சிராஸ் நூர்தீன் இராஜினாமா

0 34

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு என்னால் எந்­த­வித நிவா­ர­ணத்­தி­னையும் உத­வி­யி­னையும் வழங்க முடி­யாது என்­பதை உணர்ந்­ததன் பின்பே நான் எனது பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்தேன் என காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தின் ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ராக பதவி வகித்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தெரி­வித்தார்.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தின் ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ராக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட சிராஸ் நூர்தீன் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­வது தொடர்பில் அதற்­கான கார­ணங்­களைக் குறிப்­பிட்டு ஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்தார்.

காணா­மல்­போனோர் அலு­வ­லகம் சுதந்­தி­ர­மாக செயற்­பட வேண்டும். எந்­த­வொரு தரப்­பி­னதும் தலை­யீ­டுகள் இருக்­கக்­கூ­டாது. ஆனால் இவ் அலு­வ­ல­கத்தின் மீது நீதி­ய­மைச்சின் தலை­யீ­டுகள், வெளி­வி­வ­கார அமைச்சு தேவை­யான உத­வி­களை வழங்க தவ­றி­யமை, திறை­சேரி தேவை­யான நிதி­யினை ஒதுக்­காமை, அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டு­களை செயற்­தி­ற­னாக முன்­னெ­டுப்­ப­தற்கு ஏனைய ஆணை­யா­ளர்கள் முறை­யாக நிய­மிக்­கப்­ப­டாமை என்­பன தனது இரா­ஜி­னா­மா­வுக்­கான கார­ணிகள் என ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

சிராஸ் நூர்தீன் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்­துக்­கான ஆளனி எண்­ணிக்கை 120 பேராக இருக்க வேண்டும். ஆனால் 23 பேரே நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

காணாமல் போனோரின் 21,500 கோவை­களைக் கையாள வேண்­டி­யுள்­ளது. இலங்கை சர்­வ­தேச உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டுள்­ளதன் பிர­காரம் இவ்­வ­லு­வ­லகம் வரு­டாத்தம் ஐக்­கிய நாடுகள் சபைக்கு அறிக்கை சமர்ப்­பிக்க வேண்டும். ஆனால் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. 2018 இல் அது தொடர்பில் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. 2021 ல் இறுதி எச்­ச­ரிக்­கையும் விடுக்­கப்­பட்­டது.

நான் பத­வி­யேற்­றதும் கடந்த டிசம்பர், ஜன­வரி மாதங்­களில் யாழ்ப்­பாணம் கிளி­நொச்சி பகு­தி­க­ளுக்கு கள விஜ­யத்­தினை மேற்­கொண்டு காணாமல் போனோர் குடும்­பங்­களின் பிரச்­சி­னை­களை கேட்­ட­றிந்தேன். என்­றாலும் இவ் அலு­வ­ல­கத்தின் ஊடாக எனது கட­மை­களை சுதந்­தி­ர­மாக முன்­னெ­டுக்க முடி­யா­துள்­ளது.

நான் கடந்த மார்ச் மாதம் பிரச்­சி­னை­களைக் கூறி பத­வியை இரா­ஜி­னாமா செய்­வ­தாகக் கூறினேன். வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லா­ள­ருடன் கலந்­து­ரை­யா­டலும் இடம்­பெற்­றது. ஆனால் எவ்­வித மாற்­றமும் ஏற்­ப­ட­வில்லை.

எனது பத­விக்­காலம் முடிய மேலும் 32 மாதங்கள் இருக்­கின்­றன. என்­றாலும் நான் நான்கு மாத சேவையின் பின்பு இரா­ஜி­னாமா செய்­துள்ளேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.