கிராண்ட்பாஸ் விகாரையில் முஸ்லிம்களுக்கு  இப்தார் வழங்கி கெளரவித்த அஸ்சஜீ தேரர்

0 62

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“நாட்டில் சம­கா­லத்தில் இனம் மற்றும் மதங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையும் புரிந்­து­ணர்வும் நல்­லி­ணக்­கமும் மிகவும் அவ­சியம். அவை தவிர்க்க முடி­யா­தவை என்­பது உண­ரப்­பட்­டுள்­ளது.இப்தார் நிகழ்­வு­களில் அனைத்து மதங்­களைச் சேர்ந்­த­வர்­களும் கலந்து கொள்­வதன் மூலம் இஸ்­லாத்தின் புனிதத் தன்­மையை புரிந்து கொள்ள முடி­கி­றது” என கிரேண்ட்பாஸ் இசி­ப­தா­ன­ராமய விகா­ரா­தி­பதி அஸ்­சஜீ தேரர் தெரி­வித்தார்.

தர்­ம­சிறி மன்­றத்தின் தலை­வ­ரான அஸ்­சஜீ தேரர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இசி­ப­தான ராமய விகா­ரையில் இப்தார் நிகழ்­வொன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்தார். அந்த இப்தார் நிகழ்வில் பெளத்த, கிறிஸ்­தவ, இந்து மற்றும் இஸ்­லா­மிய மதத் தலை­வர்கள் பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். அஸ்­சஜீ தேரர் பல தசாப்த கால­மாக இசி­ப­தான ராமய விகா­ரையில் இன­நல்­லி­ணக்க நிகழ்­வு­களை நடத்தி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இப்தார் நிகழ்­வுக்­கான அழைப்­பி­தழில் ‘முத்­துக்­களை விட ஒற்­றுமை மதிப்பு மிக்­கது’ என குறிப்­பிட்­டி­ருந்­தமை வர­வேற்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­கழ்வில் அஸ்­சஜீ தேரர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் “ நாட்டு மக்கள் இன்று பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர் கொண்­டுள்­ளனர். பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் பாதிக்­கப்­பட்டு ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அவர்­க­ளது கோரிக்­கைகள் நியா­ய­மா­னதே. இவ்­வா­றான நல்­ல­வி­ட­யங்­க­ளுக்கு நாம­னை­வரும் ஒன்­று­ப­ட­வேண்டும்.

இசி­ப­தான ராமய விகா­ரையில் நான் நல்­லி­ணக்க மண்­ட­ப­மொன்­றினை நிர்­மா­ணித்து வரு­கிறேன். இந்த நல்­லி­ணக்க மண்­டபம் விரைவில் பூர்த்தி செய்­யப்­படும். அடுத்த வருட இப்தார் நிகழ்­வினை பாரிய அளவில் இம் மண்­ட­பத்தில் ஏற்­பாடு செய்­யத்­தீர்­மா­னித்­துள்ளேன். இந்த நல்­லி­ணக்க மண்­ட­பத்­துக்கு எந்த மதத்­த­வர்­களும் வர முடியும். தங்­க­ளது சமய கலா­சார நிகழ்­வு­களை இங்கு முன்­னெ­டுக்க முடியும்.நான் அனை­வ­ரையும் இங்கு வர­வேற்­கிறேன்

இங்கு ஏற்­பாடு செய்­யப்­பட்ட இப்தார் நிகழ்வு எமது நல்­லு­ற­வுக்கு முன்­னு­தா­ர­ண­மாகும். இது­போன்ற நிகழ்­வுகள் நாடெங்கும் நடாத்­தப்­பட வேண்டும். இப்­ப­குதி முஸ்­லிம்­க­ளுடன் எமக்கு புரிந்­து­ணர்வு இருக்­கி­றது. தொடர்­புகள் இருக்­கின்­றன. அத் தொடர்­புகள் இப்தார் நிகழ்­வினை நடத்­து­வதன் மூலம் மேலும் வலு­வ­டை­யு­மென நான் நம்­பு­கிறேன் என்றார்.
நிகழ்வில் அகில இலங்கை ஜம்­மிய்­யத்துல் உலமா சபையின் பிரதி செயலாளர் மெளலவி எம்.எஸ்.எம்.தாஸிம், ஸம்ஸம் பவுண்டேசனின் கல்விப்பிரிவின் பணிப்பாளர் அம்ஹர் ஹக்கம் தீன் உட்பட பல இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், பெளத்த, கிறிஸ்தவ, இந்து மதத் தலைவர்கள் என்போர் கலந்து கொண்டிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.