இலங்கைக்கான ஹஜ் கோட்டா சவூதி அமைச்சு உறுதி செய்தது

0 29

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு இலங்­கைக்கு இவ்­வ­ருடம் ஹஜ் யாத்திரைக்காக 1585 கோட்டா வழங்­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளனர்.

இந்நிலையில் கிடைக்­கப்­பெற்­றுள்ள ஹஜ் கோட்­டாவை ஹஜ் முக­வர்­க­ளுக்­கி­டையில் பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்‌­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், அரச ஹஜ் குழு­வுடன் எதிர்­வரும் நாட்­களில் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­ள­வுள்­ளனர்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்‌­க­ளத்தில் ஹஜ் யாத்­தி­ரைக்­கென 2018, 2019, 2020 ஆம் ஆண்­டு­களில் சுமார் 4000 பேர் பதி­வுக்­கட்­டணம் செலுத்தி தம்­மைப்­ப­திவு செய்து கொண்­டுள்­ளனர். ஹஜ் கட­மைக்­காக பதிவு செய்து கொண்­டுள்­ள­வர்­க­ளி­லி­ருந்தே, சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சின் ஹஜ் வழி­காட்­டல்கள் மற்றும் விதி­க­ளுக்கு அமைய பய­ணிகள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், 65 வய­துக்­குட்­பட்ட கொவிட் 19 தடுப்­பூசி மூன்­றினைப் பெற்­றுக்­கொண்­டுள்­ள­வர்கள் சவூதி அரே­பி­யாவின் ஏனைய வழி­காட்­டல்கள் விதி­மு­றை­க­ளுக்கு அமை­வாக ஹஜ் யாத்­தி­ரை­க­ளுக்கு தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். ஹஜ் பய­ணி­களை அழைத்துச் செல்லும் முக­வர்­களும் 65 வய­துக்­குட்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும் என்­பது சவூதி ஹஜ் அமைச்சின் புதிய விதி­யாகும்.

இதேவேளை கடந்த வரு­டங்­களில் பல்­வேறு ஊழல் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாகி திணைக்­க­ளத்­தினால் நடாத்­தப்­பட்ட விசா­ர­ணை­களில் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்டு ஹஜ் முகவர் அனு­ம­திப்­பத்­திரம் தடை­செய்­யப்­பட்­டுள்ள முக­வர்­க­ளுக்கு ஹஜ் கோட்டா பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்றார்.

இதேவேளை அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் கருத்து தெரி­விக்­கையில் 50 வய­துக்கும் 65 வய­துக்கும் இடைப்­பட்ட விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கும் முதற் தட­வை­யாக ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ள விரும்­பு­ப­வர்­க­ளுக்கும் இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரிகர் தெரிவில் முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.

அத்தோடு ஹஜ் கட்டணம் முகவர்கள் சவூதி அரேபியாவில் யாத்திரிகர்களுக்கு வழங்கும் ஹோட்டல் தங்குமிட வசதி, மக்கா ஹரம் சரீபுக்கும் தங்குமிடத்துக்கும் இடையிலான தூரம் என்பனவற்றை கவனத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படும் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.