிய மதத் தலை­வர்கள், பாது­காப்பு தரப்­பினர் மற்றும் பொலிசார் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையை தொடர்ந்து பிர­தே­சத்தில் அமைதி ஏற்­பட்­டது.

கடந்த திங்­கட்­கி­ழமை நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பொது ஜன பெர­முன அர­சி­யல்­வா­திகள் மற்றும் ராஜ­பக்ச குடும்­பத்­திற்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளது உடை­மைகள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன. இதன்­போது நீர்­கொ­ழும்பு மீரி­கமை வீதியில் அமைந்­துள்ள, மஹிந்த ராஜ­பக்­சவின் நெருங்­கிய ஆத­ர­வாளர் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான அவென்ட்ரா சொகுசு ஹோட்டல் மற்றும் வாகன விற்­பனை நிலையம் என்­பன தீ வைத்து எரிக்­கப்­பட்­டது.

இதன்­போது அங்­கி­ருந்த பெறு­ம­தி­வாய்ந்த தள­பா­டங்கள் மற்றும் உப­க­ர­ணங்கள் வன்­மு­றை­யா­ளர்­களால் சூறை­யா­டப்­பட்­டன. மறுநாள் செவ்­வாய்க்­கி­ழ­மையும் இக் கட்­டி­டத்­தினுள் நுழைந்த மக்கள் அங்­கி­ருந்த பொருட்­களைக் கள­வாடிச் சென்­றனர். அயல் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து வந்தும் இவ்­வாறு பலர் பொருட்­களை எடுத்துச் சென்­ற­தாக சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்கள் விடி­வெள்­ளி­யிடம் தெரி­வித்­தனர்.

இந்த நிலையில் செவ்­வாய்க்­கி­ழமை மாலை நீர்­கொ­ழும்பு, பெரி­ய­முல்லை பகு­திக்கு வந்த குறித்த ஹோட்டல் உரி­மை­யா­ளரின் ஆத­ர­வா­ளர்கள் சிலர், அப் பகு­தியில் உள்ள முஸ்­லிம்­கள்தான் பொருட்­களைக் கொள்­ளை­ய­டித்­த­தாக கூறி இந்த விவ­கா­ரத்தை இன முரண்­பா­டாக மாற்­று­வ­தற்கு முயற்­சித்­த­துடன் வன்­மு­றை­யிலும் ஈடு­பட்­டனர். இதன்­போது முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான உடை­மைகள் சில சேத­மாக்­கப்­பட்­டன.

இத­னை­ய­டுத்து முஸ்­லிம்கள் செறிந்­து­வாழும் பெரி­ய­முல்லை, டீன் சந்­தியில் அமைந்­துள்ள மூன்று கடைகள் தாக்­கப்­பட்­டன. அத்­தோடு துவிச்­சக்­கர வண்­டிகள், மோட்டார் சைக்­கிள்கள், முச்­ச­க்கர வண்டி மற்­றும் வேன் என்­ப­னவும் எரிக்­கப்­பட்­டன.
இந்த தாக்­கு­தல்­க­ளின்­போது காய­ம­டைந்த நால்வர் நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் மூன்று முஸ்­லிம்­களும் ஒரு பெரும்­பான்மை இனத்­த­வரும் அடங்­குவர்.

எனினும் இவ்­வன்­மு­றைகள் இன முரண்­பா­டாக மாறலாம் என அஞ்­சிய சர்­வ­மத தலை­வர்கள் உட­ன­டி­யாக செயற்­பட்டு பிர­தே­சத்தில் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டனர். கத்­தோ­லிக்க மதத் தலை­வர்கள் இஸ்­லா­மிய, பௌத்த மதத் தலை­வர்கள் சம்­பவ இடத்­துக்கு வந்து அமைதி ஏற்­ப­டு­வ­தற்கு முயற்சி செய்­தனர்.

வீதிக்கு வந்த பிர­தேச தேவா­ல­யங்­களின் அருட்­தந்­தை­யர்கள் மற்றும் அருட் சகோ­த­ரிகள் அங்கு கல­கத்தில் ஈபட்­ட­வர்­களை தடுத்­த­துடன், பிர­தேச மக்­களை பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையும் எடுத்­தனர்.

இதற்­கி­டையில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர், விமா­னப்­ப­டை­யினர் மற்றும் பொலிசார் சம்­பவ இடத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டனர்.

விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் விமா­னப்­ப­டை­யினர் மீரி­கமை வீதி மற்றும் பெரி­ய­முல்லை பிர­தே­சங்­களில் சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு பிர­தே­சத்தில் பாது­காப்பைப் பலப்­ப­டுத்­தினர்.

இச் சம்­பவம் தொடர்பில் சம்­பவ இடத்­துக்குச் சென்ற கட்­டு­நா­யக்க மெத­டிஸ்த தேவா­ல­யத்தின் அருட்­தந்தை குசும் குமா­ர­சிறி கருத்து வெளி­யி­டு­கையில், அர­சியல் வன்­மு­றை­யா­ளர்கள் சிலர் அந்த இடத்­துக்குச் சென்று முஸ்லிம் சகோ­த­ரர்­களின் கடைகள் சில­வற்றைத் தாக்­கி­யுள்­ளனர். அத்­துடன் வாக­னங்­க­ளுக்கும் தீ வைத்­துள்­ளனர்.

முஸ்­லிம்கள் எவ்­வித வன்­மு­றை­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை. அங்கு வந்த வேறு சிலரே வன்­மு­றை­களில் ஈடு­பட்­டுள்­ளனர். இதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இதனால் எவரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக எந்­த­வித வன­மு­றை­க­ளிலும் ஈடு­படக் கூடாது. தற்­போது இரா­ணுவம் பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்­டுள்­ளது. நாம் இரா­ணுவத் தள­ப­தி­யுடன் தொடர்பு கொண்டோம். முஸ்லிம் சகோ­த­ரர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­துங்கள், இன்றேல் உங்கள் மீதும் மக்கள் சந்­தே­கப்­ப­டு­வார்கள் எனக் கூறினோம். பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அவர் உறு­தி­ய­ளித்தார். மேலும் முஸ்­லிம்கள் ஒரு­போதும் கத்­தோ­லிக்­கர்கள் மீது தாக்­குதல் நடத்­த­வில்லை.எனக் கூறினோம். பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அவர் உறுதியளித்தார். மேலும் முஸ்லிம்கள் ஒருபோதும் கத்தோலிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. அரசியல் கும்பல் ஒன்றுதான் முஸ்லிம் பகுதிக்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளது. நான் அவர்களது பெயரைக் குறிப்பிடவிரும்பவில்லை. நீர்கொழும்பில் உள்ள எந்த அரசியல்வாதி வன்முறைக்கும்பலை வைத்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்றும் தெரிவித்தார்.

தற்போது அங்கு அமைதி நிலவுவதுடன் முப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.