இளை­ஞர்­களே துப்­பாக்கி குண்­டு­க­ளுக்கு பயப்­ப­டா­தீர்

அஹிம்சை போராட்டத்திற்கு அழைக்கிறார் அம்ஹர் மௌலவி

0 395

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“இளை­ஞர்­களே துப்­பாக்கி குண்­டு­க­ளுக்குப் பயப்­ப­டா­தீர்கள். மதத்­த­லை­வர்கள் என்ற வகையில் நாம் அஹிம்சைப் போராட்­டத்தில் 24 மணி நேரமும் உங்­க­ளு­டனே இருப்போம். ஒன்­றி­ணைந்து தாய் நாட்டை மீட்­டெ­டுப்போம். ஜனா­தி­ப­தி­யையும் ஊழல் வாதி­க­ளையும் விரட்­டி­ய­டித்த பின்பே இவ்­வி­டத்­தி­லி­ருந்தும் வெளி­யே­றுவோம்” என ஸம்ஸம் பவுண்­டே­சனின் கல்விப் பிரி­வின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அம்ஹர் ஹக்­கம்தீன் தெரி­வித்தார்.

காலி முகத்­திடல் மக்கள் போராட்ட களத்தில் உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது; நாங்கள் இறு­தி­வரை உங்­க­ளிடம் இருப்போம் என்­பதை நான் ஆரம்­பத்­திலே உங்­க­ளுடன் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன். அத்­தோடு மதத்­த­லை­வர்கள் என்ற வகையில் இந்த ஊழல் பேர்­வ­ழி­க­ளான அர­சியல்வாதி­க­ளுக்கு எதி­ராக நாம் 24 மணி நேரமும் உங்­க­ளு­டனே இருப்போம். என்­ப­தையும் இச்­சந்­தர்ப்­பத்தில் தெரி­விக்­கிறேன்.

இவ்­வ­ரு­டத்தில் மக்கள் அனை­வரும் இன, மத பேதங்­க­ளின்றி ஒன்­றி­ணைந்து இருப்­பது ஒரே இலக்கை நோக்­கி­ய­தாகும். இலங்கை வர­லாற்றில் அனைத்து மதத்­த­வர்­களும், இனத்­த­வர்­களும் எவ்­வித பேதங்­க­ளு­மின்றி இங்கு கூடி­யி­ருப்­பது மகிழ்ச்­சிக்­கு­ரி­யது. இங்கு கூடி­யி­ருக்கும் இளைஞர், யுவ­திகள் இந்­நாட்டின் சுதந்­தி­ரத்தை இங்­கி­ருந்து ஆரம்­பித்­தி­ருக்­கி­றீர்கள். இந்­நாட்டின் முன்­னேற்­றத்­துக்கு எனது இளம் காலத்தைப் பயன்­ப­டுத்­தி­யுள்ளேன் என்று நீங்கள் என்றோ ஒரு நாள் நினைத்தால் அந்த மனத்­தி­ருப்தி மிகவும் பெறு­ம­தி­யா­ன­தாகும்.

இந்தப் போராட்டம் மனி­தா­பி­மானப் போராட்டம் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்­டி­ருக்கும் நிலையில் இந்த சர்­வா­தி­கார கொடிய ஆட்­சி­யா­ளர்கள் அமை­தி­யான போராட்­டக்­கா­ரர்கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­து­கி­றார்கள். நீங்கள் எம் மீது துப்­பாக்கிச் சூடு நடத்த வேண்­டு­மென்றால் ஒரு கோடி 20 இலட்சம் துப்­பாக்கி ரவை­களை எடுத்து வாருங்கள். மொத்த மக்கள் மீதும் துப்­பாக்கிச் சூடு நடத்­துங்கள். அவ்­வாறு இல்­லாது இந்த அமை­தி­யான போராட்­டத்தை முடி­வுக்குக் கொண்­டு­வர முடி­யாது. நிறுத்த முடி­யாது.

நீங்கள் கண்­டி­ருப்­பீர்கள் உங்­க­ளது கிரா­மங்­களில், நக­ரங்­களில் இறைச்­சிக்­க­டைகள் இருக்­கின்­றன. இறைச்­சிக்­க­டை­களின் முன்னால் நாய்கள் இருக்­கின்­றன. அந்த நாய்கள் அன்­பா­ன­வைகள் அல்ல. அவ்­வா­றான பொலிஸ் நாய்­களே துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­யுள்­ளனர். அந்த நாய்­க­ளுக்கு நாம் பய­மில்லை. எலும்­பு­களைச் சாப்­பிடும் நாய்கள் எத்­தனை வேண்­டு­மென்­றாலும் வள­ருங்கள். நாம் அவை­க­ளுக்குப் பயப்­ப­டப்­போ­வ­தில்லை.

நினைவில் வைத்துக் கொள்­ளுங்கள் நேர்­மை­யாக பணி­யாற்றும் பொலிஸ்காரர்­களும் இருக்­கி­றார்கள். அவ்­வா­றான நேர்­மை­யான அரச சேவை­யா­ளர்­க­ளான பொலி­ஸா­ருக்கு நாம் மரி­யாதை செலுத்­து­கிறோம் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் இரா­ணுவ உத்­தி­யோ­கத்­தர்கள் பலர், பல நாட்­க­ளாக நேர்­மை­யாக சேவை­யாற்றிக் கொண்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் மக்கள் அவர்கள் மீது பெரிதும் அன்பு வைத்­தி­ருக்­கி­றார்கள். மக்கள் உங்கள் மீது வைத்­தி­ருக்கும் அன்­பினை இல்­லாமற் செய்து கொள்­ளா­தீர்கள் என்று நான் இச்­சந்­தர்ப்­பத்தில் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன்.

இந்த மக்கள் எரி­வாயு சிலிண்டர் ஒன்றைக் கேட்டதற்­காக துப்­பாக்கிச் சூடு நடத்­து­வ­தென்றால், டீசல் கேட்டு போரா­டு­வ­தற்­காக சூடு நடத்­து­வ­தென்றால், எங்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­ய­டித்த பணத்தை திருப்பிக் கேட்டதற்­காக சூடு நடத்­து­வ­தென்றால் முழு சமு­தா­யத்­துக்கும் சூடு நடத்­துங்கள் என்றே நாம் கூறு­கிறோம். நாங்கள் எதற்கும் பயப்­பட மாட்டோம். எமது போராட்­டத்தை நாம் அஹிம்சை வழியில் தொடர்ந்தும் முன்­னெ­டுப்போம். அதனால் இளை­ஞர்கள் அஹிம்சைப் போராட்­டத்­துக்­காக மேலும் மேலும் ஒன்­றி­ணை­யுங்கள். எதற்கும் பயப்­ப­ட­வேண்டாம். எமக்­கெ­தி­ராக சூழ்ச்­சி­களை இர­க­சி­ய­மாக முன்­னெ­டுத்து வரு­கி­றார்கள். இந்த மிலேச்­சத்­த­ன­மான செயலை முன்­னெ­டுத்த அதி­கா­ரிக்கு நாம் நிச்சயம் தண்­டனை பெற்­றுக்­கொ­டுப்போம்.

துப்­பாக்கிச் சூடு நடாத்­திய அந்த அதி­கா­ரிக்கு இந்த நீதிக்­கட்­ட­மைப்பில் விடு­தலை, சுதந்­திரம் வழங்­கப்­பட்­டாலும் அவர்­க­ளது மனச்­சாட்சி சுதந்­திரம் அளிக்­காது. அந்த மனச்­சாட்சி அவர்கள் இறக்கும் வரை வேத­னை­ய­ளித்துக்கொண்டிருக்கும்.
அன்­பான இளை­ஞர்­களே நாம் எமது தாய் நாட்டை மீட்­டெ­டுக்­கவே இந்தப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ளோம். நாம் எவ­ரதும் பிர­தி­ப­லனை எதிர்­பார்த்து இந்தப் போராட்­டத்தில் இறங்­க­வில்லை.

வரி­சை­களில் காத்­தி­ருந்து பெட்ரோல் பெற்­றுக்­கொண்டு வாக­னங்­களில் இங்கு வந்து சேரு­வது எவ­ரி­ட­மி­ருந்தும் வரப்­பி­ர­சா­தங்­களை எதிர்­பார்த்­தல்ல. இந்தப் போராட்­டத்தை எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் கைவிட்டு விடா­தீர்கள். எமது தாய் நாட்­டிற்­காக, எமக்­கி­டை­யி­லான நல்­லு­ற­வுக்­காக நாம் எமது உயிரைப் பலி கொடுத்­தேனும் உங்­க­ளுடன் தொடர்ந்தும் இருப்போம்.

இந்தப் போராட்­டத்தை ஊழல்­வா­தி­க­ளான ஆட்­சி­யா­ளர்கள் திசை திருப்­பு­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­ப­டு­கி­றார்கள். அதற்­கான தேவை அவர்­க­ளுக்­கி­ருக்­கி­றது. அவர்கள் சூழ்ச்சி செய்­கி­றார்கள். இந்தச் சூழ்ச்­சி­யி­லி­ருந்தும் எம்மை நாம் பாது­காத்­துக்­கொள்ள வேண்டும். இளை­ஞர்­க­ளான நீங்கள் உங்­க­ளது பணம், உங்­க­ளது நேரம், உங்­க­ளது ஆளுமை அனைத்­தையும் எமது தாய் நாட்­டுக்­காக தொடர்ந்தும் பயன்­ப­டுத்­துங்கள்.
போராட்டம் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. உங்­க­ளது பய­ணத்தைத் தொட­ருங்கள். இளை­ஞர்­களே ஒரு­போதும் பின்­வாங்­கா­தீர்கள். ஒரு தேசிய சமூ­க­மாக, ஒன்­றி­ணைந்த சமூ­க­மாக எழுந்­தி­ருப்­ப­தற்கு எமக்குக் கிடைத்­துள்ள இறுதிச் சந்­தர்ப்பம் இது­வாகும்.
பசி, தூக்கம் என்­ப­வற்­றை­யெல்லாம் துறந்து நாங்கள் இங்கு வந்­தி­ருப்­பது எமது தாய்­நாட்டை நெருக்­க­டி­யி­லி­ருந்தும் மீட்டு எடுப்­ப­தற்­காகும். அதனால் நாடெங்கும் உள்ள இளைஞர் யுவ­திகள் இந்தப் போராட்­டத்தில் பங்கு கொள்­ளுங்கள்.

அவர்­க­ளது துப்­பாக்கிச் சூட்­டு­க­ளுக்குப் பயப்­ப­டா­தீர்கள். எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் முன்­வைத்த காலை பின் வைக்­கா­தீர்கள். தாய் நாட்டுக்காக வீர இளைஞர் ஒருவர் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளதை மறந்து விடாதீர்கள்.

ஆட்சியாளர்களின் சூழ்ச்சிக்கு நாம் அகப்படப் போவதில்லை. இந்தப் போராட்டத்தை மிலேச்சத்தனமாக மாற்றிக் கொள்ளப் போவதுமில்லை. நாம் பின்னடைந்தால் மிலேச்சத்தனமான பொலிஸ் அதிகாரியின் கொடிய செயலுக்கு நாம் பயந்தவர்களாகி விட்டதாக கருதப்படுவோம்.

எதற்கும், ஒருபோதும் பயப்படாதீர்கள். அதனால் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். இந்த ஜனாதிபதியையும், அனைத்து ஊழல்வாதிகளையும் விரட்டியடிப்போம். அவர்களை விரட்டியடித்தபின்பே இந்த இடத்திலிருந்தும் வெளியேறுவோம் என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.